PM Modi lays foundation stone for 'National Tribal Freedom Fighters' Museum in Dhaboi
We remember our freedom fighters from the tribal communities who gave a strong fight to colonialism: PM
Sardar Sarovar Dam would positively impact the lives of people in Gujarat, Maharashtra and Madhya Pradesh: PM Modi
It is because of Sardar Patel we are realising the dream of Ek Bharat, Shreshtha Bharat: PM Modi
The Statue of Unity will be a fitting tribute to Sardar Patel and will draw tourists from all over: PM
India would never forget the excellent leadership of Marshal of the IAF Arjan Singh in 1965: PM

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், சர்தார் சரோவர் அணையை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். கேவடியாவில் உள்ள அணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது பிரார்த்தனைகளும், வேத மந்திரங்களும் ஒலித்தன. இந்நிகழ்ச்சியை குறிக்கும் கல்வெட்டையும் பிரதமர் திறந்து வைத்தார்.

பின்னர், சர்தார் சரோவர் அணையிலிருந்து சிறிது தொலைவில் உள்ள, சாது பேட்டில் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையிலான பிரமாண்ட ஒற்றுமைக்கான சிலை கட்டப்படும் இடத்திற்கு பிரதமர் சென்றார். அங்கு அவருக்கு பணியின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தாபோயில் நடைபெற்ற பெரும் பொதுக்கூட்டத்தில், தேசிய மலைவாழ் சுதந்திர போராட்ட வீரர்களின் அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியை குறிக்கும் கல்வெட்டை பிரதமர் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வு, குஜராத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நர்மதா ஆறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய நர்மதா மகோத்சவத்தின் நிறைவு விழாவாகவும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பெருந்திரளாக மக்கள் கூடியுள்ளது, நர்மதா தாயின் மீது அவர்கள் கொண்டுள்ள மரியாதையை வெளிப்படுத்துகிறது என்றார். விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, அவர் நாட்டை கட்டியமைப்பதற்காக பாடுபாட்ட அனைவரையும் வணங்குவதாக கூறினார். 2022-க்குள் புதிய இந்தியாவை கட்டுவதில் எவ்விதமான தளர்வுமின்றி நாம் உழைக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் சர்தார் பட்டேல் அவர்களின் பார்வையை நினைவுக் கூர்ந்தார். சர்தார் பட்டேல் மற்றும் டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர் ஆகியோர் நீர்பாசனம் மற்றும் நீர் போக்குவரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர் என்றார் அவர்.

வளர்ச்சிக்கு முக்கிய தடைக்கல்லாக, நீர்வள ஆதாரங்களின் பற்றாக்குறை இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த காலங்களில் தாம் எல்லைப்பகுதிகளுக்கு சென்றதை நினைவுக் கூர்ந்த அவர், அங்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்றார். எல்லைப் பகுதிகளில் உள்ள வீரர்களுக்கு நாம் நர்மதா நீரை கொண்டு வந்துள்ளோம் என்றார் அவர்.

 

சர்தார் சரோவர் அணையை உருவாக்குவதற்கு குஜராத்தில் உள்ள துறவிகள் மற்றும் மடாதிபதிகள் மிக முக்கிய பங்கு வகித்தாக அவர் கூறினார். மேலும் அவர், நர்மதா ஆற்றின் நீர், குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு உதவும் என்றார்.

 

நாட்டின் வடக்குப் பகுதியில், கடுமையான தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும், கிழக்குப் பகுதியில் மின்சாரம் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இத்தகைய இடர்பாடுகளை களைவதற்காக, அரசு தொடர்ந்து உழைத்து வருவதாக கூறிய அவர், அதன் மூலம் இந்தியா வளர்ச்சியின் புதிய உச்சங்களை அடையும் என்றார்.

 

சர்தார் பட்டேல் அவர்களுக்கு சிறந்த முறையில் அஞ்சலி செலுத்தும் வகையில் ஒற்றுமைக்கான சிலை இருக்கும் என்றும், அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய மலைவாழ் சமூகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை அவர் நினைவுக் கூர்ந்தார்.

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage