PM Modi inaugurates first National Tribal Carnival in New Delhi
Despite several challenges, the tribal communities show us the way how to live cheerfully: PM
It is necessary to make the tribal communities real stakeholders in the development process: PM
Government is committed to using modern technology for development which would minimize disturbance to tribal settlements: PM

பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தேசிய பழங்குடியினர் திருவிழாவைத் தொடங்கிவைத்தார். உற்சாகமான திருவிழா அணிவகுப்பைக் கண்டுகளித்த பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தீபாவளிப் பண்டிகையின் போது நாடு முழுவதிலுமிருந்து பழங்குடியின குழுக்கள் தலைநகர் தில்லிக்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என்றார். பழங்குடியின சமூகத்தினரின் திறன்களை இந்த பழங்குடியினர் திருவிழா எடுத்துக்காட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா வேறுபாடுகள் நிறைந்த நிலப்பரப்பாக திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திருவிழாவில் நடைபெற்ற அணிவகுப்பு இந்த வேறுபாடுகளின் சிறிய வடிவத்தை அளித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

பழங்குடி இன சமூகங்களின் வாழ்க்கை ஒரு கடுமையான போராட்டத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். இருந்தபோதிலும் பழங்குடி இன சமூகங்கள் சமூக வாழ்க்கை கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு, சிரமங்களை மீறி உற்சாகமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தனது இளமைக்காலத்தில் பழங்குடி இனத்தவர்களிடையே சமூகப் பணி ஆற்றுவதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். அவர்கள் வாயில் இருந்து புகார்களை கேட்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார். நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பாக அவர்களிடமிருந்து ஊக்கம் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு புதுமையான பொருட்களை உருவாக்கும் திறன் ஆதிவாசி மக்களிடம் உள்ளது என்று அவர் கூறினார். இவை உரிய முறையில் சந்தைப்படுத்தப்பட்டால் இவற்றுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதுடன் பெரிய பொருளாதார வாய்ப்புகளும் உருவாகும் என்று அவர் மேலும் கூறினார். பழங்குடியின சமூகங்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள புதுமைகள் பற்றியும் பிரதமர் விளக்கினார். முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் தான் பழங்குடியினர் விவகாரங்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேலிருந்து கீழ் நோக்கும் அணுகுமுறையின் மூலமாக பழங்குடி இன சமூகங்களில் எந்த மாற்றமும் வராது என்று பிரதமர் தெரிவித்தார். பழங்குடியினர் சமூகத்தினரை வளர்ச்சிக்கான நடைமுறையில் நிஜமான தொடர்புடையவர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காகவே வனபந்து கல்யாண் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

வனங்களைப் பாதுகாப்பதில் பழங்குடி இன சமூகத்தினரின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். பெரும்பாலான நமது இயற்கை ஆதாரங்கள் மற்றும் வனங்கள் பழங்குடி இனத்தவர்களாக நாட்டின் ஒரே பகுதியில் காணப்படுவதாக பிரதமர் கூறினார். இந்த ஆதாரங்களை பெறும் போது பழங்குடியினர் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட மாவட்ட தாது கூட்டமைப்பு பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான நிதிகளை அளிக்கும் என பிரதமர் கூறினார். இது தாதுக்கள் வளம் அதிகம் கொண்ட மாவட்டங்களில் வளர்ச்சிக்குத் தேவையான அதிக நிதியை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி நிலக்கரி, எரிவாயு எடுப்பது போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பழங்குடியினரின் சிரமங்கள் குறைக்கப்படும் என்று பிரதமர் கூறினார். கிராமப்புற வளர்ச்சி மையங்கள் அமைப்பதில் கண்ணோட்டம் செலுத்தும் ரூர்பன் இயக்கம் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
25% of India under forest & tree cover: Government report

Media Coverage

25% of India under forest & tree cover: Government report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi