QuoteI congratulate all those who will be voting for the first time in the 2019 Parliamentary polls. Those born in the 21st century are now going to be voters and thus, they will play a role in shaping India's progress: PM
QuoteOur friends in the Congress see things in two time periods. BC- Before Congress, when nothing happened. AD- After dynasty- where everything happened: PM
QuoteIndia is seeing remarkable progress in the last four years. In all spheres, investment, steel sector, start ups, milk and agriculture, aviation, India's progress is outstanding: PM

மக்களவையில் குடியரத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (07.02.2019) பதிலளித்தார். விவாதத்தின் வீரியத்தைக் கூட்டியதற்காகவும், உள்ளார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்காகவும் அவர் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் ஊழலுக்கு எதிராகவும், வளர்ச்சியை விரைவுபடுத்தவும் இந்திய மக்களுக்காகப் பாடுபடுகிறது இந்த அரசு” என்று பிரதமர் தனது உரையைத் துவக்கினார்.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். அன்னிய நேரடி முதலீடு முதல் எஃகுத் துறை வரை, புதிதாக துவக்கப்பட்ட நிறுவனங்கள், பால் மற்றும் வேளாண்மை, விண்வெளித் துறை போன்றவற்றில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. “உலகிலேயே 2-வது பெரிய எஃகு உற்பத்தியாளராகவும், 2-வது பெரிய செல்லிடப்பேசி உற்பத்தியாளராகவும், 4-வது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளராகவும் நாம் விளங்குகிறோம். வேளாண் உற்பத்தி அதிக அளவில் இருக்கும் நாடாக இருக்கிறோம்” என்று மேலும் கூறினார்.

தனது அரசின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், கடந்த 55 ஆண்டுகளில் எட்டப்படாத சாதனைகளை தனது அரசு கடந்த 55 மாதங்களில் எளிதாக எட்டியிருப்பதாகக் கூறினார். “துப்புரவு விகிதம் 98 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது. நமது மக்களுக்காக சுமார் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 55 ஆண்டுகளில் 12 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் தரப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 55 மாதங்களில் மட்டும் 13 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் தரப்பட்டன. இதில் 6 கோடி உஜ்வாலா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டது. செய்யப்பட்ட பணியின் வேகத்தையும், இந்தப் பணி யாருக்காக செய்யப்பட்டது என்பதையும் வைத்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அறுதிப் பெரும்பான்மை உள்ள அரசால் என்ன செய்ய முடியும் என்பதையும், இந்த அரசு என்ன செய்திருக்கிறது என்பதையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் “மகாமிலவத்”-ஐ விரும்பவில்லை என்றும், அது வெற்றிகரமாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

தன்னை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், ஆனால் அப்படி செய்யும் போது நாட்டை விமர்சிக்கக் கூடாது என்று பிரதமர் உறுதிபடக் கூறினார்.

ஊழலைப் பற்றி கடுமையாக பேசிய பிரதமர், ஊழல் செய்பவர்களைத் தண்டிக்க தனது அரசு ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பினாமி சட்டத்தை தனது அரசு செயல்படுத்தி வருவதாகவும், தற்போது பினாமி சொத்துக்களை வைத்திருப்போர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ரபேல் பேர ஒப்பந்தம் பற்றி பேசுகையில், இது தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் விரிவாக பதிலளித்திருப்பதாகவும், இந்த சர்ச்சையைக் கிளப்புபவர்கள் கையூட்டு இல்லாமல் எந்த பாதுகாப்பு ஒப்பந்த பேரத்தையும் முடிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வாராக்கடன்கள் பற்றி குறிப்பிட்ட அவர், முந்தைய அரசுகள் ஒரு மரபை விட்டுச் சென்றிருக்கின்றன என்றும், நாட்டை விட்டு தப்பியோடியவர்கள் தற்போது டுவிட்டரில் புலம்பிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். “நான் ரூ.7800 கோடி எடுத்துக் கொண்டுள்ளேன் என்று சொல்கிறார்கள், ஆனால், அரசு ரூ.13,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது” என்றார்.

நிதியுதவி விவரங்களை அரசு கேட்டபோது, சுமார் 20,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தமது பணிகளை நிறுத்திக் கொண்டன என்றும், இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அனைவருக்கும் வாழ்வை எளிதாக்குவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடினமாக உழைத்து வருவதை விவரித்த பிரதமர், முந்தைய அரசுகளுடன் ஒப்பிடும் போது விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் தனது உறுதியை எடுத்துரைத்த பிரதமர், மருந்துகள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, போக்குவரத்துத் துறையில் அதிக அளவிலான வேலைவாய்ப்பு வளர்ச்சி இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில், 6 லட்சத்திற்கும் அதிகமான புதிய தொழில் வல்லுனர்கள் பணியில் சேர்ந்திருப்பதாகவும் மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். செப்டம்பர் 2017 முதல் நவம்பர் 2018 வரையிலான 15 மாதங்களில், ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் 1.8 கோடிக்கும் அதிகமானோர் இணைந்திருப்பது பற்றியும், இதில் 64 சதவீதத்தினர் 28 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார். 1.2 கோடிக்கும் அதிகமானோர் தேசிய ஓய்வூதியத் திட்டம் அல்லது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது உலக அரங்கில் இந்தியாவை முன்னணியில் நிறுத்தியிருப்பதாகவும், இந்தியா என்ன சொல்கிறது என்பதை உலக மக்கள் கவனிப்பதாகவும் பிரதமர் கூறினார். பாரீஸ் உடன்படிக்கையை இறுதி செய்யும் முன்பு உலகின் முன்னணித் தலைவர்கள் இந்தியாவிடம் பேசினார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தியா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துடனும், சவுதி அரேபியா மற்றும் ஈரானுடனும் நட்பு பாராட்டும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

“21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் தற்போது வாக்களிக்கப் போகிறார்கள், இந்தியாவின் வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றப் போகிறார்கள்” என்று இந்தியாவின் வளர்ச்சியில் அடுத்த தலைமுறையின் பங்கு பற்றி புகழ்ந்துரைத்தார்.
தனது அரசு இந்திய மக்களின் விருப்பங்களை எப்போதும் நிறைவேற்றும் என்று கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Operation Sindoor: A fitting blow to Pakistan, the global epicentre of terror

Media Coverage

Operation Sindoor: A fitting blow to Pakistan, the global epicentre of terror
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Haryana Chief Minister meets Prime Minister
May 21, 2025

The Chief Minister of Haryana, Shri Nayab Singh Saini met the Prime Minister, Shri Narendra Modi today.

The Prime Minister’s Office handle posted on X:

“Chief Minister of Haryana, Shri @NayabSainiBJP, met Prime Minister @narendramodi. @cmohry”