இந்தூரில் தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் ஏற்பாடு செய்த இமாம் ஹுஸைன் உயிர்த்தியாக நினைவு நிகழ்ச்சியான ஆஷரா முபாரகாவில் இன்று (14.09.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டு அங்குத் திரளாகக் கூடியிருந்தோரிடையே உரையாற்றினார்.
இமாம் ஹுஸைனின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இமாம் எப்பொதுமே அநீதிக்கு எதிராக நின்றார் எனவும் அமைதியையும் நீதியையும் உயர்த்திப் பிடிப்பதற்காக அவர் உயிர் தியாகம் புரிந்தார் எனவும் கூறினார். இமாமின் போதனைகள் இன்றும் பொருத்தப்பாடு உடையது என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் ஸ்யேட்னா முஃபாடல் சைஃபுதீனின் பணிகளைப் பாராட்டிய பிரதமர், தேசத்தின் பால் கொண்ட அன்பும் அர்ப்பணிப்புமே அவரது போதனைகளின் அடிநாதமாகும் என்றார்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு பிற நாடுகள் அனைத்திலிருந்தும் இந்தியாவை வேறுபடுத்தும் என்று பிரதமர் கூறினார். “ நாம் நமது கடந்த காலம் குறித்துப் பெருமிதம் கொள்கிறோம், நமது நிகழ்காலத்தை நம்புகிறோம், நமது ஒளிமயமான எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாவூதி போஹ்ரா சமுதாயத்தினரின் பங்களிப்புகள் பற்றிப் பாராட்டிய பிரதமர், இந்தியாவின் முன்னேற்றத்திலும் அதன் வளர்ச்சி வரலாற்றிலும் இந்தச் சமுதாயத்தினர் எப்போதுமே ஒரு முக்கியப் பாத்திரத்தை வகித்துள்ளனர் என்று கூறினார். இந்தியாவின் கலாச்சாரத்தின் வலிமையை உலகெங்கும் பரப்பும் மாபெரும் பணியை இந்தச் சமுதாயத்தினர் தொடர்ந்து செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
போஹ்ரா சமுதாயத்தினரைப் புகழ்ந்து பேசிய பிரதமர் திரு. மோடி, இந்தச் சமுதாயத்தின் பேரன்பைப் பெற்றது தனது அதிர்ஷ்டமே என்றார். தான் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது இந்தச் சமுதாயத்தினர் அளித்த உதவியை நினைவு கூர்ந்த மோடி இந்தச் சமுதாயத்தினர் காட்டிய பேரன்பே தம்மை இந்தூருக்கு அழைத்துவந்ததாகக் குறிப்பிட்டார்.
தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் மேற்கொண்டுவரும் பல்வேறு சமூக முன்முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், குடிமக்களின், குறிப்பாக வறியவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோரின் முன்னேறிய வாழ்க்கைத்தரத்தை உத்தரவாதப்படுத்த அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளைக் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத், ஸ்வச் பாரத் அபியான், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற அரசின் பல்வேறு மேம்பாட்டு ரீதியான முன்முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சிகள் சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறினார்.
ஸ்வச் பாரத் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்தூர் மக்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ‘ஸ்வச்சதா ஹி சேவா’ திட்டம் நாளை தொடங்கப்படும் என்று தெரிவித்த அவர், இந்த மாபெரும் இயக்கத்தில் துடிப்புடன் செயல்படுமாறு குடிமக்களைக் கேட்டுக் கொண்டார்.
