Manipur is rapidly moving ahead on the path of development on every scale: Prime Minister Modi
Whenever there is discussion about electrifying India’s villages, the name of Leisang village in Manipur will also come: PM Modi
North East, which Netaji described as the gateway of India's independence, is now being transformed as the gateway of New India's development story: Prime Minister

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இம்பாலிற்கு வருகை தந்தார். மொறேயில்பெருந்திரளாக கூடியிருந்த பொது மக்கள் கூட்டத்தில், ஒருங்கிணைந்த சோதனை சாவடியை துவக்கி வைத்தார். சவோம்பங்கில் இந்திய உணவு கழகத்தின் உணவு சேமிப்பு கிடங்கு, தோளைதாபி குறுக்கு அணைத் திட்டம் மற்றும் பல்வேறு நீர் விநியோகத் திட்டங்களையும் சுற்றுலா தொடர்பான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

 

சில்சார்-இம்பால் இடையேயான 400 கிலோ வாட் திறன் கொண்ட இரட்டை முனை மின் சுற்றுப் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விளையாட்டுத் துறை தொடர்பான திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மணிப்பூரை சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் குறிப்பாக பெண் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.  

பிரிக்கப்படாத இந்தியாவின் முதல் இடைக்கால அரசாங்கம் மணிப்பூரில் உள்ள மொய்ராங்கில் நிறுவப்பட்டது என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். வட கிழக்கு பிராந்திய மக்கள் ஆசாத் ஹிந்த் ஃபாஜிற்கு அளித்த ஆதரவு குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார். புதிய இந்தியாவின் வளர்ச்சி கதையில் மணிப்பூரிற்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

பிரதமர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கிவைத்தார் அல்லது அடிக்கல் நாட்டினார். இந்த மாநில மக்களின் ‘வாழ்க்கையை எளிமையாக்க’ இத்திட்டங்கள் உதவும் என்று பிரதமர் கூறினார். 

கடந்த நான்கரை ஆண்டுகளில் தான் வட-கிழக்கு மாநிலங்களுக்கு 30 முறைக்கு மேல் வந்துள்ளதாக பிரதமர் கூறினார். வட கிழக்கு பகுதிகள் மாறியுள்ளன, பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட திட்டப் பணிகள் முடிந்துள்ளன.

மொறேயில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியானது சுங்க அனுமதி, வெளிநாட்டு பண மாற்றுதல், குடியேற்ற அனுமதி ஆகியவற்றிற்கு உதவியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள், மத்திய அரசு வளர்ச்சியில் உறுதியாக இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது. 1987-ல் ஆரம்பிக்கப்பட்ட தோளைதாபிகுறுக்கு அணைத் திட்டம், 2014 ஆம் ஆண்டிற்கு பிறகுதான் விரைவுபடுத்தப்படுத்தப்பட்டு இன்று முடிவடைந்துள்ளது. இன்று தொடங்கப்படும் சுற்றுலா திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். அனைத்து திட்டங்களும் விரைவில் முடிவடைய மத்திய அரசு முழுவீச்சில் செயல்பட்டுவருவதை குறித்து எடுத்துரைத்த பிரதமர், கிடப்பில் போடப்பட்ட திட்டப்பணிகளை கண்காணிக்க பிரதமர் அலுவலகம் மூலம் நடத்தப்படும் பிரகதி எனும் காணொலி மாநாடு பற்றி குறிப்பிட்டார். இந்த பிரகதி கூட்டங்கள் மூலம் கிடப்பில் போடப்பட்டிருந்த ரூ. 12 லட்சம் கோடி மதிப்புடைய திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

சவோம்பங்கில் இந்திய உணவு கழகத்தின் உணவு சேமிப்பு கிடங்கு பணி 2016 டிசம்பரில் தான் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று முடிவடைந்துவிட்டது. நீர் விநியோகத் திட்டங்களும் விரைவில் முடிவடைந்துள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“அனைவரும் ஒன்றிணைவோம், அனைவரும் வளர்ச்சி அடைவோம்” எனும் தொலைநோக்குப் பார்வையை நோக்கி மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் இணைந்து பணிபுரிவதாக பிரதமர் கூறினார். மணிப்பூர் மாநில அரசு தொடங்கியிருக்கும் “மலைக்கு செல்வோம், கிராமத்துக்கு செல்வோம்” திட்டத்தை பிரதமர் பாராட்டினார்.

“போக்குவரத்து மூலம் மாற்றம்” என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப வட கிழக்கு மண்டலத்தில் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து மேம்பட்டுள்ளதை பிரதமர் எடுத்துரைத்தார்.  

தூய்மை இந்தியா இயக்கம், துப்புரவு மற்றும் மாற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தில் சந்தேல் மாவட்டத்தின் வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும் மணிப்பூர் மாநிலம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் கூறினார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மணிப்பூர் மாநிலம் முன்னோடியாகத்திகழ்கிறது. மணிப்பூரை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை மேரிகோம் குறித்து பேசிய பிரதமர், இந்தியாவை விளையாட்டு துறையில் வல்லரசாக மாற்றுவதற்குவட-கிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்கு அளிக்கிறது என்று கூறினார். விளையாட்டு துறை பயிற்சி மற்றும் விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில்வெளிப்படைத்தன்மை ஆகியவை சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியா சிறந்து விளங்குவதில் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read PM's speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet extends One-Time Special Package for DAP fertilisers to farmers

Media Coverage

Cabinet extends One-Time Special Package for DAP fertilisers to farmers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 2, 2025
January 02, 2025

Citizens Appreciate India's Strategic Transformation under PM Modi: Economic, Technological, and Social Milestones