QuoteIICC would reflect India’s economic progress, rich cultural heritage, and our consciousness towards environment protection: PM Modi
QuoteOur Government has begun a series of unprecedented projects for the nation’s development: PM Modi
QuoteOur Government does not shy away from taking tough decisions in national interest: PM Modi
QuoteAll round progress has happened in the last four years only because national interest has been kept supreme: PM Modi

புதுதில்லியில் உள்ள துவார்காவில் இந்திய சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கான அடிக்கல்லை இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த மையம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உயர்ந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான நமது மனநிலை போன்றவற்றை பிரதிபலிப்பதாக அமையும் என்று கூறினார். உலகத் தரத்திலான கட்டமைப்பு மற்றும் எளிதாக வர்த்தகம்  மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் நோக்கத்தின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். 

நாட்டின் மேம்பாட்டிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசு மேற்கொண்டு வரும் பல திட்டங்களை பிரதமர் நினைவுகூர்ந்தார்.  நாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட சுரங்கப்பாதை, நீண்ட இயற்கை எரிவாயு குழாய் பதிப்பு, மிகப்பெரிய செல்பேசி தயாரிப்பு தொழிற்சாலை, ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் உள்ளிட்ட பல திட்டங்களை பிரதமர் சுட்டிக்காட்டினார். இவை திறன் மேம்பாடு, செயல்பாடு மற்றும் விரைந்த புதிய இந்தியாவை பறைசாற்றுவதாக அமைகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

|

உலகில் பல நாடுகள் மாநாடுகள் நடத்துவதற்கு விரிவான வசதிகளை ஏற்படுத்தி உள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த விஷயம் இந்தியாவில் சிந்திக்கப்படாமல் இருந்தது, தற்போது இந்த நிலை மாறுகிறது என்று தெரிவித்தார். 

நாடு வலுவான நிறுவன மற்றும் நிர்வாக திறனோடு முன்னேறி வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இது பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளின் பலனாக வந்தது என்று தெரிவித்தார்.  இதற்கு உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது மற்றும் காலதாமதமின்றி அதை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

இதற்கு உதாரணமாக அண்மையில் பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவினை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் சுமார் 25 ஆண்டுகளாக யோசிக்கப்பட்டு வந்தது, ஆனால் செயல்படுத்தப்படவில்லை. தேசிய நலன் கருதி கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து இந்த அரசு விலகி நிற்காது என்று பிரதமர் உறுதிபட  கூறினார்.  நாட்டு நலனை முதன்மையாக வைத்திருப்பதன் காரணமாகத்தான் கடந்த நான்காண்டுகளில் நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுக்கும் இந்த செயல்பாடு தொடரும் என்று அவர் அறிவித்தார்.

சவால்கள் நிறைந்துள்ள போதும் நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.  எளிமையாக தொழில்கள், வர்த்தகம் மேற்கொள்வது பற்றி குறிப்பிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த முயற்சிகளை மாவட்ட அளவிலும் மேற்கொள்வதற்கு மத்திய அரசு தற்போது நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றார்.

|

Click here to read PM's speech 

  • Mahendra singh Solanki Loksabha Sansad Dewas Shajapur mp December 09, 2023

    नमो नमो नमो नमो नमो नमो नमो नमो नमो नमो
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components

Media Coverage

Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 29, 2025
March 29, 2025

Citizens Appreciate Promises Kept: PM Modi’s Blueprint for Progress