கிர்கிஸ் குடியரசின் அதிபரும், எனது நண்பருமான மாண்புமிகு சோரோன்பே ஜின்பெக்கோவ் அவர்களே,
பெரியோர்களே, தாய்மார்களே,
எனக்கும், எனது தூதுக்குழுவினருக்கும் அன்பான வரவேற்பு அளித்த அதிபர் ஜின்பெக்கோவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதனை படைத்துள்ள கிர்கிஸ்தானை நான் வாழ்த்துகிறேன். இயற்கை அழகு, வலுவான ஜனநாயகம், திறமையான மக்கள் ஆகியவற்றைக் கொண்ட இந்த நாடு, எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்கும். இந்திய மக்கள் மீது கிர்கிஸ் மக்கள் கொண்டுள்ள நட்பு மனதை நெகிழச் செய்வதாக இருக்கிறது. கடந்த முறை பயணத்தைப் போலவே இந்த முறையும் நான் இதனைத் தாயகம் போல உணர்கிறேன்.
மாண்புமிகு அதிபர் அவர்களே,
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்கு வெற்றிகரமான தலைமையைத் தந்த தங்களை நான் பாராட்டுகிறேன். உங்கள் தலைமையின் கீழ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சென்ற மாதம் புதுதில்லியில் எனது பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்தீர்கள். உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
நண்பர்களே,
இன்று நாங்கள் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தையும், இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தையும் செய்திருக்கிறோம். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் ஐந்தாண்டு கால திட்டத்தை வகுக்கவும், நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறோம். வணிகர்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இந்தியா-கிர்கிஸ் வணிக அமைப்பை நானும், அதிபர் ஜின்பெக்கோவும் இணைந்து இன்று தொடங்கியிருக்கிறோம். இந்த ஆண்டு பிஷ்கெக்கில் ‘நமஸ்கார் ஈராசியா’ என்ற பெயரில் இந்திய வர்த்தகக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. கிர்கிஸ் குடியரசில் உள்ள கட்டுமானம், ரயில்வே, புனல் மின் திட்டம், சுரங்கங்கள் மற்றும் பிற துறைகளில் உள்ள வாய்ப்புகள் பற்றி இந்திய நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கிர்கிஸ் குடியரசின் வளர்ச்சிக்கான தேவைகளை எதிர்கொள்ள 20 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கான சலுகைக் கடன் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கிர்கிஸ் குடியரசில் இந்தியா-கிர்கிஸ் கூட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் பலவற்றை அறிமுகம் செய்ய இந்த நிதி உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் மற்றுமுள்ள மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையேயான சிறந்த போக்குவரத்துத் தொடர்பு இருதரப்பு வணிகத்திற்கும், முதலீட்டிற்கும், மக்களோடு மக்கள் தொடர்பு கொள்ளவும் வழிவகுக்கும்.
நண்பர்களே,
பிஷ்கெக்கில் இந்தியாவும், கிர்கிசும் இணைந்து ஜவுளிக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளன. இதனை ஆர்வத்துடன் பார்வையிட்டவர்கள் இந்தியா- கிர்கிஸ்தான் இடையேயான ஜவுளிப் பாரம்பரியத்தின் ஒற்றுமையைக் கண்டு வியப்படைந்தனர். மலைகளின் சூழல் பாதுகாப்பு, பசுமை சுற்றுலா, பனிச்சிறுத்தை பாதுகாப்பு போன்றவற்றிலும் இந்தியாவும், கிர்கிஸ் குடியரசும் இணைந்து செயல்பட முடியும்.
2021 ஆம் ஆண்டினை கிர்கிஸ் குடியரசுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கலாச்சார மற்றும் நட்புறவு ஆண்டாகக் கொண்டாடுவதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்க நான் மகிழ்ச்சி அடைகிறேன். மாண்புமிகு அதிபருக்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தியாவிற்கு வருமாறு உங்களை நான் அழைக்கிறேன். இந்தியாவில் உங்களை வரவேற்பது எங்களுக்குப் பெரும் கவுரவமாக இருக்கும்.
நன்றி
Strategic partners for a better future.
— PMO India (@PMOIndia) June 14, 2019
Significant outcomes from the talks between PM @narendramodi and President Jeenbekov that will benefit India-Kyrgyzstan relations. pic.twitter.com/rUyvWY4fhs
भारत और Kyrgyz Republic जैसे लोकतान्त्रिक और विविधता भरे समाजों को आज आतंकवाद से सबसे बड़ा खतरा है। हम आतंकवाद और कट्टरवाद के समाधान के लिए एकजुट हैं। आतंकवाद के प्रायोजकों को जवाबदेह ठहराना होगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 14, 2019
पूरी दुनिया को यह संदेश देने की जरूरत है कि आतंकवाद को किसी भी तरीके से उचित नहीं माना जा सकता: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 14, 2019
मुझे घोषणा करते हुए प्रसन्नता है कि वर्ष 2021 को Kyrgyz Republic और भारत के बीच सांस्कृतिक और मैत्री के वर्ष के रूप में मनाने पर हम सहमत हुए हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 14, 2019