பிரதமர் திரு. நரேந்திர மோடி, காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை நோபாளப் பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒவ்வொரு முறை தாம் இங்கு வரும்போதும், காத்மண்டு மக்களின் அன்பையும் பாசத்தையும் உணருவதாக்க் கூறினர். நேபாளத்தில் நம்முடையது என்ற இந்தியாவின் உணர்வு வெளிப்படுவதாக அவர் தெரிவித்தார். நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் மற்றும் இதர கோவில்களுக்கு தமது முந்தைய பயணங்களை அவர் நினைவுகூர்ந்தார்.
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான ஆன்மிக உறவுகள் காலம் மற்றும் தொலைவுக்கு அப்பாற்பட்ட்து என்று அவர் தெரிவித்தார். அந்த சூழலில் இந்த தர்மசாலாவை திறந்து வைப்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.
பசுபதிநாத், முக்திநாத் மற்றும் ஜானகிதாம் கோயில்கள் இந்தியாவுடனான நெருக்கத்தை பலப்படுத்துவதுடன் நேபாளத்தின் வேற்றுமையில் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் கூறினார். காத்மண்டு நகரத்தில் வெளிப்படும் இந்து மற்றும் புத்தமத பாரம்பரியங்கள் பற்றி அவர் பேசினார். இந்தியா மற்றும் நேபாளம் இடையே முக்கிய இணைப்பாக புத்தமதம் எவ்வாறு திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தங்களது புகழ்வாய்ந்த பாரம்பரியம் குறித்து இரு நாடுகளும் பெருமிதமடைவதாக அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியின் தேவை, குறிப்பாக பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்தின் தேவை குறித்து பிரதமர் வலியுறுத்தினார். பொருளாதார வளர்ச்சியில் புதிய உயரங்களுக்கு இந்தியா உயர்ந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், அனைவரும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம் என்ற தொலைநோக்கு பார்வை நேபாள மக்களையும் உள்ளடக்கியது என்றார். நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையைக் காண இந்தியா மகிழ்கிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பை நேபாளம் பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.