We live in an era in which connectivity is all important: PM Modi
Governance cannot happen when the dominant thought process begins at 'Mera Kya' and ends at 'Mujhe Kya’: PM Modi
Atal Bihari Vajpayee Ji is the 'Bharat Marg Vidhata.' He has shown us the way towards development: PM Modi

நொய்டா மற்றும் தில்லி இடையே புதிய மெட்ரோ ரெயில் வழித்தட இணைப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நொய்டாவில் உள்ள தாவரவியல் பூங்காவையும் (பொட்டானிகல் கார்டன்) தெற்கு தில்லியில் உள்ள கல்காஜி கோவிலையும் இணைக்கும் தில்லி மெட்ரோவின் மெஜந்தா நிற வழித்தடத்தின் ஒரு பகுதி தொடங்கி வைக்கப்படுவதைக் குறிக்கும் வகையில் தாவரவியல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் பெயர்ப் பலகையை அவர் திறந்து வைத்தார். பொதுக் கூட்டம் நடைபெற உள்ள இடத்திற்கு வருகை தரும் முன்னர் அவர் சிறிது தூரம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பண்டிட் மதன் மோகன் மாளவியா மற்றும் முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய இரண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்களின் பிறந்த நாளையும் இந்த தினம் குறிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மக்களின் மூலமாகவே இந்த நாடு வலிமையான மற்றும் நிலையான அரசைப் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேச மக்கள் காட்டும் அன்புக்காக தாம் எப்போதும் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இணைப்பு என்பது மிகவும் முக்கியமானதாகத் திகழும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறிய அவர், தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயில் தற்காலத்திற்கு மட்டுமின்றி எதிர்கால சந்ததியினருக்கும் சேவை அளிக்கும் என்றார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் 2022ம் ஆண்டுக்குள் நமது பெட்ரோல் இறக்குமதிகள் குறையும் இந்தியாவில் நாம் வாழ்வோம் என தாம் கனவு காண்பதாக அவர் கூறினார். இதனை எட்டுவதற்கு, அதி நவீன மக்கள் போக்குவரத்து முறைகள்தான் தற்போதைய தேவை என அவர் குறிப்பிட்டார். கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தில்லி மெட்ரோவில் பயணித்தார் எனக் குறிப்பிட்ட திரு. நரேந்திர மோடி, அதன் பின்னர் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மெட்ரோ கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவடைந்துள்ளது என்றார்.

‘எனக்கு என்ன’ என்ற சிந்தனை மேலோங்கி இருந்தால், அரசு நிர்வாகம் செயல்படாது என பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். இந்த சிந்தனைப் போக்கு தற்போது மாறிவிட்டது என்று அவர் கூறினார். மத்திய அரசின் முடிவுகள் அரசியல் லாபத்திற்காக இன்றி நாட்டு நலனுக்கானது என அவர் மேலும் கூறினார்.

முன்பு அரசுகள் புதிய சட்டங்களை இயற்றுவதைப் பெருமையாகக் கருதின என்று பிரதமர் கூறினார். தற்போதுள்ள அரசு வழக்கொழிந்த சட்டங்களை நீக்க விரும்புகிறது என அவர் தெரிவித்தார். காலாவதியான சட்டங்கள் முடிவுகள் எடுப்பதை தடுக்கும்போது அரசு நிர்வாகம் செயல்படாது என அவர் மேலும் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், நல்ல அரசு நிர்வாகத்தின் மீது அவர் செலுத்தி வரும் கண்ணோட்டம் மாநிலத்தைப் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார். நொய்டாவுடன் தொடர்புடைய மூடநம்பிக்கை ஒன்றைத் முடிவுக்கு அவர் கொண்டு வந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார். ஒரு இடத்திற்கு செல்லாமல் இருந்தால் முதலமைச்சராக நீடிக்கலாம் என்றும் அந்த இடத்திற்குச் சென்றால் பதவி பறிபோய்விடும் என நினைப்பவர்கள் முதலமைச்சராக இருக்கத் தகுதியற்றவர்கள் என்றும் பிரதமர் கூறினார்.

ரயில்வே உள்கட்டமைப்பு, சாலைக் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் ஆகியவை பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பாரதத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என வர்ணித்ததுடன், வளர்ச்சிக்கான வழியை அவர் காண்பித்துள்ளார் என்றார்.

முன்னதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியதுடன், இந்த நாட்டின் அரசியலுக்கு பிரதமர் புதிய விளக்கம் அளித்திருப்பதாகக் கூறினார். வளர்ச்சிப் பாதையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என பிரதமர் எப்போதும் கூறுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Click here to read the full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi