புதுதில்லியில் தல்கோத்ரா மைதானத்தில் “தேர்வு குறித்த விவாதம் 2.0” நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடினார். 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியுடன் சிரித்து, நகைச்சுவை உணர்வுடன் இருந்த பிரதமரின் குறிப்புகளுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்தனர்.

 

இந்த ஆண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கலந்துரையாடலைத் துவக்கும் வகையில்,   தேர்வு குறித்த விவாத மேடையை ஒரு சிறிய இந்தியா என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இது இந்தியாவின் வருங்காலத்தைக் குறிக்கிறது என்றும், இந்நிகழ்ச்சியில் பெற்றோரும், ஆசிரியர்களும் பங்கேற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் ஒருவர் பிரதமரிடம், குழந்தைகளின் தேர்வு குறித்து மன அழுத்தமும், யதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்புகளும் கொண்ட பெற்றோர்களிடம் ஆசிரியர் என்ன கூறுவது என்று கேட்டார்.  அதேபோல், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு தயாராகி வரும் ஒரு மாணவரும் இதேபோன்ற கேள்வியை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதமர், தேர்வுகள் யாரையும் முழுமையாக பாதிக்காமல் இருக்கவும் கூடாது என்றும், அதேசமயம் தேர்வின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதும் அவசியம் என்று தெரிவித்தார். மேலும் தேர்வு என்பது, வாழ்க்கைக்கான தேர்வா அல்லது பத்தாம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்புக்கான தேர்வுகளா என்று அவர் கேள்வி எழுப்பினார்.  இதைப் புரிந்து கொண்டால், மனஅழுத்தம் குறையும் என்று பிரதமர் கூறினார்.

பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத கனவுகளை தங்களின் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கக்கூடாது என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமைகளும், வலிமைகளும் உள்ளன. ஒவ்வொரு குழந்தையின் ஆக்கப்பூர்வமான திறன்களை நாம் புரிந்து கொள்வது அவசியமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

இந்த எதிர்பார்ப்புகளும் அவசியமானவை என்றும்  அவநம்பிக்கையும், சோகமும் நிறைந்த சூழலில் நாம் வாழமுடியாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

பெற்றோர்களின் மனஅழுத்தம் மற்றும் பெற்றோர்கள் சந்திக்கும் அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், குழந்தைகளின் செயல்பாடுகள் பெற்றோர்களின் அடையாளமாக அமையாது என்று கூறினார். இதுபோன்ற எண்ணங்கள் இலட்சியமாக மாறும்போது, எதிர்பார்ப்புகளும் இயல்புக்கு அதிகமாக உள்ளன. ஒருசிலர் மோடி பிரதமருக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளார் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர் என்று கூறிய அவர், 125 கோடி இந்தியர்களும், 125 கோடி கனவுகளை கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்த கனவுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றார். மேலும், நாம் அனைவரும் இணைந்து நமது திறன்களை மேம்படுத்தி, இந்த கனவுகளை நனவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஒரு காலத்தில் படிப்பில் சிறந்து விளங்கிய தனது மகன், தற்போது இணையதள விளையாட்டுகளால் தனது கவனத்தை இழந்துள்ளார் என்று ஒரு பெற்றோர் தெரிவித்தார்.  இதற்குப் பதிலளித்த பிரதமர், தொழில்நுட்ப அறிவு மாணவர்களுக்கு கெடுதல் என்று நான் நம்பவில்லை.  புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வது மாணவர்களுக்கு நன்மையை அளிக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பம், அறிவை விரிவுப்படுத்த வேண்டும்.  இது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்க வேண்டும். ப்ளே ஸ்டேஷன் நல்லது என்றாலும், ஒருவர் விளையாட்டுத் திடல்களை மறக்கக்கூடாது என்று பிரதமர் கூறினார்.

நேர மேலாண்மை மற்றும் சோர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 1.25 பில்லியன் இந்தியர்களும் தனது குடும்பம் என்று குறிப்பிட்டார். ஒருவர் தனது குடும்பம் குறித்து சிந்திக்கும் போதும், செயல்படும் போதும் எப்படி சோர்வடைய முடியும்?, என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு நாளும் தாம் புது உற்சாகத்தோடு தனது பணியை தொடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

படிப்பை எப்படி  இன்னும் உற்சாகமானதாக மாற்றுவது என்றும், தேர்வுகள் எவ்வாறு ஒரு மனிதனின் ஆளுமைத்திறனை மேம்படுத்த முடியும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர். சரியான மனப்போக்குடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். தேர்வுகள் ஒரு மனிதனை வலிமையாக மாற்றுகிறது, அதனால் யாரும் அதனை வெறுப்போடு பார்க்கக் கூடாது என்று அவர் கூறினார்.

கல்விப் பாடங்கள் குறித்தும், வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகள் குறித்தும் மாணவர்கள் பிரதமரிடம் அறிவுரை கேட்டனர். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு வகையான வலிமை உண்டு. அப்படி இருக்கும் போது எப்படி அனைத்து மாணவரும் கணக்கு மற்றும் அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற கேள்வியினை மாணவர்கள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரதமர், ஒருவரின் எண்ணங்கள் மற்றும் கருத்துகளில் தெளிவு மிகவும் அவசியமாகும். ஆம், அறிவியல் மற்றும் கணக்குப் பாடம் மிகவும் அவசியம். ஆனால் இது போன்ற சிறப்புடைய மற்ற பாடங்களும் உண்டு என்று அவர் கூறினார். தற்போது பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் இருப்பதாகவும்  பிரதமர் கூறினார்.

கடந்த வருடம் இதே தலைப்பில் நடைபெற்ற விவாதத்தை நினைவு கூர்ந்த ஒரு மாணவி, அந்த விவாதத்திற்கு பிறகு தேர்வுகளையும் வேலைவாய்ப்புகளையும் தனது பெற்றோர் தற்போது மேலும் நிதானத்துடன் கையாள்கின்றனர் என்று கூறினார். பெற்றோர்களின் நேர்மறையான அணுகுமுறை குழந்தைகளின் வாழ்வில் பெரிய அளவில் பங்களிக்கும் என்று பிரதமர் கூறினார்.

குழந்தைகளுக்கு ஊக்கமளிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் பிரதமரிடம் உரையாடினர். இதற்கு பதிலளித்த பிரதமர், போட்டி மற்றவர்களுடன் இருக்கக் கூடாது, தனக்குத்தானே போட்டியாக அமைந்து தனது முந்தைய சாதனையை முறியடிப்பதில்தான் ஒருவரின் கவனம் இருக்க வேண்டும் என்று கூறினார்.  ஒருவர் தனது சொந்த சாதனையுடன் போட்டியிடுவதினால் அவநம்பிக்கைகள், எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை எளிதில் வீழ்த்த முடியும் என்றார்.

நமது கல்வி முறையை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், தேர்வுகள் பொருள் புரியாமல் மனப்பாடம் செய்து எழுதுவதை மட்டுமே அடிப்படையாக கொண்டு இல்லாமல் மாணவர்கள் எதனை கற்றுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும் மாணவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த பிரதமர், நமது கற்றலும், நமது கல்வியும் வெறும் தேர்வுகளோடு நின்று விடக் கூடாது; வாழ்வில் பல்வேறு சாவல்களை எதிர்கொள்ள கல்வி நம்மை தயார்படுத்த வேண்டும் என்று கூறினார்.

 

மனஅழுத்தம் குறித்து பேசிய பிரதமர், நம்மை போன்ற நாடுகளில் இந்த பிரச்சனை மிகவும் கவலை அளிக்கிறது. இதனை கையாள இந்திய கலாச்சாரத்தில் பல்வேறு வழிமுறைகள் உண்டு. மனஅழுத்தம் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து நாம் எவ்வளவு தூரம் வெளிப்படையாக பேசுகிறோமோ அவ்வளவு தூரம் நல்லது என்றும் குறிப்பிட்டார்.

ஒரு மனிதனுக்கு திடீரென்று மனஅழுத்தம் ஏற்படுவதில்லை. ஒரு மனிதன் மன அழுத்தத்தை நோக்கி செல்கிறார் என்பதை கணிக்க சில அறிகுறிகள் உண்டு. இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது நல்லதல்ல. மாறாக இதனை குறித்து நாம் பேச வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கவுன்சிலிங் எனப்படும் ஆற்றுப்படுத்துதல் இதற்கு உதவும்.  ஏனென்றால் ஒருவர் தனது பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதற்கு இது வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet extends One-Time Special Package for DAP fertilisers to farmers

Media Coverage

Cabinet extends One-Time Special Package for DAP fertilisers to farmers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 2, 2025
January 02, 2025

Citizens Appreciate India's Strategic Transformation under PM Modi: Economic, Technological, and Social Milestones