QuotePM Modi inaugurates the Mohanpura Irrigation Project & several other projects in Rajgarh, Madhya Pradesh
QuoteIt is my privilege to inaugurate the Rs. 4,000 crore Mohanpura Irrigation project for the people of Madhya Pradesh, says PM Modi
QuoteUnder the leadership of CM Shivraj Singh Chouhan, Madhya Pradesh has written the new saga of development: PM Modi
QuoteIn Madhya Pradesh, 40 lakh women have been benefitted from #UjjwalaYojana, says PM Modi in Rajgarh
QuoteDouble engines of Bhopal, New Delhi are pushing Madya Pradesh towards newer heights: PM Modi

மோகன்புரா திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். இந்தத் திட்டம், ராஜ்கர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை கிடைக்கச் செய்யும். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரை வழங்கும். பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்.

|

மோகன்புரா பகுதியில் பெருமளவில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு, அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தினார். ஒரு நாடு தனது சொந்த சக்தி மற்றும் முயற்சிகளின் மூலமே, பாதுகாப்பாக இருக்கும் என்ற டாக்டர் முகர்ஜி-யின் செய்தியை பிரதமர் நினைவுகூர்ந்தார். தொழிற்கொள்கை, கல்வி மற்றும் மகளிர் மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளிலும் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அளித்த பங்களிப்பை பிரதமர் திரு.நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு டாக்டர் முகர்ஜி அதிமுக்கியத்துவம் அளித்ததையும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் திறன் இந்தியா இயக்கம், இந்தியாவில் தொடங்குவோம், முத்ரா திட்டம், இந்தியாவில் தயாரிப்போம் போன்ற திட்டங்கள், டாக்டர் முகர்ஜி-யின் கனவிலிருந்து உருவானவை என்று பிரதமர் தெரிவித்தார்.

|
|

உயர்லட்சியம் கொண்ட மாவட்டங்களாக அரசால் கண்டறியப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக ராஜ்கர் மாவட்டம் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இங்கு வளர்ச்சிப் பணிகள் தற்போது முதல் வேகமாக நடைபெறும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசு, நாட்டின் தேவைகளைக் கணக்கில் கொண்டு, அதன் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து, 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வதற்காக பணியாற்றி வருகிறது என்றார். வேளாண்மைத் துறைக்காகவும், அதன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் மத்தியப்பிரதேச அரசு செய்த பணிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில் நீர்ப்பாசனப் பகுதிகளின் அளவை அதிகரித்ததற்காக மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில் நீர்ப்பாசன இலக்குகளை நிறைவேற்றுவதற்காக மாநில அரசுடன் தோளோடு தோள் கொடுத்து மத்திய அரசு நடைபோடும் என்று பிரதமர் உறுதியளித்தார். பிரதம மந்திரியின் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின்கீழ், மாநிலத்தில் 14 திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் பிரதமர் கூறினார். நுண்-நீர்ப்பாசனத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

|

மண் வள அட்டைகள், பயிர் காப்பீட்டுத் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை போன்ற விவசாயத் துறைக்காக மத்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளையும் பிரதமர் குறிப்பிட்டார். உஜ்வாலா திட்டம் மற்றும் முத்ரா திட்டத்தின் பயன்கள் குறித்தும் பிரதமர் திரு.நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

Click here to read PM's speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India eyes potential to become a hub for submarine cables, global backbone

Media Coverage

India eyes potential to become a hub for submarine cables, global backbone
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 10, 2025
March 10, 2025

Appreciation for PM Modi’s Efforts in Strengthening Global Ties