அஜ்மீர் ஷரீஃபில் அமைந்துள்ள க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் அணிவிக்கும் சடங்குக்கான போர்வையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சிறுபான்மையினர் விஷயங்களுக்கான அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வியிடம் வழங்கினார்.
அஜ்மீர் ஷரீஃபில் வருடாந்திர உர்ஸ் திருவிழா நடைபெறுவதை ஒட்டி, க்வாஜா மொய்னுதீன் சிஸ்தியை பின்பற்றும் உலகம் முழுவதிலும் உள்ள வழிபாட்டளர்களுக்கு தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் பிரதமர் அத்தருணத்தில் தெரிவித்துக் கொண்டார்.