பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மேதகு அன்டோனியோ குட்டெரஸ் உடன் தொலைபேசியில் உரையாடினார்.
காங்கோவில் ஐ.நா. தூதரகத்தின் மீது சமீபத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு இந்திய அமைதி காக்கும் வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அங்கு இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த, விரைவான விசாரணைகளை உறுதி செய்யுமாறு ஐ.நா பொதுச்செயலாளரை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐ.நா. அமைதி காக்கும் பணியில் இந்தியாவின் உறுதியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இதுவரை 2,50,000க்கும் மேற்பட்ட இந்திய அமைதிப்படையினர் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளின் கீழ் பணியாற்றியுள்ளதையும், 177 இந்திய அமைதி காக்கும் படையினர் பணியின்போது உயிர்த் தியாகம் செய்துள்ளதையும், இது மற்ற நாட்டு வீரர்களின் தியாகத்தை விட மிகப்பெரியது என்றும் அவர் கூறினார்.
வீரமரணம் அடைந்த இரு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கும், அரசு மற்றும் இந்திய மக்களுக்கும் ஐநா பொதுச் செயலாளர் தனது இரங்கலைத் தெரிவித்தார். தாக்குதலுக்கு தனது தெளிவான கண்டனத்தை அவர் மீண்டும் தெரிவித்ததுடன், விரைவான விசாரணைகளை நடத்துவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வதாக உறுதியளித்தார்.