இந்தியாவின் மிக நெடிய பன்முகத்தன்மையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த வாழ்வியல் வழிமுறைகளும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்டு திகழ்வதென்ற உறுதிப்பாட்டிற்கும் உதவிகரமாக உள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் தேசிய ஒற்றுமைத் தினத்தையொட்டி கெவாடியாவில் இன்று (31.10.2019) நடைபெற்ற விழாவில் பிரதமர் உரையாற்றினார்.
“நமது வேற்றுமையில் ஒற்றுமையால் நாம் பெருமிதம் கொள்கிறோம். இது நமக்கு மரியாதையையும், கண்ணியத்தையும் தருகிறது” என்று அவர் கூறினார்.
“நமது வேற்றுமையில் ஒற்றுமையை நாம் கொண்டாடுகிறோம். நமது பன்முகத்தன்மையில் எந்தவித முரண்பாடுகளையும் காணமுடியாது, மாறாக வலுவான ஒற்றுமையையே காண முடிகிறது”
“பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது, பன்முகத்தன்மைத் திருவிழா நமது இதயங்களில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது”, என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நமது வாழ்க்கையின் பல்வேறு வழிமுறைகள், பாரம்பரியத்தை நாம் மதித்தால், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வு மேம்படுவதால், ஒவ்வொரு தருணத்திலும் பன்முகத்தன்மையை கொண்டாடுவதே தேச நிர்மாணம் ஆகும்”
“பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை, இதனை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணமுடியாது. தென்னிந்தியாவிலிருந்து தோன்றிய சங்கரர், வடமாநிலங்களில் மடாலயங்களை நிறுவினார், அதே போன்று வங்காளத்தில் பிறந்த சுவாமி விவேகானந்தர், தென்னிந்தியாவின் கன்னியாகுமரியில் ஞானம் பெற்றார்” என்று பிரதமர் தெரிவித்தார்.
“பாட்னாவில் பிறந்த குருகோவிந்த் சிங், பஞ்சாபில் கல்சா பந்த்-ஐ தோற்றுவித்தார். ராமேஸ்வரத்தில் பிறந்த ஏ பி ஜே அப்துல் கலாம், தில்லயில் நாட்டின் மிக உயரிய பதவியை அடைந்தார்”
இந்திய அரசியல் சாசனத்தில் முகப்புரையில் இடம் பெற்றுள்ள “இந்திய மக்களாகிய நாம்” என்ற சொல் பற்றி குறிப்பிட்ட அவர், “இது அரசியல் சாசனத்தின் சாதாரண ஒரு சொல் அல்ல, மாறாக இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் வாழ்க்கை நடைமுறையை பிரதிபலிப்பதாகும் என்றார்.
“500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியாவாக ஒருங்கிணைக்கும் மாபெரும் பணியை சர்தார் படேல் மேற்கொண்டபோது, இந்த காந்த சக்திதான், பெரும்பாலானவர்களை இந்தியாவின் பக்கம் ஈர்த்தது”
தற்போது இந்தியாவின் நல்லெண்ணமும், செல்வாக்கும் அதிகரித்து வருவதாக கூறிய அவர், நமது ஒற்றுமைதான் இதற்குக் காரணம் என்றார்.
“ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை உன்னிப்பாக கவனிப்பதற்கும், நமது தேசத்தின் ஒற்றுமையே காரணம். இந்தியா உலகின் மாபெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்தாலும் அதற்கும் நமது தேச ஒற்றுமையே காரணம்” என்று அவர் தெரிவித்தார்.
