Jharkhand: PM inaugurates and laid the foundation of a slew of projects in the health, education, water supply and sanitation sectors
The Central government is focusing on the health of the people of Jharkhand: PM
There were only three medical colleges since independence in the state before and now three more have been added: PM in Jharkhand

2019 பிப்ரவரி 17 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் நகருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் திருமதி திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர் திரு. ஜயந்த் சின்ஹா, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் திரு. ரகுவர் தாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

திரண்டிருந்த கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர் “நாட்டிற்காக இன்னுயிரை ஈந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் வீரத்திருமகனான திரு. விஜய் சோரேங்கிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஒவ்வொரு அடிவைப்பிலும் இத்தகைய வீரத் தியாகிகளின் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார்.

ஹஸாரிபாக், தும்கா, பலாமு ஆகிய நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தக் கல்லூரிகளுக்கு 2017-ம் ஆண்டில் பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தார். ரூ. 885 கோடி செலவில் இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லூரி வளாகமுமே மாற்றுத் திறனுடையோருக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்படவிருக்கின்ற நவீன மருத்துவ வசதிகளினால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரை கோடி மக்கள் பயனடைவார்கள்.  “ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்ளிட்டு நாடுமுழுவதிலும் பல லட்சக்கணக்கானோர் பயனடைந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்த ஜார்க்கண்ட் மண்ணில்தான் தொடங்கப்பட்டது. இந்த மாநிலத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டமைப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனவும் பிரதமர் குறிப்பிட்டார். ஹஸாரிபாக், தும்கா, பலாமு மற்றும் ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களில் உருவாகவிருக்கும் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவ மனைகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மேலும் பேசுகையில், உடல்நலம், பாதுகாப்பான குடிநீர் ஆகிய இரண்டுமே பிரிக்க முடியாதவை; ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டங்கள் மாநில மக்களின் சிறப்பான உடல்நலத்தை உறுதிப்படுத்துவதாக அமையும் என்று குறிப்பிட்டார். ராம்கர் மற்றும் ஹஸாரிபாக் மாவட்டங்களில் நான்கு கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.  குறிப்பாக எளிதில் பாதிப்பிற்கு ஆளாகக் கூடிய பழங்குடி இனத்தவர் வசிக்கும் பகுதிகளுக்கான குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் மேற்கூறிய இரண்டு மாவட்டங்களில் மேலும் கூடுதலாக ஆறு கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஹஸாரிபாக் நகரில் நகர்ப்புற குடிநீர் வழங்கல் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ரூ. 500 கோடி செலவிலான இத்திட்டம் ஹஸாரிபாக் நகரில் உள்ள 56,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கவுள்ளது.

சாஹிப்கஞ்ச் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நமாமி கங்கா முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட மதுசூதன் படித்துறை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இணையவழி விவசாயப் பொருட்களுக்கான தேசிய விற்பனைத் திட்டத்தின் கீழ் கைபேசிகளை விவசாயிகள் வாங்குவதற்கென பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் நடவடிக்கையை தொடங்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட  பயனாளிகளுக்கு பிரதமர் காசோலைகளை வழங்கினார்.  “இத்திட்டம் 27 லட்சம் விவசாயிகளுக்குப் பயனளிப்பதாக இருக்கும். இந்த நவீன கைபேசியின் மூலம் பருவநிலை பற்றிய தகவல்களை அவர்கள் பெற முடியும் என்பதோடு, விளைபொருட்களின் விற்பனை விலை, அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்கள், விவசாயத்திற்கான புதிய வழிமுறைகள் ஆகியவற்றையும் கூட அவர்களால் பெறமுடியும்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ராம்கர் நகரில் பெண்களுக்கு மட்டுமேயான பொறியியல் கல்லூரியையும் பிரதமர் காணொலிக்காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார். கிழக்குப் பகுதி இந்தியாவில் இத்தகைய கல்லூரி இதுவே முதலாவதாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், பெண்கள் மட்டுமே படிக்கின்ற பொறியியல் கல்லூரிகளில் இந்தியாவில் இது மூன்றாவதாகும் என்றும் கூறினார்.  ஹஸாரிபாக் நகரில் உள்ள ஆச்சார்ய வினோபா பாவே பல்கலைக்கழகத்தில் பழங்குடிகள் பற்றிய ஆய்வு மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பழங்குடிகளின் வாழ்க்கை முறைகள், கலாச்சாரம் ஆகியவை குறித்த அறிவை சேகரித்துப் பரப்புவதில் இந்த ஆய்வு மையம் உதவி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைவரோடும் சேர்ந்து அனைவருக்குமான வளத்தைப் பெருக்குவது என்ற திட்டமானது ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், பழங்குடிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பெண்களுக்கான கல்லூரி, பழங்குடிகளுக்கான மையம் ஆகியவை இத்திசைவழியிலான முயற்சிகளே ஆகும் என்றும் அவர் கூறினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கன்ஹா பால் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் பால் பாக்கெட்களை விநியோகம் செய்தார். சத்துக்குறைவை எதிர்த்துப் போராட உதவும் வகையில் மாணவர்களுக்கு தினமும் 200 மி.லி. பால் வழங்கப்படும்.  “ஒவ்வொரு குழந்தையும் அதன் முழுத்திறனை அடைந்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

நமது நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில்  பங்கேற்ற பழங்குடி இனங்களைச் சேர்ந்த வீரர்களின்  நினைவைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் தனது அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதையும் பிரதமர் வலியுறுத்திக் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பிர்ஸா முண்டா அருங்காட்சியகம் அதற்கு ஓர் உதாரணமாகும் என்றும் கூறினார். 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.