ருவாண்டா அரசின் கிரின்கா திட்டத்தின் கீழ் இதுவரை சொந்தமாக பசுமாடு இல்லாத கிராம மக்களுக்கு 200 பசுமாடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார். ருவேரு மாதிரி கிராமத்தில் ருவாண்டா அதிபர் பால் ககாமே முன்னிலையில் பசுமாடுகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
விழாவில் பேசிய பிரதமர் கிரின்கா திட்டத்தையும் இது தொடர்பாக அதிபர் பால் ககாமேயின் முயற்சியை பாராட்டினார். வெகு தொலைவில் உள்ள ருவாண்டாவில் கிராமங்களில் பொருளாதார அதிகாரமளித்தலுக்காக பசுவுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை பார்த்து இந்தியாவில் உள்ள மக்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைவார்கள் என அவர் கூறினார். இருநாடுகளிலும் கிராமப்புற வாழ்க்கையில் உள்ள ஒற்றுமை குறித்து அவர் பேசினார். கிரின்கா திட்டம் ருவாண்டாவில் உள்ள கிராமங்களின் முன்னேற்றத்திற்கு உதவும் என அவர் குறிப்பிட்டார்.
பின்னணி
கிரின்கா என்ற சொல்லுக்கு நீங்கள் ஒரு பசுவை வைத்துக் கொள்ளலாம் எனப் பொருள் படுவதுடன் ருவாண்டாவில் நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த கலாச்சார பழக்க வழக்கமாக ஒருவருக்கு மரியாதை மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் பசுமாடு வழங்கும் பழக்கத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.
குழந்தைகளிடையே அதிக அளவில் காணப்படும் ஊட்டச்சத்தின்மையை போக்கும் வகையிலும் வறுமை ஒழிப்பை வேகப்படுத்தும் வகையிலும், கால்நடை மற்றும் பயிரிடுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையிலும் கிரின்கா திட்டம் அதிபர் பால் ககாமே அவர்களால் தொடங்கப்பட்டது. ஏழை ஒருவருக்கு பால் கொடுக்கும் பசு அளிக்கும் கிரின்கா திட்டம் வாழ்வாதாரத்தை பெருக்கி, பசுமாட்டின் சாணத்தை உரமாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை மேம்படுத்தி அதன் மூலம் மண் தரத்தை மேம்படுத்தி புற்கள் மற்றும் மரங்களை நட்டு மண் அரிப்பு குறைக்கப்பட வேண்டும் என்பதை இந்த திட்டம் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் ஆயிரக்கணக்கானவர்கள் கிரின்கா திட்டத்தின் கீழ் பசுமாடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 2016 ஜூன் மாதம் வரை மொத்தம் 2,48,566 பசுக்கள் ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ருவாண்டாவில் வேளாண் உற்பத்தி குறிப்பாக பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்திஅதிகரிக்கவும், ஊட்டச்சத்தின்மையை குறைக்கவும் வருவாய் அதிகரிக்கவும் இந்த திட்டம் பங்களித்துள்ளது. மேலும் இந்த திட்டம் ருவாண்டா மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமரசத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. ஒருவர் மற்றவருக்கு ஒரு பசுமாட்டை அளிக்கும்போது, அளிப்பவர் மற்றும் பெறுபவர் இடையே நம்பிக்கையையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது என்ற கலாச்சார கொள்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. கிரின்கா திட்டத்தின் உண்மையான இலக்கு இதுவாக இருந்திருக்கவில்லை என்ற போதிலும், இது இந்த திட்டத்தின் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் பயனாளியாக யார் இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு முக்கிய அம்சத்தை இந்த திட்டம் பின்பற்றி வருகிறது. பசுவை சொந்தமாக கொண்டிருக்காத ஆனால் அதற்குத் தேவையான புல்லை வளர்ப்பதற்குத் தேவையான நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் ஏழைகள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவதாக ருவாண்டா அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார். பயனாளி மாடு கட்டுவதற்கான கொட்டகை ஒன்றை அமைக்கும் நிலையில் இருக்க வேண்டும் அல்லது மற்றவரின் பசுமாட்டையும் சேர்த்து பராமரிக்கும் வகையில் சமூக கொட்டகை ஒன்றை அமைக்க முன்வரவேண்டும்.
Being part of a transformative project towards economic development of Rwanda! PM @narendramodi donates 200 cows under #Girinka - One Cow per Poor Family Programme at Rweru village. Girinka is an ambitious projects that provides both nutritional & financial security to the poor. pic.twitter.com/bXOKbOnd9g
— Raveesh Kumar (@MEAIndia) July 24, 2018
Transforming lives in rural areas! More images of cow donation function under Rwanda's Girinka programme. Rwandan President @PaulKagame joined PM @narendramodi at the event. pic.twitter.com/xlVGYmrXNT
— Raveesh Kumar (@MEAIndia) July 24, 2018