மகாராஷ்டிர மாநில ஊரக வாழ்க்கை முறை திட்டத்தின் (UMED) மூலம் அவுரங்கபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மாநில அளவிலான மகிளா சக்ஷம் மேலவா அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களின் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர், சுய உதவிக் குழுக்கள் மூலம் தங்களுக்கு அதிகாரம் பெற்றுக் கொண்டதற்கும், தங்களது சமூகத்தில் அதிகாரம் பெற்றுத் தந்ததற்கும் பங்காற்றிய பெண்களுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.
அவுரங்காபாத் தொழில் நகரம் (AURIC) விரைவில் நகரில் முக்கியமான பகுதியாக மாறும் என்றும், நாட்டில் முக்கியமான தொழில் மையமாக மாறும் என்றும் பிரதமர் கூறினார். டெல்லி – மும்பை தொழில் வழித்தடத்தின் முக்கிய பகுதியாகவும் அவுரங்காபாத் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நகரில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் தருவது என்ற இலக்கை முன்னதாகவே எட்டியதைக் குறிப்பிடும் வகையில், ஐந்து பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை பிரதமர் வழங்கினார். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு ஏழு மாதங்களுக்கு முன்பாகவே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர், மகாராஷ்டிராவில் மட்டும் இந்தத் திட்டத்தின் கீழ் 44 லட்சம் இணைப்புகள் தரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதை சாத்தியமாக்கிய அலுவலர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்ட அவர், விறகு அடுப்புகளில் வெளியாகும் புகையால் துன்புறும் பெண்களின் ஆரோக்கியத்தில் கொண்டுள்ள அக்கறை காரணமாக நம்மால் இந்தச் சாதனையை எட்ட முடிந்தது என்று பிரதமர் கூறினார்.
புதிய எரிவாயு இணைப்புகள் தரப்பட்டுள்ளது மட்டுமின்றி, முழுமையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதன் மூலம், பெரும்பாலும் கிராமப்புற இந்தியாவில் 10,000 புதிய சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். “புதிய சமையல் எரிவாயு நிரப்பும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். துறைமுகங்களின் அருகே உள்ள முனையங்களின் செயல்திறன்கள் அதிகரிக்கப்பட்டு, குழாய் இணைப்புகள் விரிவாக்கப் பட்டுள்ளன. 5 கிலோ எடையுள்ள சிலிண்டர்களைப் பயன்படுத்த ஊக்கம் அளிக்கப் படுகிறது. குழாய் மூலமாகவும் சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கப் படுகிறது. ஒரு குடும்பம் கூட சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் விடுபட்டுவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்.''
தண்ணீரைத் தேடி பெண்கள் அலைய வேண்டிய பிரச்சினையில் இருந்து அவர்களுக்கு விடுதலை தரும் நோக்கத்துடன் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப் பட்டிருப்பதாகப் பிரதமர் கூறினார். “தண்ணீரை சேமித்தல், ஒருவருடைய வீட்டில் தண்ணீர் கிடைக்கச் செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஜல் ஜீவன் திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்துக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு 3.5 லட்சம் கோடி ரூபாய் நிதியை செலவிடும்.''
கழிப்பறை மற்றும் தண்ணீர் ஆகியவை தான் இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான இரண்டு பிரச்சினைகள் என்று திரு. ராம் மனோகர் லோகியா கூறியிருப்பதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த இரு பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டால், பெண்கள் நாட்டுக்குத் தலைமை ஏற்க முடியும் என்று குறிப்பிட்டார். “ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மரத்வாடா பகுதி பெரிய அளவில் பயன்பெறப் போகிறது. நாட்டில் முதலாவது நீர் தொகுப்பு திட்டம் மரத்வாடாவில் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தப் பகுதியில் கிடைக்கும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும்.''
அரசின் திட்டங்களில் மக்கள் பங்கேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், 60 வயதைக் கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் அரசு ஓய்வூதியம் அளிப்பதைக் குறிப்பிட்டார். விலங்குகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கும் இதேபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்றார் பிரதமர்.
