QuoteTechnology can be beneficial in reducing poverty to a great extent: PM Modi
QuoteHigh Speed Rail project project would bring in latest technology and ensure fast-paced progress: PM Modi
QuoteWhether it is railways, highways, waterways or airways, we are focusing on all areas. Integrated transport system is the dream of new India: PM
QuoteOur efforts are to provide benefits of new technology to the common man: PM Modi
QuoteEconomic development has a direct relation with productivity. Our aim is: More productivity with high-speed connectivity: PM Modi

மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்திற்கான அடிக்கல்லை இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் திரு.ஷின்சோ அபே ஆகியோர் கூட்டாக நாட்டினர்.

|

 

|

 

|

அகமதாபாதில் பெருந்திரளாக கூடிய கூட்டத்தினரிடையே இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் “புதிய இந்தியா”வின் உயர்ந்த குறிக்கோள் மற்றும் தன்னம்பிக்கை குறித்து பேசினார். இந்நிகழ்வையொட்டி, இந்திய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், புல்லட் ரயில் திட்டம் விரைவு மற்றும் முன்னேற்றத்தை அளிப்பதுடன், முடிவுகளை விரைவாக அளிக்கும் என்றார். அதிவிரைவு இணைப்பின் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். இத்திட்டத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்கியதற்கான ஜப்பானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அவர், குறுகிய காலத்தில் இத்திட்டத்தினை தொடங்கியதற்காக பிரதமர் திரு. அபே அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

|

இந்த அதிவேக ரயில் இரு நகரங்களை மட்டும் நெருக்கமாக கொண்டு வருவது மட்டுமில்லாமல், நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள மனிதர்களையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக கொண்டு வரும் என பிரதமர் தெரிவித்தார். மும்பை-அகமதாபாத் தடத்தில் புதிய பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அப்பகுதி முழுமையும் ஒரே பொருளாதார மண்டலமாக மாறும் எனத் தெரிவித்தார்.

|

சாதாரண மனிதனுக்கு நன்மையளித்தால் மட்டுமே தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கப் பெறும் தொழில்நுட்ப பரிமாற்றம் இந்திய ரயில்வேக்கு பயனளிப்பதுடன், ”இந்தியாவில் உருவாக்குவோம்” திட்டத்தை ஊக்குவிக்கும் என்றார் அவர். இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கும், மனிதசூழலுக்கும் உகந்ததாக இருக்கும் என்றார் அவர். எதிர்காலத்தில் விரைவான முன்னேற்றத்திற்கு “அதிவேக விரைவு தடங்கள்” பிராந்தியங்களாக விளங்கும் என அவர் தெரிவித்தார்.

|

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார். குறுகிய காலக்கெடுவிற்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொருவரும் இணைந்து உழைப்பார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

|

முன்னதாக, ஜப்பான் பிரதமர் திரு.ஷின்சோ அபே அவர்கள், இந்திய-ஜப்பான் கூட்டு சிறப்பு, மூலோபாய மற்றும் உலகளவிலானது என்றார். சில வருடங்களில், இந்தியாவின் அழகை புல்லட் ரயில் ஜன்னல் வழியே காண இயலும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text of speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Indian economy 'resilient' despite 'fragile' global growth outlook: RBI Bulletin

Media Coverage

Indian economy 'resilient' despite 'fragile' global growth outlook: RBI Bulletin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM attends the Defence Investiture Ceremony-2025 (Phase-1)
May 22, 2025

The Prime Minister Shri Narendra Modi attended the Defence Investiture Ceremony-2025 (Phase-1) in Rashtrapati Bhavan, New Delhi today, where Gallantry Awards were presented.

He wrote in a post on X:

“Attended the Defence Investiture Ceremony-2025 (Phase-1), where Gallantry Awards were presented. India will always be grateful to our armed forces for their valour and commitment to safeguarding our nation.”