QuoteAyurveda isn’t just a medical practice. It has a wider scope and covers various aspects of public and environmental health too: PM
QuoteGovernment making efforts to integrate ayurveda, yoga and other traditional medical systems into Public Healthcare System: PM
QuoteAvailability of affordable healthcare to the poor is a priority area for the Government: PM Modi
QuoteThe simplest means to achieve Preventive Healthcare is Swachhata: PM Modi

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் புது தில்லியில் அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ நிலையத்தை (All India Institute of Ayurveda) இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் தன்வந்த்ரி பிறந்த நாளை ஆயுர்வேத தினமாகக் கொண்டாடுவதற்காக அங்கு கூடியிருந்தவர்களைப் பாராட்டினார். அத்துடன், அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ நிலையத்தை அமைத்த மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தையும் அவர் புகழ்ந்தார்.

|

பிரதமர் பேசுகையில், தனது வரலாற்றையும், பாரம்பரியத்தையும் போற்றாத, மதிக்காத நாடுகள் முன்னேறுவதில்லை என்று உறுதிபடக் கூறினார். தனது வரலாற்றுப் பெருமைகளை மறந்த நாடுகள் தங்களது அடையாளத்தை இழந்துவிடுகின்றன என்றும் கூறினார்.

பிரதமர் பேசுகையில், “நாடு சுதந்திரம் பெறாத நிலையில் இருந்தபோது, நம் நாட்டின் அறிவுச் செல்வம், யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய முறைகள் சிறுமைப்படுத்தப்பட்டன. அவற்றின் மீது இந்தியர்களுக்கு இருந்த நம்பிக்கைகளையும் சிதைக்க முயற்சி எடுக்கப்பட்டது” என்று கூறினார். “கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிலை குறிப்பிட்ட அளவு மாறிவிட்டது. இழந்த நமது சிறப்பான பாரம்பரியத்தின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆயுர்வேத தினம் அல்லது யோகா தினத்தில் இங்கு கூடியிருப்பதே நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பிரதிபலிக்கிறது“ என்றும் பிரதமர் கூறினார்.

|

பிரதமர் மேலும் பேசுகையில் ஆயுர்வேதம் என்பதும் வெறும் மருத்துவ முறை மட்டுமல்ல. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. அதனால்தான் அரசு ஆயுர்வதேம், யோகா, ஆயுஷ் (AYUSH) உள்ளிட்ட பல்வேறு இந்திய மருத்துவமுறைகளை பொது சுகாதார முறையுடன் இணைத்திருக்கிறது என்றார்.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் ஆயுர்வேத மருத்துவமனையை நிறுவுவதற்கான செயலில் அரசு ஈடுபட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் 65 ஆயுஷ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

|

பிரதமர், “மூலிகைகள், மருத்துவச் செடிகள் நமக்கு உலக அளவில் குறிப்பிடத் தக்க வருவாயை ஈட்டித் தரும். இந்த விஷயத்தில் இந்தியா தனது திறனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுகாதார நலத் திட்டங்களில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது” என்றார்.

“ஏழைகளுக்கு சுகாதார வசதிகள் எளிதில் கிடைக்க வே|ண்டும் என்பதைக் கருத்தாகக் கொண்டுள்ளது. மக்களுக்கு வருமுன் காக்கும் சுகாதார நலம், குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதிகள், சிகிச்சைகளை எளிதில் பெறுவது ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. வருமுன் காக்கும் சுகாதார நலத்திற்கு தூய்மைப் பணி இயக்கம் (Swachhata) ஓர் எளிய உதாரணமாகும். மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 5 கோடி கழிவறைகளைக் கட்டியிருக்கிறது” என்றும் பிரதமர் கூறினார்.

|

பிரதமர் மேலும் கூறுகையில், “புதிதாக அமைக்கப்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (AIIMs) மக்கள் சிறந்த மருத்துவ நலன்களைப் பெறுவதற்கு உதவும்” என்றார்.

உடலுக்குள் பொருத்தப்படும் ஸ்டென்ட் உள்ளிட்டவற்றின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும், விலை குறைந்த மருந்துகளை மக்கள் பெறுவதற்காக மக்கள் மருந்தக மையங்கள் (Jan Aushadhi Kendras) அமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

|

 

|

 

|

 

|

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
26th global award: PM Modi conferred Brazil's highest honour — ‘Grand Collar of National Order of Southern Cross’

Media Coverage

26th global award: PM Modi conferred Brazil's highest honour — ‘Grand Collar of National Order of Southern Cross’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
July 09, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது

 கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.

நாடுகளால் வழங்கப்பட்ட விருதுகள்:

1. 2016, ஏப்ரலில் சௌதி அரேபியாவுக்கான அவரது பயணத்தின் போது, சௌதி அரேபியாவின் மிக உயரிய சிவில் விருது - மன்னர் அப்துல்லாசிஸ் சாஷ். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.  கௌரவமிக்க இந்த விருது மன்னர்  சல்மான்வின் அப்துலாசிஸ் அவர்களால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

|

2. அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய சிவில் விருதான ஸ்டேட் ஆர்டர் ஆஃப் காஸி அமீர் அமானுல்லா கான் விருது பிரதமர்  மோடிக்கு வழங்கப்பட்டது.

|

3. 2018- ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டபோது தி கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

|

4. 2019-ல், ஆர்டர் ஆஃப் சையது விருது  பிரதமருக்கு வழங்கப்பட்டது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவில் விருதாகும்.

|

5. 2019-ல் ரஷ்யாவின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

6. வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் மிக உயரிய கௌரவமான ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குயிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இஸ்ஸூதின் விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

7. 2019-ல் கௌரவமிக்க மன்னர் ஹமாத் ஆர்டர் ஆஃப் தி ரினைசான்ஸ் விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பஹ்ரைன் வழங்கியது.

|

8. ஒப்பற்ற சேவைகள் மற்றும் சாதனைகள் செய்தவர்களுக்கு அமெரிக்க ராணுவத்தின் விருதான லெஜியன் ஆஃப் மெரிட் அமெரிக்க அரசால் 2020-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

9. பூடானின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் ஜியால்போ விருது 2021 டிசம்பரில் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மிக உயரிய சிவில் விருதுகளுக்கு அப்பால் உலகம் முழுவதும் உள்ள கௌரவமிக்க அமைப்புகளால் பல விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.

1. சியோல் அமைதிப் பரிசு: மனித குலத்தின் நல்லிணக்கம், நாடுகளுக்கிடையே சமரசம் செய்தல், உலக சமாதானம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்ததன் மூலம் சிறப்பு பெறும் தனி நபர்களுக்கு சியோல் அமைதிப் பரிசு, கலாச்சார அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. கௌரவமிக்க இந்த விருது 2018-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

2. புவிக்கோளின் சாம்பியனுக்கான ஐநா விருது: இது ஐநா சபையின் மிக உயரிய சுற்றுச்சூழலுக்கான விருதாகும் உலகளாவிய அரங்கில் பிரதமர் மோடியின் துணிச்சலான சுற்றுச்சூழல் தலைமைத்துவத்தை அங்கீகரித்து . 2018-ல் ஐநா இதனை வழங்கியது.

|

3. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.

|

4. உலகளாவிய கோல்கீப்பர் விருது”: தூய்மை இந்தியா திட்டத்திற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால்  இந்த விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா பிரச்சாரத்தை “மக்கள் இயக்கமாக” மாற்றிய மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்த இந்தியர்களுக்கு இந்த விருதினைப் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

|

5. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.