“நமக்கு எதிரான போரில் வெற்றி பெறமுடியாதவர்கள்தான், நமது ஒற்றுமைக்கு சவால் விடுக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர். பல ஆண்டுகள் ஆனாலும், நம்மிடையே நிலவும் ஒற்றுமை உணர்வை சீர்குலைக்க யாராலும் முடியவில்லை” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“இது போன்ற பிரிவினைவாத சக்திகளை முறியடிக்கவே, சர்தார் படேலின் ஆசியுடன், அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது என்ற மாபெரும் முடிவை கடந்த சில வாரங்களுக்கு முன் நாடு மேற்கொண்டது” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தைத்தான் உருவாக்கியதாகவும், பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்த இந்த சட்டப்பிரிவு, நாட்டு மக்களிடையே செயற்கையான பிளவைத்தான் ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
சர்தார் படேலின் பிறந்தநாளை நினைவு கூரும் விதமாக கெவாடியாவில் இன்று (31.10.2019) நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின விழாவில் உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
370-வது பிரிவு எந்தப் பயனையும் தரவில்லை, மாறாக பிரிவினைவாத மனப்பான்மையும், தீவிரவாதமும் அதிகரித்ததால், செயற்கையான மதில்சுவருக்கு அப்பால் உள்ள நமது சகோதர சகோதரிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அந்த செயற்கை மதில்சுவர் தற்போது தகர்க்கப்பட்டுவிட்டதென பிரதமர் தெரிவித்தார்.
“நாட்டிலேயே ஜம்மு காஷ்மீரில் மட்டும்தான் அரசியல் சட்டப்பிரிவு 370 நடைமுறையில் இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.
“கடந்த முப்பது ஆண்டுகளில், தீவிரவாத செயல்களால் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயரிழந்துள்ளனர், ஏராளமான தாய்மார்கள் தங்களது பிள்ளைகளையும், சகோதரிகள் தங்களது சகோதரர்களையும், குழந்தைகள் தங்களது பெற்றோரையும் இழந்துள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
“ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அதற்கு தீர்வு காண இவ்வளவு காலம் ஆகியிருக்காது” என்று சர்தார் படேல் கூறியதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
“அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது என்ற முடிவை, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
“நாம் மேற்கொண்ட இந்த முடிவால், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் தற்போது ஒளிமயமான எதிர்காலம் மற்றும் வளர்ச்சிப்பாதையை நோக்கிப் பயணிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது”.
ஜம்மு – காஷ்மீரில் அண்மையில் நடந்து முடிந்த வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “இந்தத் தேர்தலில் 98%-க்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்களான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்திருப்பது, மாபெரும் செய்தியை தருகிறது” என்றார்.
“ஜம்மு-காஷ்மீரில் தற்போது அரசியல் நிலைத்தன்மை சகாப்தம் தொடங்கியுள்ளது. தனிநபர் சுயநலக்காரணங்களுக்காக ஆட்சியமைக்கும் விளையாட்டு முடிவடைவதுடன், பிராந்திய அடிப்படையிலான பாகுபாட்டு உணர்வுகளும் மறையும்” என்று பிரதமர் தெரிவித்தார்.
“கூட்டுறவு கூட்டாட்சியில் உண்மையான பங்கேற்பு சகாப்தம் இந்த பிராந்தியத்தில் விரைவில் தொடங்கும். புதிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில்பாதைகள், புதிய பள்ளிக்கூடங்கள், புதிய கல்லூரிகள், புதிய மருத்துவமனைகள் போன்றவை ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்”
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், “வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பிரிவினைவாத மனப்பான்மை ஒழிந்து முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும், பன்னெடுங்காலமாக நீடித்து வந்த வன்முறை மற்றும் தடைகளிலிருந்து விடுபட்டு வருகின்றன” என்றார்.
“சர்தார் படேலின் பணிகளிலிருந்து பெற்ற உத்வேகத்துடன், ஒட்டுமொத்த உணர்ச்சி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்ட ஒருங்கிணைப்பு மூலம் நாட்டிற்கு ஊக்கமளிக்கிறோம். அது போன்ற ஒரு முயற்சிதான் இது, இவை இல்லாமல் 21-ம் நூற்றாண்டில் வலிமையான இந்தியாவை காணமுடியாது” என்று அவர் தெரிவித்தார்.
