மாண்புமிக்கோரே,
மதிப்பிற்குரிய விருந்தினர்களே,
கனவான்களே, சீமாட்டிகளே,
இன்றைய தினம் பேச்சுக்கள் தினமாகவே தோன்றுகிறது. சற்று முன்பாக நாம் அதிபர் ஜீ மற்றும் பிரதமர் மே ஆகியோர் பேசக் கேட்டோம். இப்போது நான் பேசவிருக்கிறேன். ஒரு சிலருக்கு இந்தப் பேச்சுக்கள் சற்று அதிகமாகவே தோன்றலாம். அல்லது 24/7 செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அதிகப்படியான பேச்சுக்கள் பிரச்சினையாக இருக்கலாம்.
இரண்டாவது ரைசினா பேச்சுக்களின் தொடக்க உரையை ஆற்றுவதில் மிகுந்த பெருமை அடைகிறேன். மாண்புமிகு கார்சாய் அவர்களே, பிரதமர் ஹார்ப்பர் அவர்களே, பிரதமர் கெவின் ருட் அவர்களே, உங்கள் அனைவரையும் தில்லியில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வந்துள்ள அனைத்து விருந்தினருக்கும் என் வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 2 நாட்களில் நம்மைச் சுற்றியுள்ள உலகின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு உரையாடல்களை நடத்த உள்ளீர்கள். இந்த உலகின் உறுதி தன்மை தற்போதைய மாறி வரும் நிலமை ஆகியவை குறித்து விவாதிப்பீர்கள்: அதன் கருத்து வேறுபாடுகள் அபாயங்கள் குறித்து: அதன் வெற்றிகள், வாய்ப்புகள் குறித்து : அதன் கடந்தகால நடத்தைகள் எதிர்வரும் நிலைமை குறித்த முன்கூட்டிய கணிப்பு: அதன் கருப்பு அன்னங்கள் மற்றும் புதிய இயல்பு நிலைகள் எல்லாம் குறித்து விவாதிப்பீர்கள்.
நண்பர்களே,
2014 மே மாதம் இந்திய மக்கள் புதிய இயல்பு நிலை ஒன்றைக் கொண்டு வந்தனர். எனது அருமை இந்தியத் தோழர்கள் ஒரே குரலில் எனது அரசிடம் மாற்றத்திற்குரிய உத்தரவை ஒப்படைத்தனர். மனப்பான்மை மாற்றங்கள் மட்டும் அல்ல. மன நிலைகள் மாற்றத்தையும் சேர்த்தே ஒப்படைத்தனர். தைரியமான முடிவுகளை எடுக்கும் மாற்றங்கள். இந்த உத்தரவு நடைமுறைப்படுத்த சீர்திருத்தம் மட்டும் போதாது, நமது பொருளாதாரம் மற்றும் சமூகம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.இந்திய இளைஞர்களின் தன்னம்பிக்கை அபிலாசை ஆகியவற்றில் புதைந்து கிடக்கும் மாற்றங்கள், இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களது அளப்பறிய சக்தி குறைந்திருக்கும் மாற்றங்கள். ஒவ்வொரு பணி நாளின் போதும் இந்தப் புனித சக்தியிலிருந்து நான் ஆற்றல் பெறுகிறேன். ஒவ்வொரு பணி நாளிலும் எனது பணிப்பட்டியல் இந்தியாவை வளத்திற்காகவும் அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பிற்காகவும் மாற்றி அமைக்கும் தொடர்ச்சியான சீர்திருத்த முயற்சியின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.
நண்பர்களே,
இந்தியாவின் மாற்றம் அதற்கு வெளியே உள்ள நிலவரத்திலிருந்து தனிமைப் படுத்த முடியாதது என்பது எனக்குத் தெரியும். எமது பொருளாதார வளர்ச்சி, எமது விவசாயிகளின் நலன்கள், எமது இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கள், மூலதனம், தொழில்நுட்பம், சந்தைகள், வளங்கள் ஆகியன நமக்கு கிடைக்கும் நிலை, நமது நாட்டின் பாதுகாப்பு இவை அனைத்தும் உலகத்தில் ஏற்படும் மேம்பாடுகளால் ஆழ்ந்த தாக்கத்திற்கு உள்ளாகின்றன. அது சமயம் இதன் மாற்றும் கூட உண்மையானதே.
