குஜராத் மாநிலம் அடலையில் அன்னபூர்ணா தாம் அறக்கட்டளையில் சிக்ஷான் பவன் மற்றும் வித்யார்த்தி பவனுக்கு இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், பன்னெடுங்காலமாக மக்கள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு, சமுதாய அமைப்புகள் முன்முயற்சிகள் எடுப்பது இந்தியாவின் பாரம்பரியமாக இருந்து வருகிறது என்று கூறினார். கல்வி மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்துவதில் சமுதாய அமைப்புகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற சமுதாய முயற்சிகள் மக்களுக்கு மிகுந்த பலன்களைத் தந்திருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், கூட்டுறவுத் துறையில் சர்தார் பட்டேல் ஆற்றிய சேவைகளை ஒருபோதும் மறந்துவிட முடியாது என்று கூறினார்.
உணவுப் பதப்படுத்துதல் துறையில் குஜராத் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற மதிப்பு கூட்டும் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் பயன் தரும் என்று அவர் குறிப்பிட்டார்.
அன்னை அன்னபூர்ணாவுக்குப் புகழாரம் சூட்டிய பிரதமர், சமுதாயத்தில் பாலின சமத்துவம் மற்றும் அனைவருக்கும் வளமை கிடைப்பதை உறுதி செய்வதற்கு சமுதாயத்துக்கு அன்னபூர்ணா தாம் அறக்கட்டளை சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
India has a rich history of societies rising to the occasion and taking the lead when it comes to solving the challenges every era has faced.
— PMO India (@PMOIndia) March 5, 2019
Communities have come together to improve irrigation and education. Several people have benefitted through these community efforts: PM
Today we pay homage to Maa Annapurna.
— PMO India (@PMOIndia) March 5, 2019
Annapurna Dham should give our society the strength to ensure there is gender equality and prosperity for everyone: PM @narendramodi
Today at Annapurna Dham, we remember the great Sardar Patel. His efforts towards the cooperative sector will never be forgotten: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 5, 2019
I would urge the people of Gujarat to work on food processing. Such value addition will help both farmers and industries: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 5, 2019