The India-Russia friendship is not restricted to their respective capital cities. We have put people at the core of this relationship: PM
A proposal has been made to have a full fledged maritime route that serves as a link between Chennai and Vladivostok: PM
India and Russia realise the importance of a multipolar world. We are working together on many global forums like BRICS and SCO: PM

மாண்புமிகு அதிபர் புடின் அவர்களுக்கும்,

நண்பர்களுக்கும்

வணக்கம்,

ஒட்டுமொத்த உலகத்தில் முதல் விடியல் ஏற்பட்ட, இயற்கையின்  மீதான  இடையறாத போராட்டத்தில் வெற்றிபெற்ற ரஷ்யாவின் நண்பர்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் உந்து சக்தியாக விளங்கினர். 21-ஆம் நுற்றாண்டின் மனித குல மேம்பாட்டிற்குப் புதிய வரலாறும் ரஷ்யாவில் எழுதப்பட்டது.  இத்தகைய மதிப்பிற்குரிய விளாடிவோஸ்டாக் நகருக்கு நான் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.  எனது அன்பு நண்பர் அதிபர் புடினின் அழைப்பு இதனை சாத்தியமாக்கியது. இதற்காக, எனது நண்பர் அதிபர் புடினுக்கு எனது இதயத்திலிருந்து நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த அழைப்பு விளாடிவோஸ்டாக் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் அளித்துள்ளது. இதற்காக, எனது நண்பர் அதிபர் புடினுக்கு நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

மேலும், இந்தியா-ரஷ்யா இடையேயான 20-ஆவது வருடாந்தர உச்சி மாநாட்டில் அதிபர் புடினும், நானும் பங்கேற்பது மகிழ்ச்சியான, வரலாற்று சிறப்புமிக்க இணை நிகழ்வாகும். 2001-ஆம் ஆண்டில் இந்தியா – ரஷ்யா இடையே முதன்முறையாக ரஷ்யாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது எனது நண்பர் புடின் ரஷ்ய அதிபராக இருந்தார்.  அப்போதைய பிரதமர் அடல் அவர்களுடன் இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் நான் இடம்பெற்றிருந்தேன். அப்போது நான் குஜராத் முதலமைச்சராகவும் இருந்தேன். எனக்கும், அதிபர் புடினுக்குமான அரசியல் பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவும், ஒத்துழைப்பும் வெகு வேகமாக வளர்ந்து, வெகுதூரம் சென்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட நமது தனித்தன்மையான, சிறப்பான உறவு நமது நாடுகளின் நலன்களுக்கு மட்டுமின்றி, அதனை மக்கள் மேம்பாட்டிற்கும், அவர்கள் நேரடியாக பயன்பெறுவதற்கும் நாம் இணைத்திருக்கிறோம்.  நம்பிக்கை மற்றும் பங்கேற்புடன் இந்த உறவை அதிபர் புடினும், நானும் ஒத்துழைப்பின் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். இத்தகைய சாதனைகள், அளவு மாற்றத்தை மட்டுமின்றி, குண மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளன.  முதலாவதாக மக்களின் வாழ்க்கை நிலையிலிருந்து ஒத்துழைப்பை நாம் கொண்டுவந்தோம். பின்னர், அதனுடன் தனியார் தொழில்துறையின் அதீதமான சக்தியை இணைத்தோம்.  இன்று, நாம் பத்துக்கும் அதிகமான தொழில் ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கிறோம்.

பாதுகாப்பு போன்ற ராணுவ நிலையிலான ஒத்துழைப்பிலும் கூட, இன்று ரஷ்ய தளவாடங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கான ஒப்பந்தப்படி, இருநாடுகளும் இந்தியாவில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது தொழில் துறையை மேம்படுத்தும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உருவான ஏ கே-203-ன் ஒப்பந்தமும், கூட்டு முயற்சியும், வாங்குவோர்-விற்போர் என்ற வரம்புக்கு உட்பட்ட சூழலுக்கு வெளியே, பாதுகாப்புத் துறையில் கூட்டு உற்பத்திக்கான ஒத்துழைப்பிற்கு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளது. ரஷ்ய ஒத்துழைப்புடன் இந்தியாவில் அணுமின் திட்டங்களை அதிகரிப்பதும்கூட, இந்தத் துறையில் நேர்மையான பங்களிப்பை மேம்படுத்தும்.  இரண்டாவதாக, இந்தியாவின் தலைநகரங்களுக்கும், ரஷ்யாவின் தலைநகரங்களுக்கும் அப்பால் நமது உறவுகள் மேம்பட்டுவருகின்றன.  இது ஆச்சரியமானது அல்ல, ஏனெனில், ஒருபக்கம், நான் நீண்டகாலம் குஜராத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறேன்.  அதிபர் புட்டினும் ரஷ்யப் பிராந்தியங்களின் திறன்களையும், வளங்களையும் அறிந்தவர் ஆவார்.  எனவே, கிழக்கத்திய பொருளாதார அமைப்பை உருவாக்கி இருப்பதும்  இந்தியா போன்ற பன்முகத் தன்மைகொண்ட நாட்டுடன் அதனை இணைப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதும் இயற்கையானதாகும். இதனை நீங்கள் எவ்வளவு பாராட்டுகிறீர்கள் அல்லது குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல.

அவரது அழைப்பைப் பெற்ற உடனேயே நாங்கள் மிகவும் தீவிரமான தயாரிப்பைத் தொடங்கினோம்.  இதையடுத்து, இந்திய வர்த்தக அமைச்சரும், நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்களும், 150 வர்த்தகர்களும் விளாடிவோஸ்டாக் நகருக்கு வந்துள்ளனர். தூரக்கிழக்கின் சிறப்புத்தூதருடனும், தூரக்கிழக்கின் 11 ஆளுநர்களுடனும் நடத்தப்பட்ட சந்திப்பு நல்ல விளைவுகளைத் தந்துள்ளன. மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் இடையேயான உறவுகள் ஒரு கட்டமைப்பை நிறுவியுள்ளது.  நிலக்கரி, வைரம், சுரங்கம், அரிய கனிமங்கள், வேளாண்மை, வனம், காகிதம் மற்றும் காகிதக்கூழ், சுற்றுலா போன்றவை பல புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளன.  பகுதிகளுக்கு இடையேயான தொடர்பை அதிகப்படுத்த தற்போது சென்னைக்கும், விளாடிவோஸ்டாக் நகருக்கும் இடையே கடல்வழி போக்குவரத்துக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக நமது இருதரப்பு உறவில் அதிகபட்ச மாற்றங்களை மேற்கொண்டு அதற்குப் புதிய பரிணாமத்தை அளித்திருக்கிறோம். இந்தியா – ரஷ்யா இடையே எண்ணெய் மற்றும் எரிவாயு ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, பெட்ரோலியத்துறையில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு என்பது தற்போது சிறப்பு அம்சமாகவும், தலைப்புச் செய்தியாகவும் உள்ளது. இந்தத்துறையில் ஒத்துழைப்புக்கான ஐந்தாண்டுகால திட்ட வரைவுக்கும், தூரக்கிழக்கு மற்றும் ஆர்க்டிக் பகுதியில் பெட்ரோலியப் பொருட்கள், திரவ இயற்கை எரிவாயு ஆராய்ச்சியில் ஒத்துழைப்புக்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வில் நமது நீண்டகால உறவு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.  விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் பயணத்திற்கு இந்திய விண்வெளி வீர்ர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற உள்ளனர். பரஸ்பர முதலீட்டில் முழுமையான வளத்தை அடைவதற்காக முதலீட்டுப்பாதுகாப்பு ஒப்பந்தத்தை விரைவில் உருவாக்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவின் ‘ரஷ்ய ப்ளஸ் டெஸ்க்’ அமைப்பும், ரஷ்யாவின் தூரக்கிழக்கு முதலீடு மற்றும் ஏற்றுமதி முகமையின் மும்பை அலுவலகமும் பரஸ்பர முதலீட்டுக்கு ஏற்பாடு செய்யும்.

நண்பர்களே,

நமது ராணுவ ஒத்துழைப்பிலும் புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்படுகின்றன. இருநாடுகளுக்கு இடையே முப்படைகளின் பயிற்சிக்கான ‘இந்த்ரா – 2019’ வளர்ந்துவரும் நம்பிக்கையின் அடையாளமாகும். தேவை ஏற்படும்போது, உலகில் சாதாரண பகுதிகளில் மட்டுமின்றி, அண்டார்க்டிக்கா ஆர்க்டிக் ஆகியவற்றிலும்கூட இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பணியாற்றும். இந்த சகாப்தத்தில் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பலதுருவ உலகம் அவசியம் என்பதை இருநாடுகளும் நன்கு அறிந்துள்ளன.  இதனைக் கட்டமைப்பதில் நமது ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். எனவே, பிரிக்ஸ், எஸ்சிஓ மற்றும் இதர உலகளாவிய அமைப்புகளில் நாம் உள்ளார்ந்து நெருக்கமாக ஒத்துழைக்கிறோம். இந்நாளில், உலகளாவிய மற்றும் பிராந்திய நிலையிலான பல பெரும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்த, அர்த்தமுள்ள விவாதங்களை நடத்துகிறோம்.  சுதந்திரமான, பாதுகாப்பான, பிளவுபடாத, அமைதியான, ஜனநாயகத் தன்மைகொண்ட ஆப்கானிஸ்தானை இந்தியா காணவிரும்புகிறது. எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் வெளியார் தலையீட்டை நாங்கள்  இருவரும் எதிர்க்கிறோம்.  சுதந்திரமான, வெளிப்படை தன்மைகொண்ட அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா – பசிபிக் என்ற இந்தியாவின் கோட்பாடு குறித்து பயனுள்ள விவாதங்களையும் நாம் நடத்தியிருக்கிறோம். இணையப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளை இந்தியாவும், ரஷ்யாவும் வலுப்படுத்தும், அதற்கு ஒத்துழைக்கும் என நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். புலிகள் பாதுகாப்புக்கு அடுத்த ஆண்டு உயர்நிலை அமைப்பு ஒன்றை உருவாக்கவும் இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த முன்முயற்சிக்காகவும், நல்ல வரவேற்புக்காகவும் நான் மீண்டும் ஒருமுறை எனது நண்பர் புடினுக்கு மிகப்பெரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  நாளை நடைபெறவுள்ள கிழக்கத்திய பொருளாதார அமைப்பில் எனது இதர தலைமை நண்பர்களுடன் பங்கேற்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்தர உச்சிமாநாட்டிற்கான அதிபர் புடினின் இந்திய பயணத்திற்காகவும் நான் காத்திருக்கிறேன். 2020-ஆம் ஆண்டில் எஸ்சிஓ, பிரிக்ஸ் அமைப்புகளுக்கு ரஷ்யா தலைமையேற்கும். அதிபர் புட்டின் தலைமையின்கீழ் இந்த அமைப்புகள் வெற்றிக்கான புதிய சாதனைகளை நிகழ்த்தும் என்று நான் நம்புகிறேன். இதற்கு இந்தியாவும், தனிப்பட்ட முறையில் நானும் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களுக்கு மிக்க நன்றி.

 

 

 

 

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage