கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் நிறைவுப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிதாக தொடங்கப்பட்ட சேவையின் தொடக்க விழா மற்றும் ஆய்வுக்குப் பிறகு, பிரதமர் மோடி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் மெட்ரோவில் பயணம் செய்தார்.
“அதிநவீன கான்பூர் மெட்ரோவில். முக்கிய வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் இடத்திற்குச் செல்கிறேன்” என்று மெட்ரோவில் ஏறிய பிறகு பிரதமர் ட்வீட் செய்தார். ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை பிரதமர் மோடி மெட்ரோ பயணம் மேற்கொண்டார்.
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முடிக்கப்பட்ட பகுதியின் திறப்பு விழா, நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவதற்கும், கான்பூர் மக்களுக்கு 'வாழ்க்கையை எளிதாக்குவதற்கும்' ஒரு படியாகும்.
On board the state of the art Kanpur metro. Heading to the programme where key development works will be launched. pic.twitter.com/vnlVGPqTAm
— Narendra Modi (@narendramodi) December 28, 2021