QuoteBhagavad Gita is a world heritage which has been enlightening generations across the world since thousands of years: PM
QuoteGita teaches us harmony and brotherhood, says PM Modi
QuoteGita is not only a ‘Dharma Granth’ but also a ‘Jeevan Granth’: PM Modi

புதுதில்லியில் உள்ள இந்திய கலாச்சாரம் போற்றும் மையமான இஸ்கானில் நடைபெற்ற கீதா ஆராதனை மகோத்சவ் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

இஸ்கான் பக்தர்களால் உருவாக்கப்பட்ட ஒப்பில்லாத பகவத் கீதை பெருநூலினை அவர் திறந்து வைத்தார். இந்த நூல் 2.8 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையும் கொண்டதாகும்.

|

இந்த விழாவில் பங்கேற்றோரிடையே உரையாற்றிய பிரதமர், பிரமாண்டமான பகவத் கீதை நூலினை திறந்து வைக்கும் இந்த விழா உண்மையிலேயே சிறப்பு மிக்கதாகும். இந்த ஒப்பிலாதப் புத்தகம் உலகிற்கு இந்திய ஞானத்தின் அடையாளமாக இருக்கும் என்றார். லோகமான்ய திலகர் சிறையில் இருந்த போது எழுதிய “கீதை ரகசியம்” பற்றி நினைவு கூர்ந்த பிரதமர், கிருஷ்ண பகவானின் நிஷ்கம் கர்மா தத்துவத்தை எளிய முறையில் இதில் விளக்கியிருக்கிறார் என்றார். “காந்தியின் பார்வையில், பகவத் கீதை” என்ற நூல் பற்றியும் அவர் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்குத் தம்மால் இந்தப் புத்தகத்தின் பிரதி வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

|

 

இந்த இதிகாசம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஸ்ரீல பக்தி வேதாந்த பிரபுபாதா அவர்களின் முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார்.

|

வாழ்க்கையில் ஊசலாட்டம் ஏற்படும் போது, பகவத் கீதை எப்போதும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மனிதகுல எதிரிகளுக்கு எதிராக நாம் போரிடுவதால் தெய்வீக சக்தி எப்போதும் நம்முடன் இருக்கும் என்ற கீதையின் புகழ்மிக்க வாசகத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். மக்களுக்கும் தேசத்திற்கும் சேவை செய்ய கீதை ஒவ்வொருவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

|

மனிதகுலம் சந்திக்கின்ற பல பிரச்சினைகளுக்கு இந்தியாட தத்துவங்களும் பண்பாடும் தீர்வுகளை அளிக்கின்றன என்று பிரதமர் தெரிவித்தார். இந்தச் சூழலில் அவர், யோகா பற்றியும் ஆயுர்வேதம் பற்றியும் குறிப்பிட்டார்.

|

 

 

Click here to read PM's speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Developing India’s semiconductor workforce: From chip design to manufacturing excellence

Media Coverage

Developing India’s semiconductor workforce: From chip design to manufacturing excellence
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 23, 2025
May 23, 2025

Citizens Appreciate India’s Economic Boom: PM Modi’s Leadership Fuels Exports, Jobs, and Regional Prosperity