Unity in diversity is our pride, our identity: Prime Minister Modi
Today on the birth anniversary of Sardar Patel, I dedicate the decision to abrogate Article 370 from Jammu and Kashmir, to him: PM Modi
Now there will be a political stability in Jammu and Kashmir: PM Modi

இந்தியாவின் மிக நெடிய பன்முகத்தன்மையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த வாழ்வியல் வழிமுறைகளும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்டு திகழ்வதென்ற உறுதிப்பாட்டிற்கும் உதவிகரமாக உள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

          சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் தேசிய ஒற்றுமைத் தினத்தையொட்டி கெவாடியாவில் இன்று (31.10.2019) நடைபெற்ற விழாவில் பிரதமர் உரையாற்றினார். 

 

     “நமது  வேற்றுமையில் ஒற்றுமையால் நாம் பெருமிதம் கொள்கிறோம். இது நமக்கு மரியாதையையும், கண்ணியத்தையும் தருகிறது”  என்று அவர் கூறினார். 

 

     “நமது வேற்றுமையில் ஒற்றுமையை நாம் கொண்டாடுகிறோம். நமது பன்முகத்தன்மையில் எந்தவித முரண்பாடுகளையும் காணமுடியாது, மாறாக வலுவான ஒற்றுமையையே காண முடிகிறது”

     “பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது, பன்முகத்தன்மைத் திருவிழா நமது இதயங்களில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது”, என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

“நமது வாழ்க்கையின் பல்வேறு வழிமுறைகள், பாரம்பரியத்தை நாம் மதித்தால், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வு மேம்படுவதால், ஒவ்வொரு தருணத்திலும் பன்முகத்தன்மையை கொண்டாடுவதே  தேச நிர்மாணம் ஆகும்”

 

“பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை, இதனை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணமுடியாது.  தென்னிந்தியாவிலிருந்து  தோன்றிய சங்கரர், வடமாநிலங்களில் மடாலயங்களை நிறுவினார், அதே போன்று வங்காளத்தில் பிறந்த சுவாமி விவேகானந்தர், தென்னிந்தியாவின் கன்னியாகுமரியில் ஞானம் பெற்றார்” என்று பிரதமர் தெரிவித்தார். 

 

“பாட்னாவில் பிறந்த குருகோவிந்த் சிங், பஞ்சாபில் கல்சா பந்த்-ஐ தோற்றுவித்தார். ராமேஸ்வரத்தில் பிறந்த ஏ பி ஜே அப்துல் கலாம், தில்லயில் நாட்டின் மிக உயரிய பதவியை அடைந்தார்”

 

இந்திய அரசியல் சாசனத்தில் முகப்புரையில் இடம் பெற்றுள்ள “இந்திய மக்களாகிய நாம்” என்ற சொல் பற்றி குறிப்பிட்ட அவர், “இது அரசியல் சாசனத்தின் சாதாரண ஒரு சொல் அல்ல, மாறாக இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் வாழ்க்கை நடைமுறையை  பிரதிபலிப்பதாகும் என்றார்.

     “500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியாவாக ஒருங்கிணைக்கும் மாபெரும் பணியை சர்தார் படேல் மேற்கொண்டபோது, இந்த காந்த சக்திதான், பெரும்பாலானவர்களை இந்தியாவின் பக்கம் ஈர்த்தது”

 

     தற்போது இந்தியாவின் நல்லெண்ணமும், செல்வாக்கும் அதிகரித்து வருவதாக கூறிய அவர், நமது ஒற்றுமைதான் இதற்குக் காரணம் என்றார்.

 

     “ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை உன்னிப்பாக கவனிப்பதற்கும், நமது தேசத்தின் ஒற்றுமையே காரணம். இந்தியா உலகின் மாபெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்தாலும் அதற்கும் நமது தேச ஒற்றுமையே காரணம்” என்று அவர் தெரிவித்தார்.

     “நமக்கு எதிரான போரில் வெற்றி பெறமுடியாதவர்கள்தான், நமது ஒற்றுமைக்கு சவால் விடுக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர். பல ஆண்டுகள் ஆனாலும், நம்மிடையே நிலவும் ஒற்றுமை உணர்வை சீர்குலைக்க யாராலும் முடியவில்லை” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

     “இது போன்ற பிரிவினைவாத சக்திகளை  முறியடிக்கவே, சர்தார் படேலின் ஆசியுடன், அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது என்ற மாபெரும் முடிவை கடந்த சில வாரங்களுக்கு முன் நாடு மேற்கொண்டது” என்று அவர் குறிப்பிட்டார்.

     இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தைத்தான் உருவாக்கியதாகவும், பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

     பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்த இந்த சட்டப்பிரிவு, நாட்டு மக்களிடையே செயற்கையான பிளவைத்தான் ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

 

     சர்தார் படேலின் பிறந்தநாளை நினைவு கூரும் விதமாக கெவாடியாவில் இன்று (31.10.2019) நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின விழாவில் உரையாற்றும்போது பிரதமர்  இதனைத்  தெரிவித்தார்.

