It is wonderful how Daman has become a mini-India. People from all over the country live and work here: PM
I congratulate the people and local administration for making this place ODF. This is a big step: PM
The Government is taking several steps for the welfare of fishermen, says PM Modi
Our entire emphasis on the 'blue revolution' is inspired by the commitment to bring a positive difference in the lives of fishermen: PM

ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டங்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்குச்சான்றிதழ்களைவழங்கிய அவர், டாமன் கல்லூரி திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் உரையாற்றினார்.

டாமனில் நடைபெற்ற பொதுக் கூட்டம், அதில் கலந்து கொண்டோர்எண்ணிக்கையில் மட்டுமின்றி, அங்குத் தொடங்கி வைக்கப்பட்டவளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையிலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பிரதமர் தெரிவித்தார்.

தூய்மையாகப்பராமரிக்கப்படும் இடங்களில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், டாமனில் தூய்மைப் பணிகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளிக்குமாறு டாமன் மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.டாமனைத் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக மாற்றியதற்காக, டாமன் மக்களுக்கும், உள்ளூர் நிர்வாகத்திற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.மின்சாரத்தால் இயங்கும் ரிக்ஷாக்கள் மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களைப்பயன்படுத்தியதன் மூலம், டாமன் நிர்வாகம் தூய்மைப்பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றியது, அனைவருக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத்திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

டாமனின் உள்ளார்ந்த கலாச்சாரம் குறித்துப் பெருமிதம் தெரிவித்த பிரதமர், டாமன் ஒரு குட்டி இந்தியாவாக மாறியுள்ளதாகவும், இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவருவதுடன், பணியாற்றியும்வருவதைச்சுட்டிக்காட்டினார். மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய பிரதமர், மீனவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற உறுதியின் காரணமாக, “நீலப்புரட்சி”யில் தாம் முழுக்கவனம் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

உடான் திட்டத்தின் கீழ், ஏர் ஒடிசா நிறுவனத்தின், அகமதாபாத்-டையூ இடையிலான விமானச் சேவையையும் பிரதமர் தொடங்கிவைத்தார். டாமன்-டையூ இடையிலான பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர்சேவையையும் பிரதமர்காணொளிக் காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

புதிதாகப் பிறந்த பெண்குழந்தைகளுக்கு, ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குகற்பிப்போம்”திட்டத்தின் கீழ், தொகுப்புஉதவிகளையும் பிரதமர் வழங்கினார். பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள்களை வழங்கிய அவர், டாமன் மற்றும் டையூ நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட இலவச ஓட்டுநர் பயிற்சி பெற்ற பெண்களுக்குச்சான்றிதழ்களையும்வழங்கினார். எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களுக்கான அனுமதிச் சான்றிதழ்களையும் பிரதமர் விநியோகித்தார். பிரதமரின் கிராமிய மற்றும் நகர்ப்புறவீட்டுவசதித் திட்டம், பிரதமரின்விபத்துக்காப்பீட்டுத்திட்டம், , பிரதமரின் ஆயுள்காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் முத்ராதிட்டப்பயனாளிகளுக்கானஒதுக்கீட்டுஆணைகளையும்பிரதமர் வழங்கினார். மின்சார ரிக்ஷாக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 25, 2024
December 25, 2024

PM Modi’s Governance Reimagined Towards Viksit Bharat: From Digital to Healthcare