அண்மையில் காலமான முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவை போற்றும் வகையில் புதுதில்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில்  பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (20.08.2018) உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நம் கையில் இல்லை, ஆனால், நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும் என்று கூறினார். வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் அதன் நோக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அடல்ஜி தமது வாழ்க்கை மூலம் நமக்கு காண்பித்திருக்கிறார் என்று அவர் கூறினார்.  அடல்ஜி தமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சாதாரண மனிதர்களுக்காகவே அளித்தார்.  இளமை காலம் தொட்டு தமது உடல் ஒத்துழைக்கும் வரை அவர் நாட்டுக்காகவே வாழ்ந்தார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  அடல்ஜி நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்தார்.  சாதாரண மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதே அவரது குறிக்கோளாக இருந்தது என்று  திரு. மோடி தெரிவித்தார்.

|

ஆதிக்கம் மிகுந்த அரசியல் சித்தாந்தத்திற்கு எந்த வகையிலும் மாற்று இல்லை என்று கருதப்பட்ட நேரத்தில் வாஜ்பாய் தமது அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்தார் என்று பிரதமர் குறிப்பிட்டார். தனிமைப்படுத்தப்படும் நிலையை எதிர்நோக்கிய போதிலும் அவர் தமது கொள்கைப்பிடிப்பை கைவிடவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.  அவர் நீண்டகாலம் எதிர்க்கட்சியிலேயே இருந்தார்.  இருந்தபோதிலும், அவரது கொள்கைகளில் உறுதியுடன் திகழ்ந்தார் என்று திரு. மோடி கூறினார்.  வாஜ்பாய் நாடாளுமன்ற பாரம்பரியத்திற்கு மதிப்பளித்தார்.  தமக்கு வாய்ப்பு கிட்டிய போது தமது தொலைநோக்கு திட்டங்களை மக்களின் நலனுக்காக செயல்படுத்தினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் தம்முள் அடல் இருப்பதை உணர முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.  அணுஆயுத சோதனைகளை 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி நடத்தியதன் மூலம் அவர் உலகத்தை திகைக்க வைத்தார் என்று பிரதமர் நினைவுகூர்ந்தார்.  இந்த சோதனைகளின் வெற்றியை நமது விஞ்ஞானிகளின் திறமைக்கு அவர் அர்ப்பணித்தார்.  உலகம் முழுவதும் இதுகுறித்து எதிர்மறையான கருத்துக்கள் பரவிய போதிலும் அடல்ஜி எந்த நெருக்கதலுக்கும் அடிபணியவில்லை.  இதன்மூலம் இந்தியா என்றால் அடல் என்று உலகத்திற்கு நிரூபித்தார் என பிரதமர் தெரிவித்தார். 

|

வாஜ்பாயின் தலைமையின் கீழ், மூன்று புதிய மாநிலங்கள் எந்தவித கசப்பு உணர்வின் சுவடே இல்லாமல் அமைக்கப்பட்டன என்று பிரதமர் குறிப்பிட்டார்.   முடிவு எடுப்பதில் ஒவ்வொருவரையும் எவ்வாறு அரவணைத்து செல்வது என்பதை காட்டினார் என்றபதை அவர் விளக்கினார்.

|

 அடல்ஜி முதல் முதலாக மத்தியில் ஆட்சி அமைத்த போது அவரை ஆதரிக்க எவரும் விரும்பவில்லை. அதனால் அவரது ஆட்சி 13 நாட்களில் கவிழ்ந்தது என்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.  ஆனால், அடல்ஜி தமது நம்பிக்கையை இழக்கவில்லை.  மக்களுக்காக தொண்டாற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார்.  கூட்டணி அரசியலை எப்படி நடத்துவது என்பதை அவர் திறம்பட கையாண்டு தெளிவுபடுத்தினார் என்றார் பிரதமர்.

|

காஷ்மீர் குறித்த உலக நாடுகளின் எண்ணத்தை வாஜ்பாய் மாற்றினார் என்று பிரதமர் தெரிவித்தார்.  பயங்கரவாதப் பிரச்சினைகளை எடுத்துக் கூறி கஷ்மீர் பிரச்சினையை உலகத்தின் மையப்புள்ளியாக அவர் மாற்றினார். 

அடல்ஜி ஓர் உந்துசக்தியாக, முன்மாதிரியாக எப்போதும் இருப்பார் என்று பிரதமர் கூறினார்.  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார்.  இருப்பினும், அவர் மறைந்த போது மக்கள் தங்கள் துக்க உணர்வை அளவில்லாமல் வெளிப்படுத்தியதை காண முடிந்தது.   இது அவரது மகத்துவத்தை உணர்த்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.  வாஜ்பாயை ஒருபோதும் சந்தித்திராத, இளம் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தான் பெற்ற தங்கப் பதக்கத்தை அடல்ஜி-க்கு அர்ப்பணித்துள்ளார் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  இது அவர் அடைந்த வெற்றி மற்றும் புகழின் உச்சத்தை காட்டுவதாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Google CEO Sundar Pichai meets PM Modi at Paris AI summit:

Media Coverage

Google CEO Sundar Pichai meets PM Modi at Paris AI summit: "Discussed incredible opportunities AI will bring to India"
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 12 பிப்ரவரி 2025
February 12, 2025

Appreciation for PM Modi’s Efforts to Improve India’s Global Standing