சர்தார் படேலின் கொள்கைகள் பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், “குறிக்கோளுடன் கூடிய ஒற்றுமை, வெறும் முயற்சி ஒற்றுமை மற்றும் நோக்கங்களுடன் கூடிய ஒற்றுமை ஆகியவை நாட்டின் உறுதித்தன்மைக்கு அவசியம் என்பதுதான் சர்தார் படேலின் கொள்கையாகும். நமது நோக்கம், குறிக்கோள் மற்றும் இலக்குகளில் சமத்துவ மனப்பான்மையைக் கொண்டுள்ளோம்” என்றார்.
இதுபோன்ற தேச ஒற்றுமைப் பாதையை நோக்கி நாம் சென்றால், “ஒரே பாரதம், ஒப்பிலா பாரதம்” என்ற இலக்கை நம்மால் அடையமுடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
PM: अब से कुछ देर पहले ही राष्ट्रीय एकता का संदेश दोहराने के लिए राष्ट्रीय एकता दौड़ संपन्न हुई है।देश के अलग-अलग शहरों में, गावों में, अलग-अलग क्षेत्रों में लोगों ने इसमें हिस्सा लिया है। pic.twitter.com/J1qMwsSItX
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: यहां राष्ट्रीय एकता परेड का भी आयोजन किया गया है।इन भव्य आयोजनों में हिस्सा लेने वाले हर देशवासी का मैं अभिनंदन करता हूं। pic.twitter.com/h3QsMQJ0wR
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: पूरी दुनिया में अलग-अलग देश, अलग-अलग पंथों, अलग-अलग विचारधाराओं, भाषाओं, रंग-रूप के आधार पर बने।एकरूपता, उन देशों की विशेषता रही, पहचान रही।
— PMO India (@PMOIndia) October 31, 2019
लेकिन भारत की विशेषता है विविधता में एकता। pic.twitter.com/HFu5yYVkYQ
PM: विविधता में एकता हमारा गर्व है, हमारा गौरव है, हमारी पहचान है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
हमारे यहाँ विविधता को, diversity को सेलिब्रेट किया जाता है।हमें विविधता में विरोधाभास नहीं दिखता बल्कि उसमें अंतर्निहित एकता का सामर्थ्य दिखता है। pic.twitter.com/j8s8rdsXck
PM: विविधता का सेलिब्रेशन, विविधता का उत्सव उसमें छुपी एकता का स्पर्श कराता है, उसे बाहर ला देता है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
जब हम देश की अलग - अलग भाषाओं और सैकड़ों बोलियों पर गर्व करते हैं तो भाव का बंधन बन जाता है। pic.twitter.com/V9pdRkhsl9
PM: जब हम विभिन्न पंथों-संप्रदायों की परंपराओं, आस्थाओं का सम्मान करते हैं तो सदभाव-स्नेहभाव में और वृद्धि हो जाती है।इसलिये हमें हर पल, विविधता के हर अवसर को सेलिब्रेट करना है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
और यही Nation Building है। pic.twitter.com/PkOI2ZTiMS
PM: ये वो ताकत है जो पूरी दुनिया में किसी और देश में नहीं मिलेगी।
— PMO India (@PMOIndia) October 31, 2019
यहां दक्षिण से निकले आदि शंकराचार्य, उत्तर में मठों की स्थापना करते हैं।
यहां बंगाल से निकले स्वामी विवेकानंद को देश के दक्षिणी छोर कन्याकुमारी में नया ज्ञान प्राप्त होता है।
PM: यहां पटना में प्रकट हुए गुरू गोबिंद सिंह, पंजाब में जाकर, देश की रक्षा के लिए खालसा पंथ की स्थापना करते हैं
— PMO India (@PMOIndia) October 31, 2019
यहां रामेश्वरम में पैदा हुए एपीजे अब्दुल कलाम, दिल्ली में देश के सर्वोच्च पद पर आसीन होते हैं।
PM: मैं मानता हूं कि अपनी एकता की इस ताकत का पर्व निरंतर मनाना बहुत आवश्यक है।एकता की ये ताकत ही है जिससे भारतीयता का प्रवाह है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: We the People of India, हम भारत के लोग, ये तीन-चार शब्द नहीं हैं, सिर्फ हमारे संविधान की शुरुआत नहीं हैं।
