We have agreed to strengthen our cooperation in areas of renewable energy, we welcome Saudi Arabia in the International Solar Alliance: Prime Minister Modi
The barbaric terrorist attack in Pulwama last week is anti-humanitarian: PM Modi
Destroying the infrastructure of terrorism and those supporting terror organisations is very important: Prime Minister

மேதகு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் சடேகி அவர்களே, இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்.

நண்பர்களே,

முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் இளவரசரையும் அவரது குழுவினரையும் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பொருளாதார, சமூக, கலாச்சார உறவுகள் பல நூற்றாண்டுகளாக நீடித்து வருவதாகும். இந்த உறவுகள் எப்போதுமே சுமுகமாகவும் நட்புறவுடனுமே இருந்து வந்துள்ளன. நமது இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நெருக்கமான, தீவிரமான தொடர்பு என்பது நமது நாடுகளுக்கு இடையிலான உயிரோட்டமானதொரு பாலமாகவே இருந்து வருகிறது. இளவரசராகிய உங்களின் தனிப்பட்ட விருப்பமும் வழிகாட்டுதலும் நம் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் தீவிரமானதாக, ஆழமானதாக, வலுவானதாக ஆக்கியுள்ளது. இன்றைய 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய கேந்திரமான கூட்டாளியாக சவுதி அரேபியா விளங்குகிறது. விரிவுபடுத்தப்பட்ட நமது அருகாமை என்பது மிகவும் நெருக்கமானதாகவும் அதே நேரத்தில் இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பிற்கான முக்கியமானதொரு ஆதாரமாகவும் விளங்குகிறது. 2016-ம் ஆண்டில் நான் சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்தபோது, நமது உறவுகளுக்கு பல புதிய கோணங்களைக் கொடுத்தோம். குறிப்பாக எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் அர்ஜெண்டினா நாட்டில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக உங்களை சந்தித்ததன் விளைவாக கேந்திரமான நமது கூட்டணியின் சாரமானது பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் புதிய கோணங்களை மேற்கொண்டுள்ளது. உங்களது ஆலோசனைக்கு இணங்க ஈராண்டுகளுக்கு ஒருமுறையான உச்சி மாநாடு மற்றும் கேந்திரமான கூட்டணிக்கான கவுன்சில் ஆகியவற்றை உருவாக்குவதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவை நமது உறவுகளுக்கு நலம் பயக்கும் என்பதோடு அதற்கு வலுவையும், வேகத்தையும் முன்னேற்றத்தையும் வழங்கும்.

நண்பர்களே,

இரு தரப்பு உறவுகள் குறித்த அனைத்து விஷயங்கள் குறித்தும் நாங்கள் விரிவாகவும் பயனுள்ள வகையிலும் விவாதித்தோம். நமது பொருளாதார ஒத்துழைப்பினை புதியதொரு உச்சத்திற்குக் கொண்டு செல்வது என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். நமது நாட்டுப் பொருளாதாரத்திற்குள் சவுதி அரேபியாவிலிருந்து நிறுவன ரீதியான முதலீட்டிற்கு வழியேற்படுத்தித் தரும்படியான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இந்தியாவின் கட்டமைப்பு பணிகளில் சவுதி அரேபியாவின் முதலீட்டை நான் வரவேற்கிறேன்.