 

     370-வது பிரிவு எந்தப் பயனையும் தரவில்லை, மாறாக பிரிவினைவாத மனப்பான்மையும், தீவிரவாதமும் அதிகரித்ததால், செயற்கையான மதில்சுவருக்கு அப்பால் உள்ள நமது சகோதர சகோதரிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.  

அந்த செயற்கை மதில்சுவர் தற்போது தகர்க்கப்பட்டுவிட்டதென பிரதமர் தெரிவித்தார்.

 

“நாட்டிலேயே ஜம்மு காஷ்மீரில் மட்டும்தான் அரசியல் சட்டப்பிரிவு 370 நடைமுறையில் இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார். 

 

“கடந்த முப்பது ஆண்டுகளில், தீவிரவாத செயல்களால் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயரிழந்துள்ளனர், ஏராளமான தாய்மார்கள் தங்களது பிள்ளைகளையும், சகோதரிகள் தங்களது சகோதரர்களையும், குழந்தைகள் தங்களது பெற்றோரையும் இழந்துள்ளனர்” என்றும் அவர்  கூறினார்.

 

“ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அதற்கு தீர்வு காண இவ்வளவு காலம் ஆகியிருக்காது” என்று சர்தார் படேல் கூறியதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

 

“அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது என்ற முடிவை, சர்தார் வல்லபாய்  படேலின் பிறந்தநாளில் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

 

“நாம் மேற்கொண்ட இந்த முடிவால், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் தற்போது ஒளிமயமான எதிர்காலம் மற்றும் வளர்ச்சிப்பாதையை நோக்கிப் பயணிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது”.

 

ஜம்மு – காஷ்மீரில் அண்மையில் நடந்து முடிந்த வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “இந்தத் தேர்தலில் 98%-க்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்களான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்திருப்பது, மாபெரும் செய்தியை தருகிறது” என்றார்.

 

     “ஜம்மு-காஷ்மீரில் தற்போது அரசியல் நிலைத்தன்மை சகாப்தம் தொடங்கியுள்ளது. தனிநபர் சுயநலக்காரணங்களுக்காக ஆட்சியமைக்கும் விளையாட்டு முடிவடைவதுடன், பிராந்திய அடிப்படையிலான பாகுபாட்டு உணர்வுகளும் மறையும்” என்று பிரதமர் தெரிவித்தார்.

     “கூட்டுறவு கூட்டாட்சியில் உண்மையான பங்கேற்பு  சகாப்தம் இந்த பிராந்தியத்தில் விரைவில் தொடங்கும். புதிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில்பாதைகள், புதிய பள்ளிக்கூடங்கள், புதிய கல்லூரிகள், புதிய மருத்துவமனைகள் போன்றவை ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்”

 

     வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், “வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பிரிவினைவாத மனப்பான்மை  ஒழிந்து முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டு வருகிறது.  ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும், பன்னெடுங்காலமாக நீடித்து வந்த வன்முறை மற்றும் தடைகளிலிருந்து விடுபட்டு வருகின்றன” என்றார்.

     “சர்தார் படேலின் பணிகளிலிருந்து பெற்ற உத்வேகத்துடன், ஒட்டுமொத்த உணர்ச்சி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்ட ஒருங்கிணைப்பு மூலம் நாட்டிற்கு ஊக்கமளிக்கிறோம். அது போன்ற ஒரு முயற்சிதான் இது, இவை இல்லாமல் 21-ம் நூற்றாண்டில் வலிமையான இந்தியாவை காணமுடியாது” என்று அவர் தெரிவித்தார். 

 

சர்தார் படேலின்  கொள்கைகள் பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், “குறிக்கோளுடன் கூடிய ஒற்றுமை, வெறும் முயற்சி ஒற்றுமை மற்றும் நோக்கங்களுடன் கூடிய ஒற்றுமை ஆகியவை நாட்டின் உறுதித்தன்மைக்கு அவசியம் என்பதுதான் சர்தார் படேலின் கொள்கையாகும். நமது நோக்கம், குறிக்கோள் மற்றும் இலக்குகளில் சமத்துவ மனப்பான்மையைக் கொண்டுள்ளோம்” என்றார்.

இதுபோன்ற தேச ஒற்றுமைப் பாதையை நோக்கி நாம் சென்றால், “ஒரே பாரதம், ஒப்பிலா பாரதம்” என்ற இலக்கை நம்மால் அடையமுடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

PM: अब से कुछ देर पहले ही राष्ट्रीय एकता का संदेश दोहराने के लिए राष्ट्रीय एकता दौड़ संपन्न हुई है।देश के अलग-अलग शहरों में, गावों में, अलग-अलग क्षेत्रों में लोगों ने इसमें हिस्सा लिया है। pic.twitter.com/J1qMwsSItX

— PMO India (@PMOIndia) October 31, 2019

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi govt created 17.19 crore jobs in 10 years compared to UPA's 2.9 crore

Media Coverage

PM Modi govt created 17.19 crore jobs in 10 years compared to UPA's 2.9 crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti
January 02, 2025

The Prime Minister, Shri Narendra Modi today greeted on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti.

Responding to a post by Shri Kiren Rijiju on X, Shri Modi wrote:

“Greetings on the Urs of Khwaja Moinuddin Chishti. May this occasion bring happiness and peace into everyone’s lives.