இந்தியாவின் நிலையான தொடர்ந்த எழுச்சி உலகத்திற்கு தேவை. அதே போல இந்தியாவுக்கு உலக வளர்ச்சி அவசியமானது. நமது நாட்டை மாற்றி அமைக்கும் நமது ஆசை வெளி உலகுடன் பிரிக்க முடியாத இணைப்புக் கொண்டது. எனவே உள்நாட்டில் இந்தியாவின் விருப்பத் தேர்வுகளும் சர்வதேச முன்னுரிமைகளும் இணைப்புத் தெரியாத தொடர்ச்சியின் ஒரு பகுதியே என்பது தெளிவாகும். இந்தியாவின் மாற்றத்திற்கான இலக்குகளில் இது ஆழமாக நங்கூரம் இடப்பட்டுள்ளது.
நண்பர்களே,
மனித வளர்ச்சி மற்றும் வன்முறை துன்பங்களின் விளைவான தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியா தனது மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நிலைகளில் உலகம் விரிவான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. உலக அளவில் இணைக்கப்பட்ட சமுதாயங்கள், டிஜிட்டல் வாய்ப்புகள், தொழில்நுட்ப மாற்றங்கள், அறிவுப் பெருக்கம் புதுமைப் படைப்பு ஆகியன மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. ஆனால் மந்தமான வளர்ச்சி, பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை ஆகியனவும் உற்சாகத்தை மட்டுப்படுத்தும் உண்மைகளாகும். இந்த கணிணி யுகத்தில் பூகோள எல்லைகளின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. ஆனால் நாடுகளுக்கு உள்ளேயே சுவர்கள், வர்த்தகம் மற்றும் குடியேற்றத்துக்கு எதிரான உணர்வுகள், வளர்ந்துவரும் சுய இன மற்றும் பாதுகாப்பு மனப்பான்மைகள் ஆகியவை தலைத் தூக்குவதற்கான அத்தாட்சிகள் உலகெங்கும் காணக்கிடக்கின்றன. விளைவாக உலகமயமாக்கல் நலன்கள் பாதிக்கப்படுகின்றன பொருளாதார பலன்கள் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. நிலையற்றத் தன்மை, வன்முறை, தீவிரவாதம், ஒதுக்கி வைத்தல், வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் ஆகியன ஆபத்தான திசைகளில் தொடர்ந்து பெருகி வருகின்றன. இத்தகைய சவால்கள் பரவுவதற்கு அரசு அல்லாத அமைப்புகள் முக்கிய பங்களித்து வருகின்றன. வித்தியாசமான உலகத்தினால் வித்தியாசமான உலகத்திற்கு உருவாக்கப்பட்ட நிறுவனங்களும் அமைப்புகளும் தற்போது காலாவதி ஆகிவிட்டன. திறம்பட்ட பலத்தரப்புத் தன்மைக்கு இவை இடையூறாக உள்ளன. உலகில் அமைப்பு முறைகள் மாறி வரும் நிலையில், பனிப்போரின் பாதுகாப்பு தெளிவுத்தன்மைக்குப் பின் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதற்கு பதிலாக ஏற்பட்டுள்ள அமைப்புகள் இன்னும் முழு அளவில் நிலை கொள்ளவில்லை. ஆனால் இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. அரசியல் மற்றும் ராணுவ அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. பல துருவ உலகம் மற்றும் விரைவாக பல துருவ மயமாகும் ஆசியா ஆகியன இன்றைய நிலையில் பெரிய உண்மைகள். நாம் அதனை வரவேற்கிறோம்.
ஏனெனில் இது பல நாடுகளின் வளர்ச்சி நிலவரத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. இது பலதரப்பு குரல்களை ஏற்றுக்கொள்கிறது. மிகச் சிலரின் கருத்துக்கள் உலக அலுவல் பட்டியலை அமைக்க அனுமதிக்கக் கூடாது. எனவே ஒதுக்கி வைத்தல் நிலையை வளர்க்கும் குறிப்பாக இவற்றை ஆசியாவில் வளர்க்கும் உள்ளுணர்வுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே இந்த மாநாட்டின் மையக்கருத்தான பல துருவத்தன்மையுடன் கூடிய பலதரப்புத்தன்மை என்பது தற்காலத்துக்கு மிகவும் ஏற்றது.
நண்பர்களே,
பாதுகாப்பு ரீதியில் குழப்பமான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். வரலாற்று பின்ணியில் பார்த்தால் மாறிவரும் உலகம் புதிய நிலவரமாக அவசியம் இருந்தாக வேண்டும் என்பது இல்லை. ஒப்பிட்டுப்பார்க்கும் நெறிகள் விரைவாக மாறிவரும் நிலையில் நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதுவே முக்கியமான கேள்வி. நமது தெரிவுகளும் நடவடிக்கைகளும் நமது தேசிய ஆற்றலின் அடிப்படையில் அமைந்தது.
