Aviation cannot be about rich people. We have made aviation affordable and within reach of the lesser privileged: PM
PM Modi urges people to use water responsibly, and conserve every drop
From the days when handpumps were seen to be a sign of development, today the waters of Narmada River have been brought for the benefit of citizens: PM
Sursagar Dairy would bring enormous benefit to the people, says PM Modi

பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் சோட்டிலா நகரில் பொதுமக்களிடையில் உரையாற்றினார். முன்னதாக, அவர் ராஜ்கோட் நகரில் பசுமை (Green field) விமான நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். அத்துடன், அகமதாபாத் – ராஜ்கோட் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஆறுவழிப் பாதை, ராஜ்கோட் – மோர்பி இடையிலான மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து பால் பதப்படுத்தி, பாக்கெட்டில் அடைக்கும் முழுமையான தானியங்கி பால் பண்ணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், சுரேந்திர நகர் பகுதியில் உள்ள ஜோரவார்நகர், ரத்னபூர் ஆகிய இடங்களுக்கு குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

 

மக்களிடையே உரையாற்றிய பிரதமர், “சுரேந்திர நகரில் ஒரு விமான நிலையம் அமையும் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாமல் இருந்தது. இத்தயை அபிவிருத்திப் பணிகள் குடிமக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அமைந்தவை. 

 

விமானப்போக்குவரத்து என்பது பணக்காரர்களுக்காக இருக்க முடியாது. விமானப் போக்குவரத்தை மிகவும் எல்லோரும் எளிதில் செல்லவும் ஏழை,எளியவர்களும் பயணம் செய்யும் வகையிலும் மலிவாக்கிவிட்டோம்” என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், “மேம்பாடு என்பதற்கான விளக்கம் இப்போது மாறிவிட்டது. கைக்குழாய்களை அமைப்பது வளர்ச்சி என்று கருதிக் கொண்டிருந்த காலம் போய், இன்று நர்மதை நதியின் நீர் மக்களுக்குக் கொண்டு செல்லும் நிலைக்கு வந்துவிட்டது. நர்மதை நதியின் நீரின் மூலம் சுரேந்திர நகர் மாவட்ட மக்கள் பெரிதும் பலன் பெறுவர். இந்நிலையில் பொதுமக்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு துளியையும் வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.

சுர்சாகர் பால் பண்ணை பொதுமக்களுக்குப் பெரிய அளவில் பலனை அளிக்கும்“ என்று குறிப்பிட்டார். மாநிலத்தில் சிறந்த வகையிலான, பாதுகாப்பான சாலைகளை அமைப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் கடும் முயற்சிகளை மேற்கொண்டார் என்று பிரதமர் நினைவுகூர்ந்து பேசினார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
EPFO membership surges with 1.34 million net additions in October

Media Coverage

EPFO membership surges with 1.34 million net additions in October
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Andhra Pradesh meets Prime Minister
December 25, 2024

Chief Minister of Andhra Pradesh, Shri N Chandrababu Naidu met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister's Office posted on X:

"Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn, met Prime Minister @narendramodi

@AndhraPradeshCM"