திரு. வெங்கையா நாயுடு எப்போதும் அவருக்கு அளிக்கப்பட்ட பணியை மிகுந்த விடாமுயற்சியுடன் செயல்படுத்தி வந்திருப்பதாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியதாகவும் பிரதமர் கூறினார்.
திரு. வெங்கையா நாயுடு அனைத்து பிரிவு மக்களுடனும் பிரியத்துடன் பழகும் திறன் கொண்டவராக திகழ்ந்தவர் என்பதுடன் ஒழுக்கசீலராகவும் திகழ்ந்தவர் என திரு. நரேந்திர மோடி பாராட்டினார்
தனக்கு பொறுப்பு கிடைத்தபோதெல்லாம் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைப்பண்பை அவர் கொண்டிருந்தார். பணிகள் உரிய நீதியுடன் செயல்படுவதை உறுதி செய்ய அவர் சிறந்த நிபுணர்களை பெறுவார் என்று பிரதமர் மேலும் கூறினார்.
மனத்தளவில் தன்னை ஒரு விவசாயியாக கருதிக் கொண்ட வெங்கையா நாயுடு விவசாயிகள் நல்வாழ்வு மற்றும் வேளாண்மை மீது ஆர்வம் கொண்டவராவார்.
பிரதமர் கிராம சாலைத் திட்டம் திரு. வெங்கையா நாயுடுவின் முயற்சிகள் காரணமாகவே செயல்பாட்டுக்கு வந்ததாக பிரதமர் கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவராக திரு. வெங்கையா நாயுடு அவர்கள்  பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் எழுதப்பட்ட நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை அவர் குடியரசு துணைத் தலைவரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், திரு. வெங்கையா நாயுடுவுடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக கூறினார். திரு. நாயுடு அனைத்துக்கும் மேலாக பொறுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அவர் கூறினார்.

திரு. வெங்கையா நாயுடு எப்போதும் அவருக்கு அளிக்கப்பட்ட பணியை மிகுந்த விடாமுயற்சியுடன் செயல்படுத்தி வந்திருப்பதாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியதாகவும் பிரதமர் கூறினார். 10 ஆண்டுகள் மாணவர் அரசியலிலும் அதன் பின்னர் 40 ஆண்டுகள் மாநில மற்றும் தேசிய அரசியலிலும் என 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

திரு. வெங்கையா நாயுடு அனைத்து பிரிவு மக்களுடனும் பிரியத்துடன் பழகும் திறன் கொண்டவராக திகழ்ந்தவர் என்பதுடன் ஒழுக்கசீலராகவும் திகழ்ந்தவர் என திரு. நரேந்திர மோடி பாராட்டினார். தனக்கு பொறுப்பு கிடைத்தபோதெல்லாம் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைப்பண்பை அவர் கொண்டிருந்தார். பணிகள் உரிய நீதியுடன் செயல்படுவதை உறுதி செய்ய அவர்  சிறந்த நிபுணர்களை பெறுவார் என்று பிரதமர் மேலும் கூறினார்.

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய், தனது அமைச்சரவையில் திரு. வெங்கையா நாயுடுவை சேர்த்துக் கொள்ள விரும்பிய போது, வெங்கையா அவர்கள் தனக்கு ஊரக மேம்பாட்டுத் துறை வேண்டும் என கோரிக்கை விடுத்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். மனத்தளவில் தன்னை ஒரு விவசாயியாக கருதிக் கொண்ட வெங்கையா நாயுடு விவசாயிகள் நல்வாழ்வு மற்றும் வேளாண்மை மீது ஆர்வம் கொண்டவராவார்.

பிரதமர் கிராம சாலைத் திட்டம் திரு. வெங்கையா நாயுடுவின் முயற்சிகள் காரணமாகவே செயல்பாட்டுக்கு வந்ததாக பிரதமர் கூறினார். ரயில்வே நிறுத்தங்கள் மட்டுமே அரசியல் சிந்தனையில் மையமாக திகழ்ந்த தருணத்தில் சாலைகள் மற்றும் இதர முறையிலான இணைப்புகள் குறித்து அரசியல் தலைவர்கள் சிந்திப்பதை நாயுடு உறுதி செய்தார் என பிரதமர் குறிப்பிட்டார். 

குடியரசு துணைத் தலைவரின் பேச்சாற்றல் குறித்தும் ஆங்கிலம் அல்லது தெலுங்கு ஆகிய மொழிகளில் அவரது வார்த்தை விளையாட்டை பிரதமர் புகழ்ந்தார். குடியரசு துணைத் தலைவராக  தனது முதலாவது ஆண்டுப் பணி குறித்து நாடாளுமன்றத்தின் உள்ளே மற்றும் வெளியே தாம் மேற்கொண்ட வளமிக்க பணிகள் குறித்த மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையிலான நூல் ஒன்றை அவர் அளித்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Biz Activity Surges To 3-month High In Nov: Report

Media Coverage

India’s Biz Activity Surges To 3-month High In Nov: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 24, 2024
November 24, 2024

‘Mann Ki Baat’ – PM Modi Connects with the Nation

Driving Growth: PM Modi's Policies Foster Economic Prosperity