- 2017 ஆம் ஆண்டு மத்தியில் குஜராத், ராஜஸ்தான், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தினால், உயிரிழப்புகள், கால்நடை இழப்புகள் மற்றும் பொருட்சேதம் ஆகியவை ஏற்பட்டுள்ளன, வெள்ளம் குறித்த தகவலை அறிந்ததுமே, சம்பந்தப்பட்ட மத்திய ஏஜென்சிகள் மற்றும் மாநில துறைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பிரதமர் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்தார்.
- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை போக்குவதற்கான வழிமுறைகளை மறுஆய்வு செய்தார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் உயர் மட்ட கூட்டம் நடத்திய அவர், மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என தெரிவித்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்து போது அங்கு ஏற்பட்ட மிக பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு மிகப்பெரிய அளவில் மறுவாழ்வு பணிகளை அவர் மேற்கொண்டு, அங்கிருந்த மாநில பேரிடர் நிர்வாக அமைப்பை சிறப்பாக செயல்பட வைத்தார். 2001-ல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் புஜ் நகரம் முற்றிலும் அழிந்தது. அந்த சமயத்தில் புதிதாக பதவி ஏற்றிருந்த மோடி, தன்னுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் அந்த நகருக்கு மிக விரைவாக புத்துயிர் ஊட்டினார். முதலமைச்சராக இருந்த போது குஜராத் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அவர் நேரிடையாக உத்திராகண்டில் உள்ள கேதார் பள்ளதாக்கு சென்றார். அவர் செயல்படும் விதம் பலராலும் பாராட்டப்பட்டது.
- முதலமைச்சராக இருந்த போது இயற்கை பேரிடர்களை கையாள்வதில்,அவருக்கு ஏற்பட்ட மிகுதியான அனுபவங்கள், நாட்டில் பலவேறு பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை கையாள்வதில் உதவியாக இருந்து வருகிறது. 2014-ல் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளம் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நிலைமையை மதிப்பிட்டு, வெள்ளத்தை “தேசிய அளவிலான பேரிடர்” என அறிவித்து வெள்ள நிவாரணம் மற்றும் பிராந்தியங்களை மறுசீரமைக்க கூடுதலாக 1000 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்தார். தகுந்த நேரத்தில் விரைவாக ராணுவத்தை பணியில் ஈடுபடுத்தி நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது பல உயிர்களை காத்தது.
- ஒரு மாநிலம் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்படும் போது, அங்கே இயல்பு நிலை மீண்டும் ஏற்பட தேவையான அமைப்புகளை பணியில் விரவில் ஈடுபடுத்தி பேரிடர்களை செயல்திறனுடன் சமாளிக்கும் முறையை பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் கடைபிடித்து வருகிறார். 2015-ல் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது, பிரதமர் உடனடியாக நிலைமையை கண்காணித்தார். சென்னையை அடையும் சாலை வழிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவர்களுடன் சென்னை கடற்கரையில் கடற்படையில் ஐராவத் கப்பல் உடனடியாக நிறுத்தப்பட்டது.
- நேபாளத்தில் 2015 மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட போது, இந்தியா தாம் முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இருந்தது. பேரிடரில் உதவி புரிந்து ராஜீய உறவை வலுப்படுத்தும் முறையை கடைபிடித்த மோதி, இந்திய துணை கண்டத்தில் இந்தியாவின் சகதி வாய்ந்த தலைவர் என்பதை பிரதமர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார். தேசிய பேரிடர் நிர்வாக குழுவுடன் டன் கணக்கான நிவாரண பொருட்களும் உபகரணங்களும் அங்கு அனுப்பப்பட்டன. நேபாளத்திற்கு இந்தியா அளித்த உதவிக்கு உலகளவில் பாராட்டு கிடைத்தது. நேபாளத்தில் சிக்கியிருந்த இஸ்ரேல் நாட்டவர்களை மீட்க இந்திய மண்ணில் விமானத்தை தரையிறக்க உதவியதற்கு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெடென்யாஹு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். பருவநிலை மாற்றம், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் போன்று பூமியில் பொதுவாக நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு நாடுகள்- மாநிலங்களுடன் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்படுத்த ராஜீய அளவில் நடவடிக்கை எடுக்க பிரதமர் முயற்சி செய்கிறார்.
- பேரிடர் தொடர்பான முக்கிய தகவல்களை வழங்கும் இஸ்ரோவின் செயற்கோளை செலுத்துவதற்கு தலைமை தாங்கி பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக திகழ்ந்துள்ளார். அண்டை நாடுகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய பரிசான இந்த செயற்கை கோளை 7 SAARC நாடுகளின் தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.
- பருவ நிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பூமியில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்த பேரிடரை சந்திக்க தயார் நிலையை இருத்தல் மற்றும் இடர் நீக்கும் நடவடிக்கைகள் இரு தவிர்க்க முடியாதவைகளாகும். வேகமாக நகரமயமாக்கல் செய்யும் போது ஏற்படுத்தும் தவறுகளை இந்த பேரிடர் சுட்டிக்காட்டுகிறது. பேரிடர் குறைப்பிற்கான செண்டாய் செயல்முறை திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேரிடரை குறைக்க உலக அளவில் அமைப்பட்டுள்ள தரநிலைகளுக்கு ஏற்ப இந்தியாவின் நகரமயமாக்கல் திட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார்.
- ஆட்சியின் பல்வேறு நிலைகளில் பேரிடர் தொடர்பாக வரும் சவால்களை சமாளிக்க ஒரு ஒருங்கிணந்த நடைமுறை இந்தியாவின் கட்டமைப்பில் இல்லாமல் இருந்தது. திட்டமிடுவதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, எந்த விதமான சூழ்நிலையையும் சமாளிக்கும் தேசிய பேரிடர் நிர்வாக திட்டத்தை முதன் முதலில் ஏற்படுத்தினார். செண்டாய் செயல்முறை திட்டத்தின் படி ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பேரிடர் நிர்வாக திட்டம், பேரிடர் நிர்வாகம் தொடர்பான அனைத்து நிலைகளிலும் உள்ள பணிகளை ஒன்றிணைப்பதாக உள்ளது.
- 2016 நவம்பர் மாதம் புதுதில்லியில் முதல் முறையாக பேரிடர் குறைப்பு தொடர்பாக நடைபெற்ற ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, செண்டாய் செயல்முறை திட்டத்தில் கூறப்பட்டுள்ளதை அமல்படுத்தும் 10 அம்ச செயல் திட்டம் ஒன்றை வகுத்தார். பேரிடர் நிர்வாகத்தில் பெருமளவில் பெண்களை ஏடுபத்த வேண்டும் என அதைல் கூறப்பட்டதுடன் பேரிடர்களை சமாளிக்க நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
- வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ள இந்தியா, பேரிடர்களை தடுக்கவும் சுற்றுசூழலை பாதிக்காத கட்டமைப்பை ஏற்படுத்தவும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் அடிக்கடி ஏற்படும் பேரிடர் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு அவலை அளிக்ககூடியதாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா, செண்டாய் செயல்முறை திட்டத்தில் பேரிடர்களை குறைத்து சிறந்த பலன்களை அடைய வகை செய்யும் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூரில் இருந்து உலகளாவிய அளவில், பேரிடர் நிர்வாகம், இடர் தடுப்பு, நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கான வளர்ச்சி திட்டத்தை இந்தியா ஏற்படுத்தி வருகிறது.