QuoteGovernment is making every effort to ensure good connectivity to Prayagraj: PM Modi
QuoteKumbh unites us and gives a glimpse of Ek Bharat, Shreshtha Bharat: PM Modi
QuoteThe actions of the Congress party are proving that it considers itself above country, democracy, judiciary and public: PM Modi

பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலைய வளாகம், கும்பமேளாவையொட்டி அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

|

கங்கா பூஜை செய்த பிரதமர், தூய்மை கும்ப கண்காட்சியையும் பார்வையிட்டார். பிரயாக்ராஜில் அக்ஷய்வாத்தையும் அவர் பார்வையிட்டார். பிரயாக்ராஜில் உள்ள ஆண்டவா பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

|

அங்கு திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்த ஆண்டு அர்த் – கும்பமேளாவுக்கு வருகை தரும் யாத்ரீகர்கள், அக்ஷய்வாத்தையும் பார்வையிட முடியும் என்றார். இன்று அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். புதிய விமான முனையம் ஒரு சாதனையாக, ஓராண்டு காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

|

 

|

 

|

 

|

 

|

 

|

 

|

 

|

 

|

 

|



|



|

 

|

அர்த் – கும்பமேளாவுக்கு வரும் யாத்ரீகர்கள் ஒரு புதிய அனுபவத்தை உணர்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் வளமான கடந்த காலம் மற்றும் வலிமையான எதிர்காலத்தை எடுத்துரைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

|

கங்கை நதி தூய்மையாக ஓடுவதை உறுதி செய்ய தேவையான பணிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். அந்த வகையில், கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் கங்கை கரையை அழகுபடுத்தும் பணிகள் நீண்டநெடிய பணி என்றும் அவர் கூறினார்.

|

கும்பமேளா, இந்தியா மற்றும் இந்தியத்துவத்தின் அடையாளச் சின்னம் என்றும் பிரதமர் வர்ணித்தார். கும்பமேளா நடத்துவது மத நம்பிக்கை மட்டுமின்றி, கவுரவமும் ஆகும்.

|

எனவே, கும்பமேளாவுக்கு வரும் ஒவ்வொருவரின் நலனிலும் அக்கறை செலுத்தப்படும்.

|

 

“புதிய இந்தியா” எவ்வாறு பாரம்பரியத்தையும் நவீனமயத்தையும் ஒருங்கிணைக்கிறது என்பதை பிரதிபலிப்பதாக அர்த்-கும்பமேளா அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

|

நாட்டின் நீதித்துறையின் மீது தேவையற்ற அழுத்தத்தை கொடுத்துவரும் சில சக்திகளிடம் நாடு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். 

|

 

|

 

இந்த சக்திகள் தங்களை அனைத்து அமைப்புகளுக்கும் மேலானவர்கள் கருதிக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Ayurveda Tourism: India’s Ancient Science Finds a Modern Global Audience

Media Coverage

Ayurveda Tourism: India’s Ancient Science Finds a Modern Global Audience
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
May 06, 2025

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் மே 25 ,ஞாயிற்றுக்கிழமையன்றுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால்நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கீழே உள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்