Quoteஉத்தரப் பிரதேசத்தில் ரூ. 60,000 கோடி மதிப்பீட்டில் 81 திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
Quoteநமது அரசின் நோக்கம் மக்களுடைய வாழ்க்கையில் சிரமங்களை எளிமையாக்குவதும் வாழ்க்கை வசதிகளை எளிதாக்குவதும் ஆகும்: பிரதமர் மோடி
Quoteஉத்தரப் பிரதேசத்தில் ஐந்து மாதத்திற்குள் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
Quoteமுதலீட்டாளர் உச்சிமாநாட்டின் அசாதாரண வெற்றி முன்னோடியில்லாத வகையில் வேலைவாய்ப்புகள் மற்றும் பலன்கள் பெறப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று லக்னோவுக்கு பயணம் மேற்கொண்டார். உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ. 60,000 கோடி மொத்த முதலீட்டுடன் கூடிய 81 திட்டங்களை அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தை தொழில்மயமாக்கவும், 2018 ஃபிப்ரவரி மாதம் நடைபெற்ற உத்தரப் பிரதேச முதலீட்டாளர் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு இந்த திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.

|

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை பற்றி பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். இதனால் உருவாகியுள்ள சூழலை மத்திய அரசு கண்காணித்து வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மக்கள் மீது கவனம் செலுத்தும் அரசாக மக்களின் வாழ்க்கை முறை எளிதாக்கப்படுவதாகவும், வாழ்க்கையில் எளிமை மேம்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தை மாற்றியமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இன்று இந்தக் கூடுதல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். ஐந்தே மாதங்களில் இந்த திட்டங்களின் முன்னேற்ற வேகம் (சிந்தனையில் இருந்து அடிக்கல் நாட்டப்படுவது) சிறப்பான முறையில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

|

இந்த சாதனைக்காக மாநில அரசுக்கு அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்த திட்டங்கள் மாநிலத்தின் சில பகுதிகளுடன் மட்டும் வரையறுக்கப்படாமல் சமத்துவமான வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசின் புதிய பணிக் கலாச்சாரத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில் மாற்றம் கண்டுள்ள முதலீட்டு சூழல், வேலைவாய்ப்பு, வர்த்தகம், நல்ல சாலைகள், போதுமான மின்சார விநியோகம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளைக்கொண்டு வருவதாக அவர் கூறினார். இந்த திட்டங்கள் பல புதிய வேலைவாய்ப்புக்களைக் கொண்டு வருவதுடன் சமுதாயத்தின் பல தரப்பினருக்கும் பயன் அளிக்கும் என அவர் தெரிவித்தார். இந்த திட்டங்களின் மூலம் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற முன்னோடி திட்டங்களுக்கு பெரும் ஊக்கம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

|

கிராமப் புறங்களில் பரவியுள்ள மூன்று லட்சம் பொது சேவை மையங்கள் கிராமங்களில் வாழ்க்கையில் சிறந்த மற்றும் வெளிப்படையான சேவைகளின் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு தடைகற்களை உடைத்தெறிந்து தீர்வுகள் மற்றும் ஒத்திசைவில் கண்ணோட்டம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் ஃபோன் உற்பத்தி நாடாக இந்தியா திகழ்வதாக கூறிய அவர், இந்த உற்பத்தி புரட்சியில் உத்தர பிரதேசம் முன்னிலை வகித்து வருகிறது என அவர் கூறினார்.

|

உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவடையும்போது, இந்தியாவில் வர்த்தகம் செய்வது மேலும் எளிதாகி, சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும் என பிரதமர் தெரிவித்தார். தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி நகர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் மின் விநியோகத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விளக்கினார். பாரம்பரிய எரிசக்தியிலிருந்து பசுமை எரிசக்தியை நோக்கி நாடு முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். சூரிய மின்சக்தியின் தொகுப்பாக உத்தரப் பிரதேசம் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார். 2013-14ல் 4.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் எரிசக்தி பற்றாக்குறை இன்று ஒரு சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

|

மக்களின் பங்களிப்பு மூலம் மக்களின் விருப்பங்கள் நிறைவேறுவது தான் புதிய இந்தியா உருவாவதற்கான வழித்தடம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's apparel exports clock double digit growth amid global headwinds

Media Coverage

India's apparel exports clock double digit growth amid global headwinds
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 18, 2025
April 18, 2025

Aatmanirbhar Bharat: PM Modi’s Vision Powers India’s Self-Reliant Future