If there is any creation made by man which is immortal its India’s constitution: PM Modi
It’s not easy to make a constitution which binds the country, says the PM
Constitution is not just a book but also contains social philosophy says, PM Modi
Our constitution has kept us on the path democracy, says PM Modi
GST has unified the nation & dream of one tax one nation has been made possible, says PM Modi
Legislature should have the independence of making laws, the executive should have independence in taking decisions: PM
Nearly 18 lakh pre litigated and 22 lakh pending cases have been cleared: PM

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் இன்று தேசிய சட்ட தினம் 2017-ஐ குறிக்கும் வகையில் நடைபெற்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

நமது ஜனநாயக கட்டமைப்பின்ஆன்மாவாக அரசியல் சட்டம் உள்ளது என அவர் வர்ணித்தார். அரசியல் சட்டத்தைவகுத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார். அரசியல் சட்டமானதுகாலத்தின்சோதனைகளை எதிர்கொண்டு தவறானவர்களின் கருத்து தவறானது என்பதை நிரூபித்ததுஎன அவர் தெரிவித்தார்.

தனது உரையில் பிரதமர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், டாக்டர் சச்சிதானந்த்சின்ஹா, டாக்டர் ராஜேந்திரபிரசாத் மற்றும் டாக்டர் சர்வபள்ளிராதாகிருஷ்ணன் ஆகிய தலைவர்களின் கருத்துகளைசுட்டிக்காட்டிப் பேசினார். இந்தக்கருத்துகள் அனைத்தும் அரசியல் சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தின் பல்வேறு முகங்களைஉயர்த்திக்காட்டபயன்படுத்தப்பட்டது. அரசியல் சட்டத்தின் நீண்ட அல்லது அழியாத்தன்மை), அதன் செயல்தன்மை மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகிய நோக்கங்கள் இதில் அடங்கும்.

அரசியல் சட்டம் என்பது நமது பாதுகாவலராகத்திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். நமது பாதுகாவலரான நமது அரசியல் சட்டம் நம்மிடம் கொண்டுள்ளஎதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மக்களாகிய நாம் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டின் தேவைகள்மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்களைக்கருத்தில் கொண்டு, அரசு நிர்வாகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிப்பதுடன் அவற்றை பலப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். அடுத்த ஐந்தாண்டுகளில் நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்க நமது சக்திகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசியல் சட்டம் என்பது ஒரு சமூக ஆவணமாகவும்விவரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். சுதந்திரம் பெற்ற போதுநம்மிடையே உள்ள பலவீனங்களாக அடையாளம் காணப்பட்டவை இதுவரையில்அகற்றப்படாமல் இருப்பது துரதிருஷ்டமாகும் என அவர் குறிப்பிட்டார். இந்தியா முழுத் தன்னம்பிக்கையுடன் இருக்கும் தற்போதைய காலம் ஒரு பொற்காலம் என்றும் விவரிக்கப்படலாம். இந்த உறுதியான சூழ்நிலை புதிய இந்தியாவை உருவாக்குவதற்காகபயன்படுத்திக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

எளிதாக வாழ்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இது தொடர்பாக அரசின் பங்களிப்பு வரன்முறையாளராக மட்டும் இன்றி வசதி செய்து கொடுப்பவராக இருக்க வேண்டும் என்று கூறினார். பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை விரைவாக திருப்பி அளித்தல், விரைவான பாஸ்போர்ட்விநியோக உள்ளிட்ட கடந்த மூன்றாண்டுகளில் கொண்டு வரப்பட்ட எளிதாக வாழ்வதற்கான பல்வேறு உதாரணங்களைப் பிரதமர் அளித்தார். இந்த முயற்சிகள் அனைத்தும் சமூகத்தின் அனைத்து தரப்பினர்மத்தியிலும்நேர்மறைதாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் கூறினார். 1200 பழமையான சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எளிதான வாழ்க்கை என்பது எளிதான வர்த்தகம் செய்வதிலும் ஒரு நேர்மறைதாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

நீதித்துறையில்வழக்குகள்நிலுவையில்இருப்பதைக்குறைப்பதில் மக்கள் நீதிமன்றங்கள் முக்கியப் பங்களிக்கும் என அவர் தெரிவித்தார். எளிதாக நீதியை அணுகுவதற்காகமேற்கொள்ளப்படும் இதர நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

அடிக்கடி தேர்தலகள் நடத்த வேண்டிருப்பதால் அரசு கஜானாவுக்கு ஏற்படும் பெரும் செலவு பற்றியும், பாதுகாப்புப் படையினர் மற்றும் இதர குடிமப்பணியாளர்கள் அந்தப் பணிகளுக்காகஅனுப்பப்ப்டுவது மற்றும் வளர்ச்சிப் பணிகள் மீதான தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட பிரதமர், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார்.

நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை இடையே சமநிலை இருப்பதே அரசியல் சட்டத்தின் முதுகெலும்பு என பிரதமர் குறிப்பிட்டார். இது தொடர்பாக பிரதமர் உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகளையும்சுட்டிக்காட்டினார்.

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.