நமது பாதுகாப்பு நோக்கங்கள் நமது நாகரீகத்தின் அம்சங்களான உண்மைத்தன்மை, இணைந்து வாழுதல், கூட்டுறவு ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவை நமது தேசிய நலன்கள் குறித்த பொறுப்புள்ள, தெரிவான வாசகங்களில் இது காணப்படுகிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்தியர்களின் வளம், நமது குடிமக்களின் பாதுகாப்பு ஆகியன மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை ஆனால் சுயநலம் மட்டுமே நமது பண்பாடு அல்ல, நமது நடத்தை நெறியும் அல்ல. நமது செயல்கள் மற்றும் அபிலாசைகள், திறன்கள் மற்றும் மனித ஆற்றல் மூலதனம், ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகை அமைப்பு, வலு மற்றும் வெற்றி ஆகியன ஒட்டுமொத்த மண்டல மற்றும் உலக வளர்ச்சிக்கு நங்கூரமாக தொடரும். நமது பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மண்டல மற்றும் உலக வாய்ப்புகளை பிரதிபலிக்கிறது. அது அமைதிக்கான ஆற்றல், நிலைத்த தன்மைக்கான காரணி, மண்டல மற்றும் உலக வளத்திற்கு சக்தி தரும் எந்திரம். எனது அரசுக்கு இது சர்வதேச ஈடுபாட்டு பாதையை குறிக்கிறது. இந்தப் பாதையின் முக்கிய அம்சங்கள்:-
- இணைப்புத்திறனை மீண்டும் அமைத்தல், இணைப்பு பாலங்களை மீட்டுக்கொணருதல், அண்டை நாடுகளுடனும் சேய்மை நாடுகளுடனும் இந்தியாவை மீ்ண்டும் இணைத்தல்
- இந்தியாவின் பொருளாதார முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட உறவுகளை உருவாக்குதல்
- கணக்கில் எடுத்தே ஆக வேண்டும் என்ற அளவுக்கு இந்தியாவின் மனிதவள ஆற்றலை உயர்த்தி நமது இளைஞர்களின் திறன்களை உலகத்தேவைகளுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ப மாற்றியமைத்து இணைப்புகளை உருவாக்கும்.
- இந்தியப் பெருங்கடல், பசிபிக் கடல் ஆகியவற்றில் உள்ள தீவுகள் முதல் கரிபிய தீவுகள் வரை, மாபெரும் ஆப்பிரிக்க கண்டம் முதல் அமெரிக்க கண்டம் வரை, மேம்பாட்டு ஒத்துழைப்பை உருவாக்கி வளர்த்தல் உலக சவால்களுக்கு ஏற்ற இந்திய திறன்களை உருவாக்குதல்
- உலக நிறுவனங்கள் அமைப்புகள் ஆகியவற்றை சீரமைத்து புத்துயிரூட்டி உருவாக்க உதவுதல். இந்திய நாகரீகத்தின் பாரம்பரியங்களான யோகா, ஆயுர்வேதா போன்றவற்றின் நன்மைகளை உலக நன்மைக்காக விரிவடையச் செய்தல். எனவே மாற்றம் உள்நாட்டு முக்கியத்துவம் மட்டுமே கொண்டதல்ல நமது உலகளாவிய செயல் பட்டியலையும் அது உள்ளடக்கியது.
என்னைப் பொறுத்தவரை எல்லோரும் இணைவோம், எல்லோரும் முன்னேறுவோம் என்பது இந்தியாவிற்கு மட்டுமான நெடுநோக்கு அல்ல. அது அகில உலகிற்குமான ஒரு நம்பிக்கை. அது பல்வேறு அடுக்குகளில், பல்வேறு மையக்கருத்துகளில் பல்வேறு புதிய அமைப்புகளில் காணக்கிடைக்கிறது.
புவியியல் அமைப்பு, பகிர்ந்து கொள்ளப்பட்ட அக்கறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நமக்கு மிக நெருக்கமாக உள்ளவர்கள் இப்போது காணலாம். நமது உறுதியான அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அணுகுமுறை காரணமாக எமது அண்டை நாடுகளில் பெரிய கருத்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தெற்காசியா மக்கள் ரத்த உறவு, பகிர்ந்துக் கொள்ளப்பட்ட வரலாறு, பண்பாடு, அபிலாசைகள் ஆகியவற்றால் இணைந்தவர்கள் இந்தப் பகுதியின் இளைஞர்கள் மாற்றம், வாய்ப்புகள், வளர்ச்சி, வளம் ஆகியவற்றை தேடிவருகிறார்கள். நன்கு வளரும், நன்கு இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த அண்டை நாடுகளை உருவாக்குவதே எனது கனவாகும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த மண்டலத்தை ஒருங்கிணைக்க எமது அண்டை நாடுகள் அனைத்துடனும் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம். தேவைப்படும் இடங்களில் எல்லாம் மண்டலத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக எங்கள் பழமைச் சுமைகளை களைந்துள்ளோம். எங்கள் முயற்சிகளின் விளைவுகளை அனைவரும் காணலாம்.