— PMO India (@PMOIndia) October 31, 2019
ये हजारों वर्षों से चली आ रही भारतीयों की एकता का प्रतिबिंब है।
PM: जब विदेशी धरती पर मेडल जीतने के बाद तिरंगा लहराता है, तो कश्मीर से लेकर कन्याकुमारी तक, महाराष्ट्र से लेकर मणिपुर तक, एक साथ रोमांचित हो उठता है, सबकी भवनाएं उभार पर आ जाती हैं। pic.twitter.com/vvpHfnvRty
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: जब सरदार पटेल, पाँच सौ से ज्यादा रिसायतों के एकीकरण के भगीरथ कार्य के लिए निकले थे, तो यही वो चुंबकीय शक्ति थी, जिसमें ज्यादातर राजे-रजवाड़े खिंचे चले आए थे।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: सरदार पटेल जब एकता का मंत्र लेकर निकले, तो सभी उसकी छत्रछाया में खड़े हो गए। pic.twitter.com/lgNPBvGw8e
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: हमेशा याद रखना होगा कि शताब्दियों पहले, तमाम रियासतों को साथ लेकर, एक भारत का सपना लेकर, राष्ट्र के पुनुरुद्धार का सफल प्रयास चाणक्य ने किया था।चाणक्य के बाद अगर ये काम कोई कर पाया तो वो सरदार पटेल ही थे।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: आज विश्व मंच पर हमारा प्रभाव और सदभाव, दोनों बढ़ रहा है, तो उसका कारण हमारी एकता है। आज पूरी दुनिया, भारत की बात गंभीरता से सुनती है, तो उसका कारण हमारी एकता है। आज भारत दुनिया की बड़ी आर्थिक ताकत है, तो उसका कारण, हमारी एकता है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: 21वीं सदी में भारत की यही एकता, भारतीयों की यही एकता, भारत के विरोधियों के सामने सबसे बड़ी चुनौती है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: मैं आज राष्ट्रीय एकता दिवस पर, प्रत्येक देशवासी को देश के समक्ष मौजूद ये चुनौती याद दिला रहा हूं।जो हमसे युद्ध में नहीं जीत सकते, वो हमारी इसी एकता को चुनौती दे रहे हैं।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: लेकिन वो भूल जाते हैं कि सदियों की ऐसी ही कोशिशों के बावजूद, हमें कोई मिटा नहीं सका, हमारी एकता को परास्त नहीं कर सका।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: जब हमारी विविधताओं के बीच, एकता पर बल देने वाली बातें होती हैं, तो इन ताकतों को मुंहतोड़ जवाब मिलता है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
जब हमारी विविधताओं के बीच, हम एकता के मार्ग पर चलते हैं, तो इन ताकतों को मुंहतोड़ जवाब मिलता है।
PM: सरदार साहेब के आशीर्वाद से, इन ताकतों को परास्त करने का एक बहुत बड़ा फैसला देश ने कुछ हफ्ते पहले ही लिया है। आर्टिकल 370 ने जम्मू-कश्मीर को अलगाववाद और आतंकवाद के सिवाय कुछ नहीं दिया।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: पूरे देश में जम्मू-कश्मीर ही एकमात्र स्थान था जहां आर्टिकल 370 था और पूरे देश में जम्मू-कश्मीर ही एकमात्र स्थान था जहां तीन दशकों में आतंकवाद ने करीब-करीब 40 हजार लोगों की जान ले ली।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: दशकों तक हम भारतीयों के बीच इस आर्टिकल 370 ने एक अस्थाई दीवार बना रखी थी।हमारे जो भाई-बहन इस अस्थाई दीवार के उस पार थे, वो भी असमंजस में रहते थे।जो दीवार कश्मीर में अलगाववाद और आतंकवाद बढ़ा रही थी, अब वो दीवार गिरा दी गई है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: कभी सरदार पटेल ने कहा था कि अगर कश्मीर का मसला उनके पास रहा होता, तो उसे सुलझने में इतनी देर नहीं होती।आज उनकी जन्म जयंती पर, मैं आर्टिकल 370 को हटाने का फैसला, सरदार साहेब को समर्पित करता हूं। pic.twitter.com/ss1cGc57y2
