மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்தில் . மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத் , மும்பை-சாய்நகர் ஷிர்டி வந்தே பாரத் ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மும்பையில் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனங்களின் இயக்கத்தை சீரமைக்கவும் சாண்டாகுரூஸ் செம்பூர் இணைப்புச் சாலை மற்றும் குரார் சுரங்கப்பாதைத் திட்டம் ஆகிய இரண்டு சாலைத் திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்தில் மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத்தை பிரதமர் ஆய்வு செய்தார். அவர் ரயில் பணியாளர்களுடனும், மற்றும் பயணித்த இருந்த குழந்தைகளுடனும் உரையாடினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவில் ரயில்வேக்கு இது ஒரு முக்கிய தினம் நாள், குறிப்பாக மகாராஷ்டிராவில் மேம்பட்ட இணைப்புக்கு இது ஒரு சிறந்த நாள், ஏனெனில் ஒரே நாளில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த வந்தே பாரத் ரயில்கள் மும்பை மற்றும் புனே போன்ற பொருளாதார மையங்களை நம்பிக்கை மையங்களுடன் இணைக்கும், இதன் மூலம் கல்லூரி, அலுவலகம், வணிகம், யாத்திரை மற்றும் விவசாய நோக்கங்களுக்காக பயணிப்பவர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் விளக்கினார். புதிய வந்தே பாரத் ரயில்கள் மூலம் ஷீரடி, நாசிக், திரிம்பகேஷ்வர் மற்றும் பஞ்சவடி போன்ற புனிதத் தலங்களுக்கு பயணம் செய்வது எளிதாகும், இது சுற்றுலா மற்றும் புனித யாத்திரைக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார். "பந்தர்பூர், சோலாப்பூர், அக்கல்கோட் மற்றும் துல்ஜாபூர் யாத்திரைகளும் சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் அணுகக்கூடியதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
வந்தே பாரத் ரயில் நவீன இந்தியாவின் பிரமாண்டமான பதிவு என்று பிரதமர் கூறினார். இது இந்தியாவின் வேகம் மற்றும் அளவின் பிரதிபலிப்பாகும் என்று அவர் கூறினார். வந்தே பாரத் ரயில்களின் தொடக்க வேகம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், நாட்டின் 17 மாநிலங்களில் உள்ள 108 மாவட்டங்களை இணைக்கும் வகையில் இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்தார். வாழ்க்கையை எளிதாக்கும் பல திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த உயர்த்தப்பட்ட சாலையானது கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளை இணைக்கும் என்றும், பாதாள சாக்கடை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார்.
21ஆம் நூற்றாண்டில், இந்தியாவிற்கான பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார், ஏனெனில் இது மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்க வழிவகுக்கும். நவீன ரயில்கள், மெட்ரோ விரிவாக்கம் மற்றும் புதிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் தொடங்கப்படுவதற்குப் பின்னால் இந்த சிந்தனை உள்ளது. முதன்முறையாக ரூ.10 லட்சம் கோடி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதால், இந்தச் சிந்தனையை பட்ஜெட் மேலும் வலுப்படுத்துகிறது. இதில் ரயில்வேயின் பங்கு ரூ.2.5 லட்சம் கோடி. மகாராஷ்டிராவுக்கான ரயில் பட்ஜெட் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்வைக் கண்டுள்ளது. இரட்டை எஞ்சின் அரசின் முயற்சியால், மகாராஷ்டிராவில் இணைப்பு விரைவாக முன்னேறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பலப்படுத்தப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் சம்பளம் பெறும் வர்க்கம், சொந்தமாக தொழில் செய்பவர்கள் ஆகிய இருவரின் தேவைகளும் கவனிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக் கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரூ. 2 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போதைய அரசு அதனை ஆரம்பத்தில் ரூ.5 இலட்சம் ஆகவும், தற்போது ரூ.7 இலட்சம் ஆகவும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 20% வரி செலுத்தியவர்கள் இன்று பூஜ்ஜிய வரி செலுத்துகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். புதிய வேலைகளில் இருப்பவர்கள் இப்போது அதிகமாகச் சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
‘சப்கா விகாஸ் சப்கா பிரயாஸ்’ என்ற உணர்வை ஊக்குவிக்கும் இந்த பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலத்தை அளிக்கும் என்றும், வளர்ந்த பாரதத்தை உருவாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
மகாராஷ்டிரா ஆளுநர் திரு பகத் சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே , மத்திய இணை அமைச்சர்கள்திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத் ரயில் மற்றும் மும்பை-சாய்நகர் ஷிர்டி வந்தே பாரத் ரயில் ஆகிய இரண்டு ரயில்களை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்தில் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் சிறப்பாகப் பலனளிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கு இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் புதிய இந்தியாவுக்கான செயல்திறன்மிக்க, பயணிகளுக்கு ஏற்ற போக்குவரத்து உள்கட்டமைப்பாகவும் இது விளங்கும்.
மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத் ரயில், நாட்டின் 9வது வந்தே பாரத் ரயிலாகும். புதிய உலகத்தரம் வாய்ந்த ரயில், மும்பை மற்றும் சோலாபூருக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதோடு, சோலாப்பூரில் உள்ள சித்தேஷ்வர், அக்கல்கோட், துல்ஜாபூர், சோலாபூருக்கு அருகிலுள்ள பந்தர்பூர் மற்றும் புனே அருகே உள்ள ஆலண்டி போன்ற முக்கியமான புனித யாத்திரை தலங்களுக்கும் பயணிக்க உதவும்.
மும்பை-சாய்நகர் ஷிர்டி வந்தே பாரத், நாட்டின் 10வது வந்தே பாரத் ரயில், மகாராஷ்டிராவில் உள்ள நாசிக், திரிம்பகேஷ்வர், சாய்நகர் ஷிர்டி மற்றும் ஷானி சிங்கனாபூர் போன்ற முக்கியமான புனித யாத்திரை தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்.
மும்பையில் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனங்களின் இயக்கத்தை சீரமைக்கவும், பிரதமர் சாண்டாகுரூஸ் செம்பூர் இணைப்புச் சாலை மற்றும் குரார் சுரங்கப்பாதையை அர்ப்பணித்தார். குர்லாவிலிருந்து வகோலா வரை புதிதாகக் கட்டப்பட்ட உயர்த்தப்பட்ட நடைபாதை, நகரின் மிகவும் தேவையான கிழக்கு-மேற்கு இணைப்பை மேம்படுத்தும். இவை மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையை கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது. இது மக்கள் எளிதாக சாலையைக் கடக்கவும், அதிக நெரிசலில் சிக்காமல் வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கிறது.
आज का दिन भारतीय रेल के लिए, विशेष रूप से मुंबई और महाराष्ट्र की आधुनिक कनेक्टिविटी के लिए बहुत बड़ा है। pic.twitter.com/s4h9FnUvcW
— PMO India (@PMOIndia) February 10, 2023
Vande Bharat trains are a reflection of India's speed and scale. pic.twitter.com/hoNc6WDu2l
— PMO India (@PMOIndia) February 10, 2023
आज देश में आधुनिक ट्रेनें चलाई जा रही हैं, मेट्रो का विस्तार हो रहा है, नए-नए एयरपोर्ट्स और पोर्ट्स बनाए जा रहे हैं। pic.twitter.com/58e4HvqwIk
— PMO India (@PMOIndia) February 10, 2023
इस बार के बजट में मध्यम वर्ग को मजबूती दी गई है। pic.twitter.com/Cs2Wbg8JjF
— PMO India (@PMOIndia) February 10, 2023