பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடந்த எட்டாவது சர்வதேச சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்களின் குறிப்பாக சவுராஷ்டிரா பட்டேல் சமுதாயத்தினரின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் எப்போதும் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார்கள் என்று கூறினார். இந்திய பாஸ்போர்ட்டுக்கு உலகம் முழுவதும் காணப்படும்  மதிப்பை வைத்து அவர்களது முயற்சிகளை எடை போடலாம் என்று அவர் தெரிவித்தார்.

தூய்மை இந்தியா போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். வெளிநாடுவாழ் இந்திய சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து குடும்பத்தினரையாவது இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  இது ஒரே பாரதம், சிறந்த பாரதம் இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்ற புதிய வழியை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும். மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்களிக்கலாம் என்பது குறித்தும் பிரதமர்  விளக்கினார்.

வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி முதல் மகாத்மாகாந்தியின் 150-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டங்கள் இந்தியாவில் தொடங்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரில் பிரம்மாண்டமான  ஒற்றுமை சிலை  நர்மதை நதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி அந்தப்பணிகள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார். பணிகள் நிறைவடைந்ததும் உலகின் மிக உயரமான சிலையாக அது இருக்கும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு.நரேந்திரமோடி, இந்தியா தற்போது உலகின் ஒளிரும் நட்சத்திரமாக காணப்படுகிறது என்று தெரிவித்தார். இந்தியா தற்போது விரைவான பொருளாதார வளர்ச்சி, நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி, ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை போன்ற முன்முயற்சிகள் மக்கள் நேர்மையுடன் தொழில் நடத்துவதற்கு உதவி உள்ளது. இந்த முன்முயற்சிகள் காரணமாக எளிதாக தொழில் புரியும் நாடுகளின் கடந்த நான்காண்டு பட்டியலில் இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய இந்தியாவைப் படைக்கும் கனவை நனவாக்க வெளிநாடுவாழ் இந்திய சமுதாயத்தினர் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
New trade data shows significant widening of India's exports basket

Media Coverage

New trade data shows significant widening of India's exports basket
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 17, 2025
May 17, 2025

India Continues to Surge Ahead with PM Modi’s Vision of an Aatmanirbhar Bharat