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: हमें इस बात की भी खुशी है कि आज से ही जम्मू-कश्मीर और लद्दाख, एक नए भविष्य की ओर कदम बढ़ा रहे हैं।हाल ही में वहां, ब्लॉक डवलपमेंट काउंसिल के चुनाव में 98 प्रतिशत पंचों-सरपंचों की भागीदारी एक बड़ा संदेश है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: अब जम्मू कश्मीर में एक राजनीतिक स्थिरता आएगी।
— PMO India (@PMOIndia) October 31, 2019
अब निजी स्वार्थ के लिए सरकारें बनाने और गिराने का खेल बंद होगा।
अब क्षेत्र के आधार पर भेदभाव के शिकवे और शिकायतें भी दूर होंगी।
PM: अब Co-Operative Federalism की असली भागीदारी देखने को मिलेगी।नए हाईवे, नई रेलवे लाइनें, नए स्कूल, नए कॉलेज, नए अस्पताल, जम्मू-कश्मीर के लोगों के विकास को नई ऊँचाई पर ले जाएंगे।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: मुझे खुशी है कि आज से जम्मू-कश्मीर और लद्दाख के सभी सरकारी कर्मचारियों को सातवें वेतन आयोग द्वारा स्वीकृत भत्तों का लाभ मिलना भी शुरू हो जाएगा।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: जम्मू-कश्मीर और लद्दाख में नई व्यवस्थाएं ज़मीन पर लकीरें खींचने के लिए नहीं है, बल्कि विश्वास की एक मज़बूत कड़ी बनाने के लिए है।यही विश्वास है जिसकी कामना सरदार पटेल ने भी जम्मू कश्मीर और लद्दाख के लिए की थी।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: सरदार साहेब की प्रेरणा से ही हम संपूर्ण भारत के Emotional, Economic और Constitutional Integration पर बल दे रहे हैं।ये वो प्रयास हैं जिसके बगैर 21वीं सदी के विश्व में भारत की मज़बूती की कल्पना हम नहीं कर सकते।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: एक समय था जब नॉर्थ ईस्ट और शेष भारत के बीच की अविश्वास की खाई कितनी गहरी होती जा रही थी।
— PMO India (@PMOIndia) October 31, 2019
वहां की फिजिकल कनेक्टिविटी और इमोशनल कनेक्टिविटी, दोनों को लेकर गंभीर सवाल थे।लेकिन अब स्थितियां बदल रही हैं।
PM: आज नॉर्थ ईस्ट का अलगाव, लगाव में बदल रहा है।दशकों पुरानी समस्याएं अब समाधान की तरफ बढ़ रही हैं, हिंसा और ब्लॉकेड के एक लंबे दौर से पूरे नॉर्थ ईस्ट को मुक्ति मिल रही है।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: सरदार साहब कहते थे, भारत में स्थायित्व के लिए बहुत आवश्यक है- Unity of Pupose, Unity of Aims और Unity of Endeavour. हमारे उद्देश्यों में समानता हो, हमारे लक्ष्यों में समानता हो और हमारे प्रयासों में समानता हो। pic.twitter.com/H0w42sbRCP
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: मैं संपूर्ण देश का आह्वान करता हूं, कि आइए हम उस पुरातन उद्घोष को याद करते हुए आगे बढ़ें, जिसने हमें हमेशा प्रेरित किया है।सं गच्छ-ध्वं, सं वद-ध्वं, सं वो मनांसि जानताम् यानि, हम सभी साथ मिलकर चलें, एक स्वर में बात करें, एक मन के साथ आगे बढ़ें।
— PMO India (@PMOIndia) October 31, 2019
PM: एकता का यही वो मार्ग है जिस पर चलते हुए, एक भारत, श्रेष्ठ भारत का संकल्प पूरा होगा, नए भारत का निर्माण होगा। pic.twitter.com/OAtIqPdWvx
— PMO India (@PMOIndia) October 31, 2019