Shri Narendra Modi campaigns in Srinagar & Pithoragarh districts of Uttarakhand
Congress has turned ‘Dev Bhoomi’ into “Loot Bhoomi: Shri Modi
Samajwadi party & Congress ruined Uttarakhand. They played with aspirations of people here: PM
Dev Bhoomi can attract tourists from all over the country. This land has so much potential for tourism sector to flourish: PM
Congress did not even note the difficulties our ex-servicemen faced: PM Modi
Why development projects are stalled in Uttarakhand? This has badly hit progress of the state: PM

உத்தராகண்ட் மாநிலத்தில் ஸ்ரீநகர் மற்றும் பித்தோரகரில் பொதுக் கூட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு. மோடி உத்தராகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் திரு. அடல்பிகாரி வாஜ்பாயி பங்களிப்பை நினைவுகூர்ந்தார். ``அடல்ஜி மூன்று மாநிலங்களை - சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் & உத்தராகண்ட் மாநிலங்களை - உருவாக்கினார். சத்தீஸ்கர் & ஜார்க்கண்ட் மாநிலங்கள் பா.ஜ.க. ஆட்சியில் முன்னேறியுள்ளன'' என்று அவர் கூறினார். ``உத்தராகண்ட்டை ஒரு மாநிலமாக உருவாக்குவதை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது? இங்குள்ள மக்களுக்கு நல்லதை நினைக்காதவர்கள், எப்படி இங்கே ஆட்சி செய்யலாம்?'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகள் மீது குறைகூறிய பிரதமர், ``சமாஜ்வாதி கட்சி & காங்கிரஸ் கட்சி உத்தராகண்ட் மாநிலத்தை அழித்துவிட்டன. இங்குள்ள மக்களின் விருப்பங்களுடன் அந்தக் கட்சிகள் விளையாடிவிட்டன'' என்று குறிப்பிட்டார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுலாவுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றிப் பேசிய பிரதமர் திரு மோடி, ``நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள் தேவபூமியில் உள்ளன. சுற்றுலாத் துறை செழிப்புறுவதற்கு இங்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன'' என்று கூறினார்.

இறைவனின் உறைவிடமாக கருதப்படும் நான்கு புனித இடங்களை (சார் தாம்) நல்ல சாலைகள் கொண்டு இணைப்பதற்கு மத்திய அரசு ரூ.12,000 கோடி ஒதுக்கியுள்ளது என்று திரு. மோடி தெரிவித்தார். ``அனைத்து வானிலைகளிலும் நன்றாக இருக்கும் சாலைகள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் உத்தராகண்ட்டை இணைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். சார் தாமிற்காக நாங்கள் ரூ.12,000 கோடி ஒதுக்கியுள்ளோம்'' என்று அவர் கூறினார்.

ராணுவத்தினருக்கு முந்தைய அரசு எதையும் செய்யவில்லை என்று திரு. மோடி குறிப்பிட்டார். ``முன்னாள் ராணுவத்தினர் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றி காங்கிரஸ் கவனித்ததுகூட இல்லை! நாட்டுக்காக போரிட்டவர்களால் அதை எப்படி ஏற்க முடியும்?'' என்று மோடி கேள்வி எழுப்பினார். ``ஒரு பதவியில் இருந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் என்ற திட்டத்தை காங்கிரஸ் கேலிக்குரியதாக்கிவிட்டது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது'' என்று அவர் கூறினார்.

70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்துவிட்டது என்று மோடி கூறினார். ஊழலுக்கு எதிராக தாம் தொடர்ந்து போராடி வருவதாகவும் குறிப்பிட்டார். ``ஊழலுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கினோம். சிலபேர் அதன் பாதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் விட்டுவைக்கப்பட மாட்டார்கள்'' என்று பிரதமர் கூறினார். ``ஏழைகளுக்கு நன்மை தரக் கூடிய முடிவுகளை எடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டோம். எல்லா சிரமங்களையும் எதிர்கொள்வோம். ஆனால் ஏழைகளின் விருப்பங்களுடன் விளையாட யாரையும் அனுமதிக்க மாட்டோம்'' என்று திரு. மோடி கூறினார்.