ஆஜீவிகா – தேசிய ஊரக வாழ்க்கை முறை திட்டம் பெண்களுக்கான வருமான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது என்று பிரதமர் கூறினார். சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி மானியம் அளிப்பதற்கு 2019 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சுய உதவிக் குழுக்களில் உள்ள, ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கில் கடனாக 5000 ரூபாய் வரை பெற முடியும். இதன் மூலம் தனியார் வட்டிக் கடைக்காரர்களை நாட வேண்டிய பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்று பிரதமர் தெரிவித்தார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்ற முன்முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “முத்ரா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு 1 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும்; அவர்கள் புதிய தொழில் தொடங்கவும், தொழிலைப் பெருக்கிக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும். இதுவரை 20 கோடி ரூபாய் மதிப்புக்கு கடன்கள் அளிக்கப் பட்டுள்ளன. அதில் 14 கோடி ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1.5 கோடி முத்ரா திட்ட பயனாளிகள் உள்ளனர். அதில் 1.25 கோடி பேர் பெண்கள்'' என்று கூறினார்.
சமூகத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்கு பற்றி பிரதமர் குறிப்பிட்டார். “சமூக மாற்றத்துக்கு நீங்கள் முக்கியமான வழிநடத்துநராக இருக்கிறீர்கள். பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது, அவர்களுக்கு கல்வி அளிப்பது, பாதுகாப்பு தருவது ஆகியவற்றில் நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூக வெளித் தோற்றத்தில் நாம் மாற்றங்கள் ஏற்படுத்தியாக வேண்டும். இதில் பெண்களின் பங்கு முக்கியமானது. முத்தலாக் என்ற மோசமான வழக்கத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர். இதுபற்றி நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் சந்திரயான் -2 திட்டம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “பெரிய மைல்கல்லை எட்ட நமது விஞ்ஞானிகள் முடிவு செய்துவிட்டனர். இன்றைக்கு அவர்களுடன் நான் இருந்தேன். அவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்தார்கள். ஆனால் அவர்களிடம் உறுதியான உத்வேகமும் இருந்தது. தவறுகளில் இருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல அவர்கள் விரும்புகின்றனர்'' என்று கூறினார்.
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக விரைவில் இந்தியா தன்னை அறிவித்துக் கொள்ளப்போகிறது.
அனைவருக்கும் வீடுகள் மட்டுமல்ல, இல்லங்களை வழங்க அரசு விரும்புகிறது என்று பிரதமர் கூறினார். “உங்கள் கனவாக இருக்கும் வீட்டை உங்களுக்கு வழங்க நாங்கள் விரும்புகிறோம். நான்கு சுவர்களைக் கொண்ட ஒரு கட்டடத்தை அல்ல, இல்லமாக வழங்க விரும்புகிறோம். அதில் நிறைய வசதிகளை செய்து தர விரும்புகிறோம். இறுதி செய்துகொண்ட விதிகளின்படி நாங்கள் செயல்படாமல், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வீடுகளை உருவாக்குகிறோம். பல்வேறு திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் வசதிகளை ஒருங்கிணைத்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நாங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே ஒரு கோடியே 80 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 2022ல் சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும்போது, அனைவருக்கும் ஒரு நிரந்தரமான, உறுதியான வீடு இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.
வீடுகள் வழங்கும் திட்டம் பற்றி மேலும் குறிப்பிட்ட பிரதமர், “வீட்டுக் கடன்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் வட்டிச் சலுகை அளிக்கப்படுவதால், நடுத்தர மக்கள் வீடுகள் வாங்க முடியும். கட்டப்படும் வீடுகள், பல்வேறு நிலைகளில் இருப்பது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதனால் வெளிப்படைத் தன்மை ஏற்படுகிறது, நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்காக நாங்கள் ரெரா சட்டத்தை உருவாக்கியுள்ளோம். இப்போது இந்தச் சட்டம் பல மாநிலங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான அடுக்குமாடி வீடுகள் உள்ளன'' என்று அவர் கூறினார்.
தனித்தனி துறைகளாக செயல்பட அரசு விரும்பவில்லை. மாறாக வளர்ச்சிக்காக அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒன்று சேர்க்க அரசு விரும்புகிறது என்று பிரதமர் தெரிவித்தார். அரசின் திட்டங்கள் வெற்றிபெற மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
திரு உமாஜி நாயக்கின் பிறந்த தினத்தை ஒட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். அவர் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதையொட்டி, “ஊரக மகாராஷ்டிராவில் மாற்றத்தை ஏற்படுத்துதல்'' என்ற தலைப்பிலான புத்தகத்தை அவர் வெளியிட்டார்.