ஆப்கானிஸ்தானில் போக்குவரத்தில் தொலைவும் கடினமும் இருந்தாலும் எங்கள் பங்களிப்பு மறுசீரமைப்புக்கு உதவுகிறது. நிறுவனங்களையும் திறன்களையும் அமைத்து தந்துள்ளது. இதன் பின்னணியில் நமது பாதுகாப்பு ஈடுபாடுகள் ஆழமாகி உள்ளன. ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்ற கட்டிடத்தை அமைத்தது, இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்புறவு அணைக்கட்டியது ஆகியன மேம்பாட்டு ஒத்துழைப்பை வடிவமைப்பதில் எங்களது அர்ப்பணிப்பிற்கு சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றன.
வங்காளதேசத்துடன் மேலும் கூடுதலான ஒருங்கிணைப்பையும் அரசியல் புரிந்துணர்வையும் டிஜிட்டல் இணைப்புகள், கட்டமைப்புத் திட்டங்கள், மிக முக்கியமாக நில மற்றும் கடல் எல்லைகளை வரையறுப்பதில் தீர்வு ஆகியவற்றின் மூலம் ஏற்படுத்தி உள்ளோம்.
நேபாளம், இலங்கை, பூடான், மாலத்தீவுகள் ஆகியவற்றில் அடிப்படை வசதி, இணைப்புத்திறன், எரிசக்தி, மேம்பாட்டுத்திட்டங்கள் போன்ற செயல்பாடுகளில் எமது ஒட்டுமொத்த ஈடுபாடு இந்த மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திர தன்மைக்கு ஆதாரமாக விளங்குகிறது.
தெற்காசிய முழுமைக்குமான அமைதி மற்றும் நல்லிணக்கமான உறவுகளுக்கு அண்டை நாடுகளுக்கான எனது நெடுநோக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த நெடுநோக்கு காரணமாகவே எனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான உள்ளிட்ட அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்திருந்தேன். இந்த நெடுநோக்கிற்காகவே நான் லாகூர் பயணமானேன். ஆனால் இந்தியா மட்டுமே அமைதி பாதையில் நடக்க இயலாது. அந்த பாதையில் பாகிஸ்தானும் பயணப்பட வேண்டும். இந்தியாவுடன் பேச்சுக்களை நோக்கி பயணப்பட வேண்டுமானால் பாகிஸ்தான பயங்கரவாதத்தை விட்டு விலகி நடக்க வேண்டும்.
சீமாட்டிகளே, கனவான்களே,
மேற்கு பகுதியை பொறுத்தவரை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், கத்தார், ஈரான் உள்ளிட்ட வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளுடன் எனது பங்களிப்பை மிகக்குறுகிய காலத்தில் உறுதியற்ற குழப்பமான சூழலுக்கும் அப்பாற்பட்டு மேம்படுத்தி எமது உறவுகளை மறு வரையறை செய்துள்ளோம். அடுத்த வாரம் நடைபெற உள்ள இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் அபுதாபியின் பட்டத்து இளவரசரை முதன்மை விருந்தினராக வரவேற்க உள்ளேன். மாறிவரும் உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் எங்கள் உறவுகளின் உண்மை நிலையையும் மாற்றி அமைத்துள்ளோம்
இதன் காரணமாக எமது பாதுகாப்பு அக்கறைகள் மேம்பட்டுள்ளன. பொருளாதார, எரிசக்தி உறவுகள் வளர்ந்து வலுப்பட்டுள்ளன, சுமார் எண்பது லட்சம் இந்தியர்களின் பொருளாதார சமூக நலன்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. மத்திய ஆசியாவிலும் எங்கள் உறவுகளை பகிர்ந்துக் கொண்ட வரலாறு பண்பாடு ஆகியவற்றின் அடித்தளத்தில் அமைத்து வளமான பங்களிப்பின் புதிய காட்சிகளை திறந்துள்ளோம். ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் நாங்கள் உறுப்பினர் ஆனது மத்திய ஆசிய நாடுகளுடனான எங்கள் உறவுகளுக்கு வலுவான நிறுவன இணைப்பை வழங்கியுள்ளது. மத்திய ஆசிய சகோதர சகோதரிகளின் ஒட்டுமொத்த வளம் கருதி நாங்கள் முதலீடு செய்துள்ளோம். அந்த மண்டலத்தில் நிலவும் நீண்டகால உறவுகளுக்கு வெற்றிகரமான புதிய பின்னணியை அமைத்துள்ளோம். கிழக்கை பொறுத்தவரை எமது கிழக்கு நோக்கிய செயல்கொள்கை தென்கிழக்கு ஆசியா நாடுகளுடனான ஈடுபாட்டை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது. இதற்கென கிழக்கு ஆசிய உச்சி மாநாடு போன்ற அம்மண்டலத்தில் உள்ள நிறுவன அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் நெருங்கி ஒத்துழைத்து வருகிறோம். ஆசியான் அமைப்புடன் எமது ஒத்துழைப்பு காரணமாக இம்மண்டலத்தின் வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, மேம்பாடு, பாதுகாப்பு ஆகியன மேம்பட்டுள்ளன. இதனால் இந்த மண்டலத்தில் எமது விரிவான பாதுகாப்பு ஆர்வங்களும் ஸ்திரத்தன்மையும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சீனா வுடனான உறவுகளை பொறுத்தவரை, நானும் அதிபர் ஜீயும் ஒப்புக்கொண்டபடி, வர்த்தக மற்றும் வியாபார வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனாவின் மேம்பாடு இருநாடுகளுக்கம் மட்டுமின்றி உலக முழுமைக்கும் முன் எப்போதும் இல்லாத ஒரு வாய்ப்பு என்று கருதுகிறேன். அதே சமயம் இரண்டு பெரிய அண்டை நாடுகளுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பது இயற்கையானதுதான். இருதரப்பு உறவுகள் மற்றும் மண்டல அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக இருநாடுகளும் பரஸ்பரம் அக்கறையுள்ள விஷயங்களில் உணர்வுபூர்வமாகவும் பரஸ்பர மரியாதைகளுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நண்பர்களே,
தற்போதுள்ள அறிவாற்றல் அடிப்படையில் இந்த நுாற்றாண்டு ஆசிய நுாற்றாண்டு என உறுதி கூறலாம். மாற்றத்தின் மிகக்கூர்மையான முன்னேற்றம் ஆசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மண்டலம் முழுமையிலும் பரவலாக மிகப்பெரிய துடிப்புள்ள வளர்ச்சி மற்றும் வளப்பகுதிகள் தோன்றியுள்ளன. ஆனால் வளர்ந்து வரும் அபிலாசைகளும் போட்டிகளும் சில கருத்து வேறுபாடுகளை தோற்றுவித்துள்ளன. ஆசியா பசிபிக் பகுதியில் ராணுவ ஆற்றல், வளங்கள், சொத்துக்கள் ஆகியவை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் பாதுகாப்பு குறித்து சில கேள்விகள் எழுந்துள்ளன ஆகையால் இந்த மண்டலத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு திறந்ததாகவும் வெளிப்படையானதாகவும் சமச்சீர்மையானதாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். சர்வதேச நெறிமுறைகள், ஆதிபத்தியத்திற்கு மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்ப்பார்க்கக்கூடிய நடத்தையையும் பேச்சுவார்த்தை முறை மேம்பாட்டையும் மண்டலத்தில் ஏற்படுத்த வேண்டும்.
நண்பர்களே,
கடந்த இரண்டரை ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இதர பெரிய நாடுகளுடன் ஆன எங்களது ஈடுபாட்டு வேகத்துக்கு வலுச்சேர்த்துள்ளோம் இந்த நாடுகளுடன் சேர்ந்து ஒத்துழைக்க விருப்பம் தெரிவிப்பதுடன் நாம் எதிர்க்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள் ஆகியவற்றில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளோம். இவைகளுடனான பங்களிப்பு இந்தியாவின் பொருளாதார முன்னுரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் நன்கு இணைந்து வந்துள்ளன. அமெரிக்காவுடன் எமது செயல்கள் வேகத்தை கொண்டு வந்துள்ளன. ஒட்டுமொத்த ஈடுபாட்டிற்கும் வலுசேர்த்துள்ளன. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் நான் பேசும் போது நமது தளத்தகை கூட்டாண்மை நன்மைகளை மேலும் வலுவாக்க ஒப்புக்கொண்டுள்ளோம். ரஷ்யா நீண்டகால நட்புநாடு. ரஷ்ய அதிபர் புடினும் நானும் இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நீண்ட உரையாடல்களை நடத்தி உள்ளோம். எமது நம்பகமான தளத்தகை கூட்டாண்மை ஒத்துழைப்பு குறிப்பாக பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு மேலும் ஆழமாகி உள்ளது.
