வீரதீர செயலுக்கான தேசிய விருதை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று 25 குழந்தைகளுக்கு வழங்கினார்.
விருது பெற்றவர்களுடன் உரையாடிய பிரதமர், அவர்களின் வீரச் செயல் அவர்களின் வீரத்துடன், தீர்மானிக்கும் ஆற்றலையும் நிரூபிக்கிறது என்று கூறினார். உங்கள் வாழ்க்கையின் லட்சியம் இந்த விருதுடன் முடிந்துவிட கூடாது. இது ஓர் ஆரம்பமாகவே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
ஜனவரி 23-ந் தேதியின் முக்கியத்துவத்தை பிரதமர் குழந்தைகளுக்கு விவரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை நினைவூட்டினார். குழந்தைகள் நிறைய படிக்க வேண்டும், குறிப்பாக தலைவர்கள், விளையாட்டு வீர்கள் மற்றும் சிறந்த சாதனை புரிந்த மக்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வீரம் என்பது ஒரு மன நிலை; ஆரோக்கியமான உடல் அதற்கு தேவை. மன நிலையே இதற்கு தேவையான சக்தியை அளிக்கிறது. அதனால் நமது மனநிலையை நாம் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது குழந்தைகளுக்கு கிடைத்துள்ள பாராட்டும் புகழ்ச்சியும் அவர்களின் வருங்கால வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது என்று பிரதமர் கூறினார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை அமைச்சர் திருமதி. மேனகா காந்தியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வீரதீரச் செயலுக்கான தேசிய விருது திட்டத்தை குழந்தைகள் நல்வாழ்விற்கான இந்திய சபை தொடங்கி வைத்தது. குழந்தைகளின் சிறப்பான வீரதீரச் செயலுக்கான செயல்களை அடையாளம் கண்டு, அவர்களுடைய பாராட்டுதற்குரிய சேவையை கண்டறிந்து, பிற குழந்தைகளை ஊக்குவித்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் குழத்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
Children Honoured with National Bravery Awards 2016:
1. Bharat Award to Tarh Peeju
2. Geeta Chopra Award to Tejasweeta Pradhan & Shivani Gond