மகாராஷ்டிரா ஆளுநர் திரு பகத்சிங் கோஷியாரி, மகாராஷ்டிர முதல்வர் திரு தேவேந்திர பட்நாவிஸ், மத்திய தொழில், வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், மகாராஷ்டிர மாநில ஊரக வளர்ச்சி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி பங்கஜா முன்டே, மகாராஷ்டிர தொழில் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. சுபாஷ் தேசாய் உள்ளிட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
सभी बहनो को मेरा सादर नमस्कार. आज गौरी-महालक्ष्मी विसर्जन का दिन होने के बावजूद आप सभी इतनी बड़ी संख्या में उपस्थित हो, इस हेतु आप सभी का बहुत बहुत आभार: PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
आप सभी देश के विकास में, हमारे गांव-देहात को, अपने परिवार को आर्थिक रूप से सशक्त करने में बहुत बड़ी भूमिका निभा रही हैं।
— PMO India (@PMOIndia) September 7, 2019
स्वयं सहायता समूहों के माध्यम से देश को सशक्त करने वाली, नए भारत के निर्माण में जुटी आप सभी बहनों को मैं नमन करता हूं।:PM
आज औरंगाबाद के विकास से जुड़ी एक अहम इमारत का उद्घाटन थोड़ी देर पहले किया गया है। औरंगाबाद इंडस्ट्रियल सिटी की सिग्नेचर बिल्डिंग अब सेवा के लिए तैयार है। नए औरंगाबाद शहर की ये महत्वपूर्ण इमारत होगी। इस इमारत से पूरे औद्योगिक शहर की अनेक व्यवस्थाओं का संचालन होगा।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
औरंगाबाद नया स्मार्ट सिटी तो बन ही रहा है, देश की औद्योगिक गतिविधियों का भी बड़ा सेंटर होने वाला है। दिल्ली मुंबई इंडस्ट्रियल कॉरीडोर का भी ये एक अहम हिस्सा है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
औरंगाबाद नया स्मार्ट सिटी तो बन ही रहा है, देश की औद्योगिक गतिविधियों का भी बड़ा सेंटर होने वाला है। दिल्ली मुंबई इंडस्ट्रियल कॉरीडोर का भी ये एक अहम हिस्सा है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
औरंगाबाद आज एक और बहुत बड़ी सिद्धि का साक्षी बन रहा है। ये सिद्धि आपकी है, देश की करोड़ों बहनों की है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
उज्जवला योजना के तहत 8 करोड़ मुफ्त गैस कनेक्शन देने का जो संकल्प हमने लिया था, वो सिद्ध हुआ है। सिर्फ सिद्ध ही नहीं हुआ बल्कि तय समय से 7 महीने पहले ही लक्ष्य को हमने पा लिया है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
इन 8 करोड़ कनेक्शन में से करीब 44 लाख अकेले महाराष्ट्र में दिए गए हैं।
— PMO India (@PMOIndia) September 7, 2019
इस उपलब्धि के लिए मैं आप सभी को, देश की हर उस बहन को जिसको धुएं से मुक्ति मिली है, बहुत-बहुत बधाई देता हूं, शुभकामनाएं देता हूं।:PM
मुझे संतोष है कि सरकार बनने के 100 दिन के भीतर ही ये काम पूरा हो गया।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
मुझे संतोष है कि सरकार बनने के 100 दिन के भीतर ही ये काम पूरा हो गया।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
एक बहुत बड़ा इंफ्रास्ट्रक्चर इसके लिए जरूरी था, जिसको बहुत ही कम समय में तैयार किया गया। इसके लिए जो 10 हज़ार नए एलपीजी डिस्ट्रिब्यूटर तैयार किए उनमें से अधिकतर को गांवों में नियुक्त किया गया।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
हमारा प्रयास है कि अब देश में एक भी ऐसा परिवार ना रहे जिसके घर पर LPG कनेक्शन ना पहुंचा हो। इसके साथ-साथ इस योजना को और सुविधाजनक बनाने के लिए 5 किलो के सिलेंडर को भी बढ़ावा दिया जा रहा है। देश के अनेक इलाकों में पाइप से गैस पहुंचाने का काम भी तेज़ी से चल रहा है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
अब एक बहुत बड़ा मिशन लेकर हम चले हैं, जिसका सीधा सरोकार भी आप सभी से है, देश की बहनों से है। आप सभी बहनों को पानी के लिए कितनी परेशानी उठानी पड़ती है, इसका मुझे ऐहसास है। देश की हर बहन को इस परेशानी से निजात दिलाने के लिए ही जल जीवन मिशन की शुरुआत की गई है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
