சிவாஜி மகாராஜின் வாழ்க்கையையும் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சென்று சிறந்த பங்காற்றியமைக்காக நாம் அனைவரும் அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம்: பிரதமர்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் இல்லாமல் இந்தியாவின் வடிவத்தையும் அதன் மகிமையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது: பிரதமர்
பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கிய நிலையில் உள்ளோர் ஆகியோருக்கான நீதியை நிலை நிறுத்தவும், கொடுங்கோன்மைக்கு எதிரான போர்க்குரலுக்கும் இணையற்ற உதாரணம், சிவாஜி மகாராஜின் ‘ஹிந்தவி ஸ்வராஜ்’: பிரதமர்
இந்தியாவின் 75 ஆம் ஆண்டு விடுதலை விழா கொண்டாட்டங்களின் போது, விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுகையில், இளம் வரலாற்றாசிரியர்கள், பாபா சாஹேப் புரந்தரே அவர்களின் தரத்தை பராமரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்: பிரதமர்

பாபா சாகேப் புரந்தரே அவர்களின் 100 வது ஆண்டு விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னாருக்குபுகழஞ்சலி செலுத்தினார். பாபா சாகேப் புரந்தரே நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விழாவில் பேசிய பிரதமர், பாபா சாகேப் புரந்தரே சுறுசுறுப்பான, மனதளவில் உயரிய  கருத்தைக் கொண்டு வாழ்ந்தவர் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் என்று கூறினார்.

 

நமது விடுதலைக்காக பாடுபட்ட பலரின் வரலாற்றை எழுதுவதில் பாபா சாஹேப் புரந்த்ரேவின் பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். "சிவாஜி மகாராஜின் வாழ்க்கையையும், வரலாற்றையும்,  மக்களுக்கு எடுத்துச் சென்று, சிறந்த பங்காற்றியமைக்காக, நாம் அனைவரும் அவருக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்" என்று பிரதமர் கூறினார். ஸ்ரீ புரந்தரேவிற்கு 2019 ல் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. அப்போதைய மகாராஷ்டிரா அரசு அவருக்கு 2015 ல் மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கியது. மத்தியப் பிரதேச அரசும் அவருக்கு காளிதாஸ் விருது வழங்கி மரியாதை செய்தது.

சிவாஜி மகாராஜாவின் புகழ்பெற்ற ஆளுமை குறித்து, பிரதமர் விரிவாகப் பேசினார் . சிவாஜி மகாராஜ் இந்திய வரலாற்றில் கோலோச்சியது மட்டுமல்ல, தற்போதைய இந்திய புவியியலுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினார். சிவாஜி மகாராஜ் இல்லையென்றால், நமது நிலை என்னவாக இருந்திருக்கும் என்பது நமது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தின் மிகப்பெரிய கேள்வியாகும். சத்திரபதி சிவாஜி மகாராஜ் இல்லாமல் இந்தியாவின் வடிவத்தை, அதன் மகிமையை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவர் தனது காலத்தில் என்ன செய்தாரோ, அதை அவரைப் பற்றிய கதைகளும் செய்தன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பின்தங்கியவர்களுக்கு நீதி வழங்குவதாகவும், கொடுங்கோன்மைக்கு எதிரான போர் முழக்கத்திற்கு ஈடு இணையற்ற உதாரணமாகவும் அவை திகழ்கின்றன, அவரது ‘ஹிந்தவி ஸ்வராஜ்’ முழக்கம். மேலாண்மை, கடற்படை அதிகாரத்தைப் பயன்படுத்துதல், நீர் மேலாண்மை ஆகியவற்றில் வீர் சிவாஜியின் உத்திகள் இன்னும் பின்பற்றத்தக்கவை என்று திரு. மோடி கூறினார்

பாபா சாகேப் புரந்தரேவின் படைப்புகள் சிவாஜி மகாராஜின் மீதான அவரது அசைக்க முடியாத பக்தியைப் பிரதிபலிக்கின்றன, அவருடைய படைப்புகளின் மூலம் சிவாஜி மகாராஜ் நம் இதயங்களில் உயிரோடு இருக்கிறார் என்று பிரதமர் கூறினார். பாபா சாஹேபின் நிகழ்ச்சிகளில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டதை நினைவுக் கூர்ந்த பிரதமர், வரலாற்றை அதன் முழு மகிமையுடனும் உத்வேகத்துடனும் இளைஞர்களுக்கு எடுத்துச் சென்றதற்கான அவரது ஆர்வத்தைப் பாராட்டினார். வரலாறு அதன் உண்மையான வடிவத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார். "இந்த சமநிலை நாட்டின் வரலாற்றிற்கு தேவை, இந்தியாவின் 75 ஆம் ஆண்டு விடுதலை விழா கொண்டாட்டங்களின் போது, விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுகையில், இளம் வரலாற்றாசிரியர்கள், பாபா சாஹேப் புரந்தரே அவர்களின் தரத்தை பராமரிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார் 

கோவா முக்தி சங்ராம் முதல் தாத்ரா-  நாகர் ஹவேலி விடுதலைப் போராட்டத்திற்கு பாபா சாஹேப் புரந்தரே ஆற்றிய பங்கு குறித்தும் பிரதமர் நினைவுக் கூர்ந்தார்.

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Space Sector: A Transformational Year Ahead in 2025

Media Coverage

India’s Space Sector: A Transformational Year Ahead in 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 24, 2024
December 24, 2024

Citizens appreciate PM Modi’s Vision of Transforming India