புதிய பொருளாதார சக்திகள் மீதான எமது முதலீடுகள் எரிசக்தி, வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையிலான உறவுகள் வெற்றிகரமான முடிவுகளை தந்துள்ளன. தற்போது பொருளாதார செயல்பாடுகளின் அனைத்து துறைகளிலும் பங்கேற்று விரிவடைந்துள்ள ஜப்பான் நாட்டுடன் உண்மையான தளத்தகை கூட்டாண்மை வாய்ந்த ஒத்துழைப்பை நாம் பெற்றுள்ளோம். பிரதமர் அபேயும் நானும் இந்த ஒத்துழைப்பை தீவிரப்படுத்த உறுதிசெய்துள்ளோம். ஐரோப்பாவுடன் இந்தியா தொடர்பான மேம்பாடு, குறிப்பாக அறிவுசார் தொழில்கள், அதிநவீன நகரங்கள், ஆகிய துறைகளில் வலுவான ஒத்துழைப்பு குறித்த நெடுநோக்கு உறவுகளை கொண்டுள்ளோம்.
நண்பர்களே,
வளரும் நாடுகளுடன் எமது திறன்களையும் பலத்தையும் பகிர்ந்து கொள்வதில் நீண்ட காலமாக இந்தியா முன்னணியில் உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள எமது சகோதர சகோதரிகள் உடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக உறவுகளை வலுபடுத்தி உள்ளோம். பாரம்பரிய நட்புறவு, வரலாற்று இணைப்புகள் போன்ற உறுதியான நீண்டகால தொடர்புகள் அடிப்படையில் அர்த்தமுள்ள மேம்பாட்டு ஒத்துழைப்புகளை உருவாக்கி உள்ளோம். இன்று எமது மேம்பாட்டு ஒத்துழைப்பு அடிச்சுவடுகள் உலகெங்கும் காணக்கிடைக்கின்றன.
சீமாட்டிகளே, கனவான்களே
இந்தியா கடல்சார் நாடாக நீண்ட கால வரலாறு கொண்டது அனைத்து திசைகளிலுமான எமது கடல்சார் ஈடுபாடுகள் தளத்தகை முக்கியத்துவம் வாய்ந்தவை இந்தியப் பெருங்கடலில் எனது நல்லெண்ண வரம்பு சட்டப்படியான வரம்புகளை எல்லாம் மிஞ்சி பரவி உள்ளது. மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்று பொருள்படும் எனது சாகர் திட்டம் எமது நாட்டையும் எமது தீவுகளையும் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல. எமது கடல்சார் உறவுகளில் பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் முயற்சிகளை அது வரையறை செய்கிறது. நோக்க ஒருங்கமைவு, ஒத்துழைப்பு, கூட்டுச் செயல்பாடு போன்றவை நமது கடல்சார் மண்டலத்தில் பொருளாதாரச் செயல்களையும் அமைதியையும் முன்னெடுத்து செல்லும் என்பதை நாம் அறிவோம். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி, வளம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான முக்கிய பொறுப்பு இந்த மண்டலத்தில் வசிப்போரிடையே உள்ளது என நம்புகிறோம். எனது அணுகுமுறை எமக்கு மட்டுமே ஆனதன்று. சர்வதேச சட்டத்தை மதித்தல் அடிப்படையும் நாடுகளை ஒருங்கிணைக்க நாம் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்தோ-பசிபிக் பகுதியின் தொடர்புடைய கடல்சார் புவிப்பகுதியின் அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சுதந்திரமான கப்பல் போக்குவரத்தும் சர்வதேச நெறிகளை கடைபிடிப்பதும் மிகவும் அவசியம் என்று நாம் நம்புகிறோம்.
நண்பர்களே,
அமைதி வளர்ச்சி வளம் ஆகியவற்றுக்கு மண்டல டிஜிட்டல் இணைப்புகள் அத்தியாவசியம் என்பதை நாம் அறிந்துள்ளோம். எங்களது சிந்தனை மற்றும் செயல்கள் மூலம் மேற்கு மற்றும் மத்திய ஆசியா, ஆசியா –பசிபிக் ஆகியவற்றுடனான தொடர்புகளில் தடைகளை முறியடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த வகையில் இரண்டு தெளிவான வெற்றிகரமான உதாரணங்கள்: ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சாபாஹார் தொடர்பாக முத்தரப்பு ஒப்பந்தம் கையழுத்தானது. சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து தொழில் தாழ்வாரத்தை ஆன்லைனில் கொண்டுவருவதை எனது உறுதிப்பாடும் மற்றொரு உதாரணம் எனினும் டிஜிட்டல் இணைப்பு இதர நாடுகளின் ஆதிபத்தியத்தை குறைக்கவோ மீறவோ முடியாது என்பதையும் அறிந்துள்ளோம்.
சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதிபத்தியத்தை மதிப்பதால் மட்டுமே மண்டல டிஜிட்டல் இணைப்பு தாழ்வாரங்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும்படியும், வேறுபாடுகளையும் பிணக்குகளையும் தவிர்க்க முடியும்.
நண்பர்களே,
நமது பாரம்பரியத்துக்கு இணங்க நாம் உறுதியளித்த சர்வதேச பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இயற்கை பேரிடர் சமயங்களில் முன்னின்று உதவியையும் நிவாரண முயற்சிகளையும் நடத்தி உள்ளோம். நேபாள நிலநடுக்கம், ஏமனில் இருந்து மக்களை பத்திரமாக வெளியேற்றுதல், மாலத்தீவு மற்றும் பிஜி நாடுகளில் மனிதாபிமான நெருக்கடி சமயங்களில் நாம நம்பத்தகுந்த முதலாவது உதவியாளராக இருந்துள்ளோம். சர்வதேச அமைதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையிலும் பொறுப்பு ஏற்க நாம் தயங்கியதே இல்லை. கரையோர பகுதிகளில் கண்காணிப்பு ஒத்துழைப்பு, சட்டப்பூர்வ கப்பல் போக்குவரத்து, தகவல், மரபற்ற கொள்ளை, கடத்தல் போன்ற அச்சுறத்துல்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தி உள்ளோம். நீண்டகாலம் நிலுவையில் உள்ள உலக சவால்களை பொறுத்தவரை மாற்று தீர்வுகளை உருவாக்கி தந்துள்ளோம். பயங்கரவாதத்தை சமயங்களுடன் தொடர்புபடுத்துவதை தவிர்ப்பது நல்ல பயங்கரவாதம் கெட்ட பயங்கரவாதம் என்ற செயற்கை வேறுபாடுகளையும் எதிர்த்தல் போன்ற இந்திய கருத்துக்கள் தற்போது உலகளாவில் விவாதிக்கப்படும் விஷயங்களாகும். மேலும் நமது அண்டை பகுதிகளில் வன்முறையை ஆதரித்து வெறுப்பை ஊக்குவித்து பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வோர் தனிமைப் படுத்தப்பட்டு உதாசீனம் செய்யப்பட்டுள்ளனர். புவி வெப்பமயமாதல் போன்ற அவசரமான சவால்களில் நாம் முன்னணி நிலை அடைந்துள்ளோம். புதுப்பிக்கக்கூடிய மின்சாரம் 175 கிகா வாட் அளவிற்கு உற்பத்தி செய்யும் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதில் நல்ல முறையில் செயல்பாடுகளை தொடங்கி உள்ளோம். இயற்கையுடன் நல்லிணக்கமாக வாழ்வதை மேம்படுத்த நமது நாகரீக பாரம்பரியத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம். சூரிய சக்தியை மனித வளர்ச்சிக்கு சிறப்பாக பயன்படுத்த சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை உருவாக்கி அதனுடன் சர்வதேச சமுதாயத்தை இணைத்துள்ளோம். எமது முயற்சியில் முக்கியமானது இந்தியாவின் நாகரீக, பண்பாட்டு, ஆன்மிக வளத்தின்பால் சர்வதேச ஆர்வத்தை புதுப்பிக்க எடுத்துள்ள நடவடிக்கை ஆகும். என்று புத்தம், யோகா, ஆயுர்வேதா ஆகியன மனிதகுல பாரம்பரியத்தின் மதிப்பு மிக்க சொத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மனித குல பொது பாரம்பரியத்தை, நாடுகள் மற்றும் சமயங்கள் இடையே பாலங்கள் அமைத்து ஒட்டுமொத்த நன்மையை மேம்படுத்தி வரும் இந்தியா, தனது ஒவ்வொரு அடியிலும் சிறப்பாக கொண்டாடும்.