इस मिशन के तहत, पानी बचाने के लिए, घर-घर पानी पहुंचाने के लिए पूरा देश संकल्पबद्ध हुआ है। ये तय किया गया है कि आने वाले 5 वर्षों में लगभग साढ़े 3 लाख करोड़ रुपए इस अभियान पर खर्च किए जाएंगे।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
मराठवाड़ा में जो पहला वॉटर ग्रिड बनाया जा रहा है, वो प्रशंसनीय कोशिश है। ये ग्रिड जब तैयार हो जाएगा तो इस क्षेत्र में पानी की उपलब्धता बढ़ जाएगी। हर गांव तक पीने का पानी पहुंचाने, हर खेत तक सिंचाई का पानी पहुंचाने में इससे मदद मिलेगी।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
किसानों को सिंचाई की सुविधा देने से लेकर अनेक कदम केंद्र और राज्य की सरकारें उठा रही हैं। हर किसान परिवार के बैंक अकाउंट में सीधी मदद, 60 वर्ष की आयु के बाद किसानों को पेंशन की सुविधा, पशुधन को स्वस्थ रखने के लिए टीकाकरण अभियान, ऐसे अनेक प्रयास किए जाए रहे हैं।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
दीन दयाल उपाध्याय ग्रामीण आजीविका मिशन के माध्यम से महिलाओं के लिए उद्यमशीलता के नए अवसर बनाए जा रहे हैं। नए भारत में हम महिला कल्याण से आगे निकलकर महिलाओं की अगुवाई में राष्ट्र कल्याण की सोच लेकर आगे बढ़ रहे हैं।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
यही कारण है कि इस वर्ष के बजट में स्वयं सहायता समूहों के लिए महत्वपूर्ण घोषणा की गई है। महिला स्व-सहायता समूहों के लिए ब्याज पर जो सब्सिडी मिलती थी, उसको अब पूरे देश में लागू किया जा रहा है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
इसी तरह समूह की जिन सदस्यों के पास जन-धन बैंक खाता है, उनको 5 हज़ार रुपए तक के ओवर ड्राफ्ट की अतिरिक्त सुविधा मिलेगी। :PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
इसी तरह मुद्रा योजना के तहत भी हर स्व-सहायता समूह की एक महिला सदस्य को 1 लाख रुपये तक का कर्ज मिलेगा। इससे आपको अपना कारोबार शुरू करने या फिर उसे बढ़ाने में मदद मिलेगी।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
मुद्रा योजना बहनों को उद्यमी बनाने में अहम भूमिका निभा रही है। योजना के तहत अभी तक देशभर में करीब 20 करोड़ ऋण बांटे गए हैं। इनमें से लगभग 14 करोड़ ऋण बहनों –बेटियों को मिले हैं। महाराष्ट्र में भी मुद्रा योजना के डेढ़ करोड़ लाभार्थियों में से सवा करोड़ लाभार्थी, महिलाएं ही हैं:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
स्वयं सहायता समूह के रूप में आप आर्थिक सशक्तिकरण के मजबूत माध्यम तो हैं ही, आप सामाजिक परिवर्तन की भी अहम प्रहरी हैं। बेटियों का जीवन बचाने से लेकर उनकी पढ़ाई और उनके लिए सुरक्षित माहौल बनाने के लिए सरकार ने अनेक कदम उठाए हैं।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
लेकिन सिर्फ सरकारी योजना और कानून ही काफी नहीं है। हमें बेटियों के प्रति समाज की सोच में व्यापक परिवर्तन लाने की जरूरत है। इसमें आप बहनों-बेटियों की भूमिका भी अहम है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
हाल में आपने देखा है कि मुस्लिम बहनों को तीन तलाक की कुरीति से निजात दिलाने के लिए एक कड़ा कानून बनाया गया है। अब आपको समाज के भीतर इस कानून को लेकर जागरूकता फैलानी है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
जब ईमानदारी से काम किया जाता है, जब साफ नीयत से काम किया जाता है, तो प्रयासों में भी कोई कमी नहीं रहती।
— PMO India (@PMOIndia) September 7, 2019
आप सभी चंद्रयान को लेकर जो हुआ, उससे परिचित होंगे।:PM
आप सभी चंद्रयान को लेकर जो हुआ, उससे परिचित होंगे। हमारे वैज्ञानिकों ने एक बड़ा लक्ष्य हासिल करने का प्रयास किया था लेकिन उसमें एक बाधा आ गई। इस मिशन के लिए वैज्ञानिक काफी समय से मेहनत कर रहे थे।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
