QuoteToday women are excelling in every sphere: PM Modi
QuoteIt is important to recognise the talent of women and provide them with the right opportunities: PM Modi
QuoteSelf Help Groups have immensely benefitted people in rural areas, especially women: PM Modi
QuoteTo strengthen the network of Self Help Groups across the country, Government is helping them economically as well as by providing training: PM

நாடெங்கிலும் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் பயனாளிகளோடு பிரதமர் நரேந்திர  மோடி  காணொலி காட்சி  மூலமாக உரையாடினார்.  பல்வேறு சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த உரையாடலில் பங்கேற்றனர்பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளோடு காணொலி காட்சி வழியாக பிரதமர் நடத்தும் கலந்துரையாடல்  தொடரில் இது 9-வது நிகழ்ச்சியாகும்.

   பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழுக்களின் பெண்களோடு உரையாடுவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறிய பிரதமர்ஒவ்வொரு உறுப்பினரும் உறுதிப்பாட்டிற்கும்ஒட்டுமொத்த முயற்சிக்கும்தொழில் முனைவோரின் திறத்திற்கும் ஒரு உற்சாகமான  எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறினார்.இப்பெண்கள்வியாபாரத்திற்கான உத்வேகத்தைக் கொண்டிருப்பதோடு,வித்தியாசமான சூழ்நிலையில் சுய நம்பிக்கைக்கான அபரிமிதமான உள்வலிமையைக் கொண்டிருப்பதாகவும், இவர்கள் சீரிய முறையில் பணியாற்ற வாய்ப்புகள் மட்டுமே தேவைப்படுகின்றன என்றார்பெண்களின் பங்களிப்பு இல்லாமல்வேளாண்மை மற்றும் பால் உற்பத்தித் துறைகளை கற்பனைக்கூட செய்து பார்ப்பது கடினம் என்றார் அவர்நாடெங்கிலும், இதுவே பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதற்கான உண்மையான உணர்வாகும் என்றார்.

     கலந்துரையாடலின்போது பிரதமர்அனைத்து மாநிலங்களிலும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் கீழ் தேசிய கிராமப்புற வாழ்வாதார முனைப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். 2.5 லட்சம் கிராம ஊராட்சிகளில் உள்ள கோடிக்கணக்கான ஏழை இல்லங்களை சென்றடைவது, அவர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.இந்தத் திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு அனைத்து மாநிலங்களுக்கும்,அதிகாரிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

    சுயஉதவிக் குழுக்கள்ஏழை மக்கள்குறிப்பாக கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த பெண்களின்  பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பதாக கூறினார். 2011-14ஆம் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, கடந்த ஆண்டுகளில் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்திருப்பதாகக் கூறிய பிரதமர்இதனால் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதோடு தொழில் முனைவோரும் உருவாகியுள்ளனர் என்றார். 2011க்கும் 2014க்கும் இடையேயான  ஆண்டுகளில் 52 லட்சம் குடும்பங்களைஉள்ளடக்கிய ஐந்து லட்சம் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.  ஆனால் 2014-ம் ஆண்டு முதல் 2.25 கோடி குடும்பங்களை உள்ளடக்கிய இருபது லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

   நாடெங்கிலும் சுயஉதவிக் குழுக்களை மேம்படுத்த பயிற்சிநிதியுதவி மற்றும் வாய்ப்புக்களை அரசு வழங்கி வருகிறது.  மஹிளா கிசான் சஷ்ஹத்திகரன் பரியோஜனா மூலமாக  33 லட்சம் பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுதற்போது கிராமப்புற இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் ஐந்து கோடி பெண்களின் உற்சாக பங்களிப்போடு 45 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன.

     தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா மூலமாக கிராமப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறதுமேம்பட்ட வாழ்விற்கான இளைஞர்களின்  ஆர்வத்தை செயலாக்க வேலைவாய்ப்புக்கும்,சுயவேலைவாய்ப்பிற்கும் பயிற்சி தரப்படுகிறது. 600 கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி அமைப்புகளின் மூலம், 28 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும், 19 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

    உரையாடலின்போதுமதிப்புக் கூட்டு மற்றும் மதிப்புத் தொடர் அணுகுமுறையின் முக்கியத்துவத்தைப் பற்றி  பிரதமர் எடுத்துரைத்தார்.  தங்களது உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்த சுயஉதவிக் குழுக்கள்அரசின் இமார்க்கெட் வலைதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  

  பிரதமரோடு கலந்துரையாடிய உறுப்பினர்கள்சுயஉதவிக் குழுக்கள் சம்பந்தப்பட்ட அனுபவங்களையும்வெற்றிக்கதைகளையும் பகிர்ந்து கொண்டனர்ஏழை பெண்கள் தங்களது சுயநம்பிக்கை மற்றும் வலிமையைக் கொண்டு, எதிர்ப்புக்களை வென்றதற்கு பிரதமர் அவர்களை பாராட்டினார்.  சுயஉதவிக் குழுக்கள் எவ்வாறு தங்களது வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவந்தன என்பதை பெண் பயனாளிகள் எடுத்துக் கூறினர்.  தங்களது வெற்றிக் கதைகளோடு புகைப்படங்களையும்கருத்துகளையும் இணைத்து நரேந்திர மோடி செயலி”-யில் அனுப்புமாறு பயனாளிகளைக் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Click here to read full text speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
'Operation Sindoor exceeded aims, India achieved a massive victory'

Media Coverage

'Operation Sindoor exceeded aims, India achieved a massive victory'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
We are fully committed to establishing peace in the Naxal-affected areas: PM
May 14, 2025

The Prime Minister, Shri Narendra Modi has stated that the success of the security forces shows that our campaign towards rooting out Naxalism is moving in the right direction. "We are fully committed to establishing peace in the Naxal-affected areas and connecting them with the mainstream of development", Shri Modi added.

In response to Minister of Home Affairs of India, Shri Amit Shah, the Prime Minister posted on X;

"सुरक्षा बलों की यह सफलता बताती है कि नक्सलवाद को जड़ से समाप्त करने की दिशा में हमारा अभियान सही दिशा में आगे बढ़ रहा है। नक्सलवाद से प्रभावित क्षेत्रों में शांति की स्थापना के साथ उन्हें विकास की मुख्यधारा से जोड़ने के लिए हम पूरी तरह से प्रतिबद्ध हैं।"