உத்தராகண்ட் மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அளிப்பதற்கு தமது அரசு அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாக பிரதமர்  திரு. மோடி குறிப்பிட்டார்.  ``ஏழைகளுக்கு சேவை செய்வதை எங்கள் அரசு அர்ப்பணிப்பாக எடுத்துக் கொண்டுள்ளது. ஏழைகளுக்கு நாங்கள் சமையல் எரிவாயு அளித்து வருகிறோம். இதனால் ஏராளமான கிராமப்புற மக்கள் பயன் அடைந்துள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்துக்கு வளர்ச்சி தேவை; ஆனால் இப்போதுள்ள மாநில அரசு அதற்காக எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி கூறினார். ``சிலர் ஹர்டா வரி பற்றி பேசுவதைக் கேட்டு ஆச்சரியமாக உள்ளது! ஆனால் ஏன் வளர்ச்சித் திட்டங்கள் தடுக்கப்படுகின்றன? இது மாநிலத்தின் வளர்ச்சியை மோசமாகப் பாதித்துள்ளது'' என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பா.ஜ.க தொண்டர்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Shri Narendra Modi campaigns in Srinagar & Pithoragarh districts of Uttarakhand
Congress has turned ‘Dev Bhoomi’ into “Loot Bhoomi: Shri Modi
Samajwadi party & Congress ruined Uttarakhand. They played with aspirations of people here: PM
Dev Bhoomi can attract tourists from all over the country. This land has so much potential for tourism sector to flourish: PM
Congress did not even note the difficulties our ex-servicemen faced: PM Modi
Why development projects are stalled in Uttarakhand? This has badly hit progress of the state: PM

Prime Minister Shri Narendra Modi addressed public rallies in Srinagar and Pithoragarh in Uttarakhand today.

Addressing the rally PM Modi recalled former PM Atal Bihari Vajpayee’s contribution in the formation of Uttarakhand. He said, “Atal ji created three states - Chhattisgarh, Jharkhand & Uttarakhand. Both Chhattisgarh & Jharkhand have progressed under BJP.” He further added, “Why did Congress oppose creation of Uttarakhand as a state? Those who cannot think well of the people here, how can they govern?”

Taking a dig at the opposition parties PM said, “Samajwadi party & Congress ruined Uttarakhand. They played with aspirations of people here.”

Talking about the scope of tourism in Uttarakhand, PM Modi said, “Dev Bhoomi can attract tourists from all over the country. This land has so much potential for tourism sector to flourish.”

Shri Modi also said that Govt at the Centre has allotted Rs.12, 000 crores for connecting Char Dham with better roads. He added, “We want Uttarakhand to be connected with the entire country with all-weather roads. We have allotted Rs.12,000 crore for Char Dham.”

The Prime Minister opined that development of Uttarakhand  and its economy was of utmost importance for his government, “Whenever one thinks of Yoga, he or she recalls Haridwar & Rishikesh. We'll give impetus to the sector by developing proper infrastructure.” He further said, “World is moving towards holistic healthcare. Uttarakhand has much potential to contribute to this sector.”

Shri Modi mentioned that the previous govt did not do anything for our servicemen. The PM said, “Congress did not even note the difficulties our ex-servicemen faced! How can that be accepted for those who fought for the Nation?”  He further added, “The Congress made mockery of One Rank, One Pension scheme. It was only after we assumed office, the scheme was implemented.”

PM Modi stressed Congress has looted the country for 70 years and he is continuously fighting against corruption. “We initiated strong steps against corruption & a few people are feeling its heat. Those who have looted the nation won't be spared,” said the PM. “Would not step back in taking decisions that benefit poor. Will face every difficulty but won't let anyone play with aspirations of poor,” added PM Modi.

PM Modi remarked that his govt is dedicated to giving a better life to the people of Uttarakhand . “Our Government is devoted to serve the poor. We are providing gas connections to poor. This has benefited several rural households,” He said.

PM Modi stressed that Uttarakhand needs development but the current state govt is not doing anything regarding that, “Am surprised that a few speak about Harda tax! But why are development projects stalled? This has badly hit progress of the state,” he added.

Several BJP karyakartas and leaders attended the event.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'Under PM Narendra Modi's guidance, para-sports is getting much-needed recognition,' says Praveen Kumar

Media Coverage

'Under PM Narendra Modi's guidance, para-sports is getting much-needed recognition,' says Praveen Kumar
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister remembers Rani Velu Nachiyar on her birth anniversary
January 03, 2025

The Prime Minister, Shri Narendra Modi remembered the courageous Rani Velu Nachiyar on her birth anniversary today. Shri Modi remarked that she waged a heroic fight against colonial rule, showing unparalleled valour and strategic brilliance.

In a post on X, Shri Modi wrote:

"Remembering the courageous Rani Velu Nachiyar on her birth anniversary! She waged a heroic fight against colonial rule, showing unparalleled valour and strategic brilliance. She inspired generations to stand against oppression and fight for freedom. Her role in furthering women empowerment is also widely appreciated."