சீமான்களே, கனவான்களே
நிறைவாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் உலகத்துடன் இணைப்பு ஏற்படுத்தி கொள்ள எனது தொன்மையான புனித நுால்கள் எம்மை வழிநடத்தி வருகின்றன. ரிக் வேதம் சொல்கிறது: “சிறந்த எண்ணங்கள் எல்லா திசைகளிலிருந்தும் என்னை வந்தடையட்டும்”
ஒரு சமுதாயம் என்ற வகையில் தனி நபர் தேவைக்கு பதிலாக பலரது தேவைகளையே நாம் எப்போதும் ஆதரித்து வந்துள்ளோம். துருவப்படுத்துவதற்கு பதிலாக ஒத்துழைப்பையே நாம் விரும்புகிறோம். ஒருவரது வெற்றி பலரது வளர்ச்சிக்கு சக்தி அளிக்க வேண்டும் என்ற கருத்தை உறுதியாக நம்புகிறோம். எமது பணி தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனது நெடுநோக்கு தெளிவாக உள்ளது. மாற்றத்திற்கான எமது பயணம் எமது நாட்டில் தொடங்குகிறது. உலகெங்கும் பரவ தொடங்கியுள்ள எமது ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு செயல்பாடுகள் இந்த முயற்சிக்கு வலுவூட்டுகின்றன. உள்நாட்டில் உறுதியான நடவடிக்கைகளுடன் வெளிநாட்டில் நம்பத்தகுந்த நட்புறவு கட்டமைப்பை விரிவாக்குவதுடன் பலகோடி இந்திய மக்களுக்கு உரித்தான எதிர்காலம் தொடர்பான உறுதிமொழியை பற்றி நிற்கிறோம். இந்த முயற்சியில் இந்தியாவில் அமைதி மற்றும் முன்னேற்றம், ஸ்திரதன்மை மற்றும் வெற்றி, வாய்ப்புகள் மற்றும் தகவமைவு ஆகியவற்றின் ஒளிவிளக்கை நீங்கள் காண்பீர்கள். உங்களுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி.
It is a great privilege to speak to you at the inauguration of the second edition of the @raisinadialogue: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
In May 2014, people of India ushered in a New Normal. My fellow Indians spoke in one voice to entrust my Govt with a mandate for change: PM
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Every day at work, my ‘to do list’ is guided by the constant drive to reform & transform India, for prosperity & security of all Indians: PM
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
The world needs India’s sustained rise, as much as India needs the world: PM @narendramodi at @raisinadialogue @orfonline
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Globally connected societies, digital opportunities, technology shifts, knowledge boom & innovation are leading the march of humanity: PM
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
The multi-polarity of the world, and an increasingly multi-polar Asia, is a dominant fact today: PM @narendramodi at @raisinadialogue
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
The prosperity of Indians, both at home and abroad, and security of our citizens are of paramount importance: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Our economic and political rise represents a regional and global opportunity of great significance: PM @narendramodi at @raisinadialogue
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
For me, Sabka Saath, Sabka Vikas is not just a vision for India. It is a belief for the whole world: PM at @raisinadialogue @orfonline
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
The people of South Asia are joined by blood, shared history, culture, and aspirations: PM @narendramodi at @raisinadialogue
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
In the last two and half years, we have partnered with almost all our neighbours to bring the region together: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
My vision for our neighbourhood puts premium on peaceful and harmonious ties with entire South Asia: PM @narendramodi at @raisinadialogue
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
That vision had led me to invite leaders of all SAARC nations, including Pakistan, for my swearing in: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
India alone cannot walk the path of peace. It also has to be Pakistan’s journey to make: PM at @raisinadialogue
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Pakistan must walk away from terror if it wants to walk towards dialogue with India: PM at @raisinadialogue
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
In Central Asia, we have built our ties on the edifice of shared history & culture to unlock new vistas of prosperous partnership: PM
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Our membership of the SCO provides a strong institutional link to our engagement with Central Asian nations: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Our engagement with South East Asia is at the centre of our Act East Policy: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
I see the development of India and China as an unprecedented opportunity, for our two countries and for the whole world: PM
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Prevailing wisdom tells us that this century belongs to Asia. The sharpest trajectory of change is happening in Asia: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Over the past two & a half years, we have given strong momentum to our engagement with the US, Russia, Japan & other major global powers: PM
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
With Europe, we have a vision of strong partnership in India’s development, especially in knowledge industry and smart urbanization: PM
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
India has for decades been at the forefront of sharing our capacities and strengths with fellow developing countries: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
The arc of influence of Indian Ocean extends well beyond its littoral limits: PM @narendramodi at @raisinadialogue @orfonline
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Our initiative of SAGAR - Security And Growth for All in the Region is not just limited to safe-guarding our mainland and islands: PM
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
We were a credible first responder during earthquake in Nepal, evacuation from Yemen & during humanitarian crises in Maldives & Fiji: PM
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
We have an ambitious agenda and an equally aggressive target to generate 175 giga watts from renewable energy: PM https://t.co/FlLB6Rf6In
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
We also brought the international community together to create an ISA, to harness the energy of sun to propel human growth: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
Today, Buddhism, yoga and Ayurveda are recognized as invaluable heritage of humanity as a whole: PM @narendramodi at @raisinadialogue
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
We hold the belief that success of one must propel the growth of many: PM @narendramodi at @raisinadialogue
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017
PM @narendramodi concludes quoting the Rig Veda: "Let global thoughts come to me from all directions.
— narendramodi_in (@narendramodi_in) January 17, 2017