Tagline of #AdvantageAssam is not just a statement, but a holistic vision says PM Modi
#AyushmanBharat is the world’s largest healthcare program designed for the poor: PM Modi
The formalisation of businesses of MSMEs due to introduction of GST, will help MSMEs to access credit from financial sector, says the PM
Government will contribute 12% to EPF for new employees in all sectors for three years: PM
Our Govt has taken up many path breaking economic reforms in last three years, which have simplified procedures for doing business: PM Modi

குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதிநிதிகளை வரவேற்ற பிரதமர், மத்திய அரசின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில் வட கிழக்கு பகுதி இதயத்தில் உள்ளது என்றார். அதிக அளவிலான மக்களுக்கு இடையிலான தொடர்பு, வர்த்தக உறவுகள் மற்றும் ஆசியான் நாடுகளுடன் இதர உறவுகள் ஆகியவற்றை கிழக்கு நோக்கிய செயல்பாடு தொலைநோக்கு பார்வையாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஆசியான் மற்றும் இந்தியா இடையிலான உறவின் 25வது ஆண்டை நினைவுகூரும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஆசியான் இந்தியா உச்சிமாநாட்டை பிரதமர் நினைவுகூர்ந்தார். ஆசியான் மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது என அவர் தெரிவித்தார்.

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள் கவுரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டது இந்தியாவுக்கு கிடைத்த பாக்கியம் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சி என்பது வட கிழக்கு பிராந்தியத்தின் சமநிலையான மற்றும் விரைவான வளர்ச்சியுடன் மேலும் வலுவூட்டப்படும் என பிரதமர் வலியுறுத்தினார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் வாழ்வில் தரமான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கியது என்று அவர் குறிப்பிட்டார். வாழ்க்கையை எளிமையாக்குவதை மேம்படுத்துவதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகிலேயே இந்த வகையான மாபெரும் திட்டம் என்று பிரதமர் கூறினார். இந்த சுகாதாரத் திட்டம் 45 முதல் 50 கோடி மக்களுக்கு பயன் அளிக்கும் என அவர் தெரிவித்தார். மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஏழைகளுக்கான இதர சுகாதார நடவடிக்கைகளைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளீட்டு செலவுகளைக் குறைப்பது மற்றும் அவர்களின் உற்பத்திக்கு உரிய விலையை கிடைக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட மத்திய அரசு செயல்பட்டு வருவதாக திரு நரேந்திர மோடி கூறினார். விவசாயிகளின் நல்வாழ்வுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் இதர நடவடிக்கைகளையும் அவர் கூறினார்.

மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையில் வீடுகள் அளிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் பிரதமர் குறிப்பிட்டார். வீடுகளுக்கான மின்சார பயன்பாட்டுக்கான கட்டணங்களில் குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பை அளிக்கக்கூடிய எல்.இ.டி. விளக்குகள் விநியோகம் குறித்தும் அவர் பேசினார். வடகிழக்கு பகுதிக்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் தேசிய மூங்கில் இயக்கம் மறுசீரமைப்பு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசில் நிர்வாக கட்டமைப்புகளை திருத்தி அமைத்ததால் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுவது பெரிதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

முத்ரா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோருக்கு அடமானம் அற்ற கடன்கள் வழங்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் பேசினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி நிவாரணம் அளிக்க மத்திய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.

ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒடுக்க மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த மூன்றாண்டுகளில் அரசு மேற்கொண்ட பல்வேறு அதிரடியான பொருளாதார சீர்திருத்தங்கள் வர்த்தகம் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கி இருப்பதாக அவர் கூறினார். இந்த சீர்திருத்தங்களின் விளைவாக இந்தியா இன்று உலக வங்கியின் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான அறிக்கையில் 190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 42 இடங்கள் முன்னேறி 100வது இடத்தைப் பிடித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

அசாமின் மாபெரும் இசை அறிஞரான பூபேன் ஹசாரிகாவைக் குறிப்பிட்ட பிரதமர், நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தொலைநோக்கு பார்வையையும் கனவுகளையும் நனவாக்குவதும் 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதும் நமது கூட்டுப் பொறுப்பு என்றார்,.

வட கிழக்கில் புதிய போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.

அசாமில் வர்த்தகம் செய்வதற்கான சூழல் மற்றும் வளர்ச்சி சூழலை உருவாக்கிய அசாம் முதல்வர் திரு. சர்பானந்த் சோனாவாலுக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."