வணிகத்தில் போஹ்ரா சமுதாயத்தினர் நேர்மையைக் கடைபிடித்துவருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், சரக்கு மற்றும் சேவை வரி, நொடித்தல் மற்றும் திவால் குறியீடு ஆகியவற்றின் மூலம் நேர்மையான வியாபாரிகள் மற்றும் பணியாளர்களை அரசு ஊக்குவிக்கிறது என்றார். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், புதிய இந்தியா உதயமாகி வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுஹான் கலந்துகொண்டார். முன்னதாக, டாக்டர் ஸ்யேத்னா முஃபாட்டல் சைஃபுதீன் பிரதமரின் தன்னிகரற்ற பணிகளுக்காக அவரைப் பாராட்டி, நாட்டுக்கான அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
‘अशरा मुबारक’ के इस पवित्र अवसर पर भी आपने मुझे यहां आने का मौका दिया, इसके लिए बहुत आभार।
— PMO India (@PMOIndia) September 14, 2018
मुझे बताया गया है कि टेक्नॉलॉजी के माध्यम से देश और दुनिया के अलग-अलग सेंटर्स से भी समाज के लोग जुड़े हैं, आप सभी का भी मैं अभिनंदन करता हूं: PM
इमाम हुसैन के पवित्र संदेश को आपने अपने जीवन में उतारा है और दुनिया तक उनका पैगाम पहुंचाया है
— PMO India (@PMOIndia) September 14, 2018
इमाम हुसैन अमन और इंसाफ के लिए शहीद हो गए थे
उन्होंने अन्याय, अहंकार के विरुद्ध अपनी आवाज़ बुलंद की थी
उनकी ये सीख जितनी तब महत्वपूर्ण थी उससे अधिक आज की दुनिया के लिए ये अहम है: PM
हम पूरे विश्व को एक परिवार मानने वाले, सबको साथ लेकर चलने की परंपरा का मानने वाले लोग हैं।
— PMO India (@PMOIndia) September 14, 2018
हमारे समाज की, हमारी विरासत की, यही शक्ति है जो हमें दुनिया के दूसरे देशों से अलग करती है: PM
हमें अपने अतीत पर गर्व है,
— PMO India (@PMOIndia) September 14, 2018
वर्तमान पर विश्वास है और
उज्जवल भविष्य का आत्मविश्वास है: PM
बोहरा समाज के साथ मेरा भी रिश्ता बहुत ही पुराना है।
— PMO India (@PMOIndia) September 14, 2018
मेरा सौभाग्य है कि आपका स्नेह मुझ पर हमेशा रहा।
गुजरात का शायद ही कोई गांव हो जहां बोहरा व्यापारी नहीं मिलता हो।
मैं जब मुख्यमंत्री था तब कदम-कदम पर बोहरा समाज ने साथ दिया।
आपका यही अपनापन मुझे आज यहां खींच लाया है: PM
अब आयुष्मान भारत देश के करीब-करीब 50 करोड़ गरीब भाई-बहनों के लिए संजीवनी बनकर आई है।
— PMO India (@PMOIndia) September 14, 2018
एक साल में 5 लाख तक का मुफ्त इलाज सुनिश्चित करने वाली इस योजना का अभी ट्रायल चल रहा है: PM
स्वच्छ भारत अभियान शुरु भले ही सरकार ने किया हो, लेकिन आज इस अभियान को देश की 125 करोड़ जनता चला रही है।
— PMO India (@PMOIndia) September 14, 2018
गांव-गांव, गली-गली में स्वच्छता के प्रति एक अभूतपूर्व आग्रह पैदा हुआ है।
चार वर्ष पहले तक जहां देश के 40% घरों में ही टॉयलेट थे आज ये दायरा 90% से भी अधिक हो गया है: PM
आज हम जिस इंदौर शहर में जुटे हैं, ये तो स्वच्छता के इस आंदोलन का अगुवा है।
— PMO India (@PMOIndia) September 14, 2018
इंदौर निरंतर स्वच्छता के पैमाने पर देशभर में No.1 रहा है।
इंदौर ही नहीं भोपाल ने भी इस बार कमाल किया है।
एक प्रकार से पूरे मध्य प्रदेश के मेरे युवा साथी, एक-एक जन इस आंदोलन को गति दे रहे हैं: PM
कल से स्वच्छता ही सेवा’ पखवाड़ा शुरु हो रहा है।
— PMO India (@PMOIndia) September 14, 2018
मैं कल खुद देश के स्वच्छाग्रहियों, समाज में स्वच्छता के प्रति जनजागरण करने वाले आप जैसे नागरिकों, धर्मगुरुओं, कलाकारों, उद्यमियों, यानि समाज के हर वर्ग के लोगों से वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से बातचीत करुंगा: PM
देश का व्यापारी और कारोबारी अर्थव्यवस्था की रीढ है
— PMO India (@PMOIndia) September 14, 2018
वो देश में रोज़गार पैदा करने वाली महत्वपूर्ण ईकाई है
उसको जितना प्रोत्साहन संभव है दिया जा रहा है
लेकिन ये भी सच है कि पांचों उंगलियां एक समान नहीं होतीं। हमारे बीच से ही ऐसे लोग निकलते हैं जो छल को ही कारोबार मानते है: PM
बीते 4 वर्षों में सरकार ये साफ संदेश देने में सफल हुई है कि जो भी हो वो नियमों के दायरे में हो।
— PMO India (@PMOIndia) September 14, 2018
GST, Insolvency and Bankruptcy Code जैसे अनेक कानूनों के माध्यम से ईमानदार कारोबारियों को प्रोत्साहित किया जा रहा है: PM
दुनिया में जिस प्रकार प्राचीन भारत की चमक थी, आज New India को वो सम्मान देने का सौभाग्य हमें मिला है।
— PMO India (@PMOIndia) September 14, 2018
देश के नव निर्माण के लिए हम निरंतर मिलकर आगे बढ़ते रहेंगे, इसी विश्वास के साथ मैं अपनी बात समाप्त करता हूं: PM