மேதகு பட்டத்து இளவரசர் அவர்களே,

உங்களது  “2030-ம் ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வை” மற்றும் உங்கள் தலைமையின் கீழ் நிறைவேற்றப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை “இந்தியாவில் உற்பத்தி செய்”, “இந்தியாவில் புதிய தொழிலைத் தொடங்கு” போன்ற இந்தியாவின் முன்னணித் திட்டங்களுக்கு உகந்ததாகவே அமைந்துள்ளன. எரிசக்தி குறித்த நமது உறவுகளை கேந்திரமானதொரு கூட்டணியாக மாற்றுவதற்கான நேரம் இதுவே ஆகும். உலகத்தின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையும் மற்றும் கேந்திரமான பெட்ரோலிய சேமிப்பு ஏற்பாடு ஆகியவற்றில் சவுதி அரேபியாவின் ஈடுபாடு நமது எரிசக்தி குறித்த உறவுகளை வழக்கமான வாங்குபவர் – விற்பவர் என்ற உறவுகளுக்கு அப்பால் கொண்டு செல்கின்றது. மறுசுழற்சி எரிசக்தி துறைகளில் நமது பரஸ்பர ஒத்துழைப்புக்கு நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். சூரிய ஒளி மூலமான மின்சாரத்திற்கான சர்வதேச கூட்டணியில் சவுதி அரேபியாவையும் நாங்கள் வரவேற்கிறோம். அணு மூலமான எரிசக்தியை, குறிப்பாக நீர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் அமைதியான வழிகளில் பயன்படுத்துவது என்பது நமது ஒத்துழைப்பின் மற்றொரு கோணமாக அமைகிறது. குறிப்பாக, நமது கேந்திரமான சுற்றுச் சூழலின் பின்னணியில் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது; விரிவுபடுத்துவது ஆகியவை குறித்தும் நாங்கள் வெற்றிகரமாக விவாதித்துள்ளோம். கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஜனராத்ரியா விழாவில்  ‘மதிப்புமிகு விருந்தினர்’ என்ற அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்தது. இன்று நமது கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது என்ற இலக்கை நாங்கள் வகுத்துள்ளோம். வர்த்தகம், சுற்றுலா ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் சவுதி அரேபிய குடிமக்களுக்கு இணைய வழி விசா ஏற்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதைப் போன்றே இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப் பயணத்தினை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளதற்காக மேதகு இளவரசருக்கு நாம் நன்றி பாராட்டுகிறோம். சவுதி அரேபியாவில் இந்திய நாட்டைச் சேர்ந்த 27 லட்சம் பேர் அமைதியான வகையிலும் பயனுள்ள வகையில் வசித்து வருகின்றனர். இவர்கள் நம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய கண்ணியாக விளங்குகின்றனர். சவுதி அரேபியாவின் முன்னேற்றத்தில் அவர்களின் சாதகமான பங்களிப்பையும் மேதகு இளவரசர் அவர்கள் பாராட்டியிருந்தார். அவர்களின் நலனை நீங்கள் எப்போதுமே பாதுகாத்து வருகின்றீர்கள். இதற்காக அவர்களின் நன்றியும் வாழ்த்துக்களும் எப்போதுமே உங்களுடன் இருக்கும்.

நண்பர்களே,

கடந்த வாரத்தில் புல்வாமா பகுதியில் நடைபெற்ற கொடூரமான தீவிரவாத தாக்குதல் என்பது உலகத்தில் அழிவை ஏற்படுத்தக் கூடிய, மனித குலத்திற்கு எதிரான அபாயத்தை மிகவும் கொடூரமான வகையில் நமக்கு மீண்டும் நினைவுட்டியுள்ளது. இத்தகைய அச்சுறுத்தலை சிறப்பான வகையில் எதிர்கொள்ள எந்தவகையான  தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் நாடுகளின் மீது அனைத்து விதமான நெருக்கடிகளையும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் ஒப்புக் கொண்டோம். பயங்கரவாதத்திற்கான  கட்டமைப்பை அழித்தொழிப்பது; அதற்கான ஆதரவிற்கு முடிவு கட்டுவது; பயங்கர வாதிகளையும், அவர்களது ஆதரவாளர்களையும் தண்டிப்பது ஆகியவை மிகவும் முக்கியமானதாகும். அதே நேரத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு, அதனோடு கூடவே இதற்கான செயல்திட்டத்திற்கான வலுவான தேவையும் உள்ளது. இதன் மூலம் வன்முறை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை தூண்டி விடும் சக்திகள் நமது இளைஞர்களை தவறான வழிக்கு திசை திருப்பி விடக் கூடாது. இந்த விஷயத்தில் இந்தியாவும் சவுதி அரேபியாவும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

மேற்கு ஆசியாவிலும் வளைகுடாப் பகுதியிலும் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கான நலன்களை நம் இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டுள்ளன. இன்று நடைபெற்ற நமது கலந்துரையாடலில் நமது பணிகளை ஒருங்கிணைப்பது என்றும் இந்தப் பகுதியில் நமது பங்கேற்பை விரைவுபடுத்துவது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. நம் இரு நாடுகளுக்கும் பயன்தரத்தக்க, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், கடல்வழி பாதுகாப்பு, இணையவழி பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வது என்றும் நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

மேதகு இளவரசர் அவர்களே,

நம் இரு நாட்டு உறவுகள் மேலும் துரிதமாக முன்னேறுவதற்கான புதியதொரு கோணத்தை உங்கள் வருகை ஏற்படுத்தியுள்ளது. எங்களது அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்காக மேதகு இளவரசர் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியாவில் வசதியான வகையில் தங்கியிருக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களையும் மேதகு இளவரசருக்கும் அவரது குழுவினருக்கும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Bad loans decline: Banks’ gross NPA ratio declines to 13-year low of 2.5% at September end, says RBI report

Media Coverage

Bad loans decline: Banks’ gross NPA ratio declines to 13-year low of 2.5% at September end, says RBI report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 27, 2024
December 27, 2024

Citizens appreciate PM Modi's Vision: Crafting a Global Powerhouse Through Strategic Governance