India will emerge stronger only when we empower our daughters: PM Modi
In almost 70 years of independence, sanitation coverage which was merely 40%, has touched 98% in the last five years: PM
Our government is extensively working to enhance quality of life for the poor and middle class: Prime Minister

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (12.02.2019) பயணம் மேற்கொண்டார். பஞ்சாயத்துக்களின் பெண் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த பெண் தலைவர்களைப் பாராட்டியதுடன் தூய்மை சக்தி – 2019 விருதுகளையும் வழங்கினார். குருஷேத்ராவில் நடைபெற்ற “தூய்மையான அழகிய கழிப்பறைகள்” பற்றிய கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். ஹரியானாவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த அவர், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஹரியானா முதலமைச்சர் லால் மனோகர் கட்டாரும், பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதிலுமிருந்து, தூய்மை அரசிகள், ஒருங்கிணைந்து வந்திருப்பது புதிய இந்தியாவிற்கான தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹரியானா மக்களுடன் உணர்ச்சிகரமான இணைப்பை ஏற்படுத்திய பிரதமர், ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் என்பதிலிருந்து பெண்குழந்தையைப் பாதுகாப்போம், பெண்குழந்தைக்குக் கல்வியளிப்போம் என்பது வரையிலான முன்னோடித் திட்டங்கள் தொடங்கப்பட்டது ஹரியானாவில் என்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முதலாவது பயனாளி ஹரியானாவின் மகள் என்றும் கூறினார்..

அதிகாரம் பெற்ற பெண்களால் மட்டுமே அதிகாரம் மிக்க சமூகத்தையும், வலுவான தேசத்தையும் உருவாக்க முடியும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். பெண்குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்கவைப்போம், உஜ்வாலா திட்டம், தேசிய ஊட்டச்சத்து இயக்கம், பேறுகால விடுப்பினை 12-லிருந்து 26 வாரங்களாக நீடித்த பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு இயக்கம், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் வீடுகளின் உரிமையை முதலாவதாகப் பெண்களுக்கு வழங்கியது போன்றவை பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார். “பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதித்த முதல் அரசு எங்களுடையது” என்றும் அவர் கூறினார்.

முத்ரா திட்டத்தின் கீழான கடன்களில் சுமார் 75 சதவீதம் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். தீன்தயாள் அந்த்யோதய் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுக்களில் ஆறு கோடிக்கும் அதிகமான பெண்கள் இணைந்திருக்கிறார்கள். இதுபோன்ற சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75,000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு ஒதுக்கப்பட்டதைவிட கடந்த நான்காண்டுகளில் இரண்டரை மடங்கு அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

“தூய்மையான கழிப்பறைகள் இல்லாததால் நமது தாய்மார்களும், மகள்களும் பட்ட துன்பங்கள் என்னைக் கலக்கமடையச் செய்தன. இதனால், செங்கோட்டை கொத்தளத்திலிருந்து தூய்மை இந்தியா இயக்கத்திற்கு நான் உறுதியேற்றுக் கொண்டேன். சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளில் தூய்மையின் அளவு சுமார் 40 சதவீதம்தான் தற்போது இது 98 சதவீதத்தை எட்டியுள்ளது, நான்கரை ஆண்டுகளில் பத்து கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 600 மாவட்டங்களில் உள்ள 5 லட்சம் கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதிலிருந்து தாங்களாகவே விடுபட்டுள்ளன. இது, அவர்களுக்கு கவுரவமான வாழ்க்கையத் தந்துள்ளது” என்று பிரதமர் கூறினார்.

ஜஜ்ஜார் மாவட்டம் பாட்ஷா கிராமத்தில் தேசிய புற்றுநோய் கல்விக்கழகத்தை குருஷேத்ராவில் இருந்தபடியே பிரதமர் திறந்து வைத்தார்.

அனைவருக்கும் குறிப்பாக செலவை ஏற்க முடியாத அல்லது அதிகச் செலவு என்று எண்ணுகிற மக்களுக்கு சுகாதார வசதிகளை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் தமது அரசு மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். தமது அரசின் முயற்சிகளை விவரித்த அவர், சுகாதார மையங்கள் மற்றும் நிலையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டில் 21 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன அல்லது பல்வேறு கட்டங்களில் விரைவாக்க் கட்டப்பட்டு வருகின்றன. 21 எய்ம்ஸ் மருத்துவமனைகளில 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் 2014-க்குப் பிறகு தொடங்கப்பட்டவை. தற்போது 1.5 லட்சம் நல மையங்கள் அமைக்கப்பட்டு ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய தொடர்ச்சியாக நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் கூறினார்.

ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவ முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கவும், கல்வி கற்கவும் உலகத்திலேயே முதலாவதாக குருஷேத்ராவில் அமைக்கப்படவுள்ள ஸ்ரீகிருஷ்ணா ஆயுஷ் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கர்னாலில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் சுகாதார பல்கலைக்கழகத்திற்கும் பாஞ்ச்குலாவில் தேசிய ஆயுர்வேத கல்விக் கழகத்திற்கும் ஃபரிதாபாதில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

“பானிபட் யுத்த அருங்காட்சியகம்” அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், “ஒரே இந்தியா, உன்னத இந்தியா” என்பதற்கு வாழும் உதாரணமாக விளங்குவது பானிபட் யுத்தம் என்று குறிப்பிட்டார்.

இந்த்த் திட்டங்கள் அனைத்தும் ஹரியானா மக்களுக்கு ஆரோக்கியமான, எளிதான வாழ்க்கையை உருவாக்கும் என்று உறுதிபட தெரிவித்த பிரதமர், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றார்.

தூய்மை இந்தியா இயக்கம் கள நிலையில் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் பற்றியும் நைஜீரியாவில் இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றியும் ஆய்வு செய்வதற்கு வந்துள்ள நைஜீரியக் குழுவினரைப் பிரதமர் பாராட்டினார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Andhra Pradesh meets Prime Minister
December 25, 2024

Chief Minister of Andhra Pradesh, Shri N Chandrababu Naidu met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister's Office posted on X:

"Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn, met Prime Minister @narendramodi

@AndhraPradeshCM"