தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில், சோமநாத் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் திரு கேஷுபாய் படேல் உடல் நல குறைவால் கூட்டத்தில் பங்கேற்க இயலாத காரணத்தால், திரு எல். கே. அத்வானி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் திரு நரேந்திர மோடி, திரு ஹர்ஷவர்தன் நியோதியா, திரு பி. கே. லஹெரி, திரு ஜெ. டி. பரமர் ஆகிய அறங்காவலர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் திரு அமித்பாய் ஷா-வை வாரியம் வரவேற்றது.
பண்டைய பாரம்பரிய புனித பயணத்தின் இலக்காக சோமநாத் கோவிலை மேம்படுத்த வேண்டிய தேவையை பிரதமர் வலியுறுத்தினார். சோமநாத்திற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையை அறக்கட்டளை ஆய்வு செய்தது. சோமநாத் கோவிலுக்கு ஒரு கோடி பக்தர்கள் வருகை தர உள்ளதால், அதன் கலை சார்ந்த கட்டமைப்பு வளர்ச்சியை திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களில் சோம்நாத் கோவிலுக்கு, இருபது லட்சம் ரசிகர்கள் உள்ளனர் என்று . அறங்காவலர் குழு தெரிவித்தது.
தொலைந்து போன பல்வேறு வரலாற்று இணைப்புகளை அறிய பல பகுதிகளில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளலாம் என்று பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். உயர் தொழில்நுட்ப கடல் சார் ஈர்ப்பு மற்றும் மெய்நிகர் நிகழ்ச்சிகள் வருங்கால திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும். பெரும்பாலான பகுதிகளை சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் தங்க செலாவணி திட்டத்தின் கீழ் சுமார் 6 கிலோ தங்கத்தை சோம்நாத் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.