कल रात और आज सुबह मैं उनके बीच था। वो भावुक थे, लेकिन साथ-साथ ही बुलंद हौसले से भरे हुए थे कि अब और तेजी से काम करना है, जो हुआ उससे सबक लेकर, सीखकर आगे बढ़ना है।
— PMO India (@PMOIndia) September 7, 2019
इसरो जैसी प्रतिबद्धता के साथ ही देश को आगे बढ़ाया जा सकता है, लोगों के जीवन को आसान बनाया जा सकता है।PM
अलग-अलग क्षेत्रों में ऐसे ही लगनशील लोगों की प्रतिबद्धता के चलते देश के हर गांव तक बिजली पहुंचाना, 8 करोड़ परिवारों को गैस कनेक्शन देना, ऐसे अनेक काम समय से पहले पूरे हो चुके हैं। अब बहुत जल्द पूरा देश खुद को खुले में शौच से मुक्त घोषित करने की तरफ बढ़ रहा है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
मुझे विश्वास है कि 2022 में, जब हम आजादी के 75 वर्ष का पर्व मनाएंगे, तब के लिए हमने जो संकल्प हमने लिए हैं, वो जरूर पूरे होंगे।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
2022 तक हर गरीब को पक्की छत देने के लक्ष्य की तरफ हम तेज़ी से आगे बढ़ रहे हैं। अब तक देश के गांवों और शहरों में लगभग 1 करोड़ 80 लाख घर बन चुके हैं।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
सबसे पहले तो मैं ये बताना चाहता हूं कि हम इस बात को समझते थे हमें houses नहीं, बल्कि homes का निर्माण करना है, चारदीवारी से घिरे मकान नहीं, आपके सपनों का घर बनाना है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
हमारी सरकार ने जो घर बनवाए, उसके लिए कोई फिक्स्ड फॉर्मूला नहीं अपनाया कि जो कागज पर ढाल दिया, वैसे ही घर पूरे देश में बनाने हैं। बल्कि इसके विपरीत हमने घरों के निर्माण में स्थानीय जरूरतों और वहां के लोगों की इच्छा का भी ख्याल रखा। :PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
घर में सभी प्रकार की बुनियादी सुविधाएं उपलब्ध हों, इसके लिए हमने विभिन्न सरकारी योजनाओं को एक साथ जोड़ दिया। ताकि उन घरों में बिजली, गैस कनेक्शन, शौचालय और ऐसी तमाम सुविधाएं भी साथ के साथ मिल सकें। :PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
हमने उन लोगों के सपनों को भी बल देने की कोशिश की, जो अपना घर खुद खरीदने की इच्छा रखते हैं। सस्ते मकानों को और बढ़ावा देने के लिए सरकार ने होम लोन पर डेढ़ लाख रुपये के ब्याज पर आयकर में अतिरिक्त छूट का प्रावधान किया।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
रियल एस्टेट के क्षेत्र में पारदर्शिता की बहुत कमी थी। इससे घर खरीदने वालों को भारी दिक्कतों का सामना करना पड़ रहा था। सरकार ने रेरा कानून लाकर घर खरीदने वालों के मन में विश्वास भरने का काम किया है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
कुल मिलाकर देखें तो घर को लेकर हमने हॉलिस्टिक अप्रोच से काम किया है। अगर हम अलग-अलग एक-एक योजना के साथ सामने आते, तो इतनी बड़ी सफलता मिलना मुश्किल था। बड़े पैमाने पर समाधान तभी संभव है जब सारे विभाग, सारे फैसले, एक बड़े लक्ष्य को सोचकर किए जाएं।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
सारे मंत्रालय और सारी योजनाएं मिलकर एक ट्रैक पर काम करें। यही हमारी सरकार के कामकाज की पहचान रही है। टुकड़ों में नहीं समग्रता में सोचो और सबको इकट्ठा करके काम करो।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
पिछले 5 वर्षों में स्वच्छता से लेकर बैंक से लेनदेन तक, समाज के व्यवहार में परिवर्तन के जितने भी जनआंदोलन हुए हैं, उसमें आप सभी ने बढ़-चढ़कर योगदान दिया है।:PM
— PMO India (@PMOIndia) September 7, 2019
यही कारण है कि आने वाले 5 वर्षों के लिए भी जो संकल्प लिए गए हैं, उनकी सिद्धि के लिए आप पर मुझे बहुत भरोसा है।
— PMO India (@PMOIndia) September 7, 2019
ये विश्वास निरंतर मजबूत होगा, इसी कामना के साथ आपका बहुत बहुत आभार।:PM