PM Modi addresses International Convention on the Universal Message of the Simhastha
PM Modi describes the gathering as Vichar Kumbh
Simhasth declaration will mark the start of a new discourse not only in India but around the world: PM
Vichar Kumbh must be held every year with the motive of discussing issues like afforestation and education of the girl child: PM
The Prime Minister, Shri Narendra Modi, today addressed the International Convention on the Universal Message of the Simhastha, at Ninaura near Ujjain.
The Prime Minister received President Maithripala Sirisena of Sri Lanka, at Indore airport. President Sirisena accompanied the Prime Minister from Indore, and both leaders arrived at the Convention together.
|
Addressing the gathering, which has also been described as a “Vichar Kumbh” on the sidelines of the Kumbh Mela, the Prime Minister described this convention as the birth of a new effort. He said this was a modern edition of what might have happened in ancient times, when thought-leaders of society would gather at the sites of Kumbh melas, to reflect and provide new vision to society.
|
Speaking at length on Indian tradition and culture, he said that the mantra of a ‘Bhikshuk’ is “may good happen to the person who gives me alms, and even to the person who does not.” The Prime Minister gave several other illustrations of the values and humanism which define Indian culture.
|
Referring to the launch of the Simhasth Declaration, which was dedicated to the world by Prime Minister Narendra Modi, Sri Lankan President Maithripala Sirisena, and Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan, the Prime Minister said this will mark the start of a new discourse not only in India but around the world.
The Prime Minister suggested that a ‘Vichar Kumbh’ should be held every year, to discuss issues such as afforestation and education of the girl child.
Today, every terrorist knows the consequences of wiping Sindoor from the foreheads of our sisters and daughters: PM
Operation Sindoor is an unwavering pledge for justice: PM
Terrorists dared to wipe the Sindoor from the foreheads of our sisters; that's why India destroyed the very headquarters of terror: PM
Pakistan had prepared to strike at our borders,but India hit them right at their core: PM
Operation Sindoor has redefined the fight against terror, setting a new benchmark, a new normal: PM
This is not an era of war, but it is not an era of terrorism either: PM
Zero tolerance against terrorism is the guarantee of a better world: PM
Any talks with Pakistan will focus on terrorism and PoK: PM
நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் திறனையும் அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம்.
நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும் நமது உளவுத்துறையினருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.
நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ஆப்ரேஷன் சிந்தூரின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
நான் அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும், பராக்கிரமத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு அன்னைக்கும், ஒவ்வொரு சகோதரிக்கும் மற்றும் ஒவ்வொரு மகளுக்கும் இந்த பராக்கிரமத்தை சமர்ப்பிக்கிறேன்.
நண்பர்களே, ஏப்ரல் 22ம் தேதி பகல்காமில் தீவிரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்கவந்த குற்றமற்ற அப்பாவி குடிமகன்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு,,,, அவர்களது குடும்பத்திற்கு முன்னே,,,, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர்.
இது தீவிரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும்
ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும்
ஒரே குரலில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின.
நாங்கள் தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி கொடுத்தோம்
இன்று ஒவ்வொரு தீவிரவாதியும், தீவிரவாதத்தினால் ஏற்படும் தொல்லையை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அதாவது, நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிப்பதற்கான அந்த செயலின் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.
நண்பர்களே,
ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு பெயர் மட்டுமல்ல
இந்த நாட்டின் கோடி கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு
ஆப்ரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு உறுதிமொழி
மே 6 ம் தேதி இரவு, மே 7 ம் தேதி காலை இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதை கண்டார்கள்.
இந்தியாவின் ராணுவம், பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது
அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீது சரியாக தாக்குதல் நடத்தினார்கள்
தீவிரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, பாரதம் இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள்
ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டது
அடிப்படையான முடிவு எடுக்கும்போது, அது சரியான முடிவுகளை கொண்டுவந்து தருகிறது
பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது பாரதம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியபோது,
பாரதம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாதக் குழுக்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவற்றின் நம்பிக்கையும் தவிடுபெடியானது.
பகவல்பூர் மற்றும் முரிதுகே போன்ற தீவிரவாதிகளின் வாழ்விடங்கள், உலக தீவிரவாதிகளின் பல்கலைக்கழகமாக விளங்கியது
உலகில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் எங்கேயாவது நடந்தால்,
செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும்
லண்டன் பாதாள ரயில் தாக்குதலாக இருக்கட்டும் அல்லது பாரதத்தில் பல ஆண்டுகளாக நடந்த பெரிய பெரிய தீவிரவாத தாக்குதலாக இருக்கட்டும்
இவற்றின் தொடர்பு எப்படியாவது இந்த தீவிரவாத முகாம்களோடு இணைந்திருந்தது
தீவிரவாதிகள் நமது சசோதரிகளின் நெற்றி குங்குமத்தை அழித்தனர். இதனால் பாரதம் தீவிரவாதத்தின் தலைமை பீடத்தை இப்போது அழித்திருக்கிறது.
பாரதத்தின் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான கொடுமையான தீவிரவாதிகள் இறந்திருக்கிறார்கள்.
தீவிரவாதத்தின் பல கிளைகள்
கடந்த 25-30 ஆண்டுகளாக வெளிப்படையாக பாகிஸ்தானில் உலாவி வருகிறார்கள்.
இவர்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தார்கள்.
அவர்களை பாரதம் ஒரே அடியில் அழித்து விட்டது.
நண்பர்களே,
பாரதத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மிகப்பெரிய நிராசையில் வீழ்ந்து விட்டது.
தோல்வி மனப்பான்மையில் வீழ்ந்து விட்டது.
நிலைகுலைந்து போய் விட்டது.
இந்த நிலைகுலைவின் காரணமாக பாகிஸ்தான் மற்றுமொரு அசட்டுத்தனமான நடவடிக்கை எடுத்தது.
தீவிரவாதத்தின் மீது பாரதத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறியாகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் நம்முடைய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை பாரதத்தின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது.
இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்த தயாராக இருந்தது.
ஆனால், பாரதம் பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது.
பாரதத்தின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சரியாக தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தானின் விமானப்படையின் ஏர் பஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம்.
இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது
பாரதம் முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
எனவே,
பாரதத்தின் தாக்குதல் செயல்பாடுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேட தொடங்கியது
பாகிஸ்தான் உலகம் முழுவதிலும் இந்த தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்யுங்கள் என வேண்டியது.
மேலும், முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10 ம் தேதி மதியத்திற்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத்தளபதி நம்முடைய ராணுவத்தளபதியோடு தொடர்பு கொண்டார்.
அதுவரை நாம் தீவிரவாத கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் அழித்து விட்டோம்.
தீவிரவாதிகளை சாவின் எல்லைக்கு கொண்டு சென்றோம்.
பாகிஸ்தான் தன் நெஞ்சத்தில் மறைத்து வைத்திருந்த தீவிரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம்.
இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது.
பாகிஸ்தான் தரப்பிலிருந்து இது சொல்லப்பட்டபோது,
அதாவது, அவர்களது தரப்பிலிருந்து தீவிரவாத தாக்குதலோ, அல்லது ராணுவத்தின் மூலம் அசட்டுத்தனமான தாக்குதல்களோ இனிமேல் இருக்காது என்று சொன்னபோது,
உடனே, பாரதம் அதை பற்றி யோசனை செய்தது.
நான் மீண்டும் சொல்கிறேன்.
பாகிஸ்தானின் தீவிரவாத ராணுவ முகாம்கள் மீது எங்களுடைய பதிலடி நடவடிக்கைகள் இப்போது சிறிதுகாலத்திற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது.
வருகிற நாட்களில்
பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம்.
அது எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை பார்ப்போம்.
நண்பர்களே,
பாரத்தின் மூன்று படைகளும், நம்முடைய விமானப்படை, நம்முடைய தரைப்படை, கடற்படை, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப்படை, பாரதத்தின் துணை ராணுவப்படை அனைத்தும் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன
சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதலுக்கு பிறகு இப்போது ஆப்ரேஷன் சிந்தூர் பாரதத்தின் வழிமுறையாகி விட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய கோட்டை கிழித்துள்ளது.
ஒரு புதிய அளவுகோல், ஒரு புதிய தரக்கட்டுப்பாடு உருவாகி இருக்கிறது.
முதலில், பாரதத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்.
நாங்கள் எங்களுடைய வழிமுறையில், எங்களுடைய விதிமுறைகளுக்கேற்ப, பதிலடி தருவோம்.
தீவிரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
இரண்டாவதாக, பாரதம் அணுஆயுத தாக்குதல் என்ற மிரட்டலையெல்லாம் பொருத்துக்கொள்ளாது.
அணுஆயுத தாக்குதல் என்கின்ற மிரட்டலோடு செயல்படுகின்ற தீவிரவாத முகாம்கள் மீது பாரதம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்
மூன்றாவதாக, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு மற்றும் தீவிரவாத குழுக்கள் இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், உலகம் பாகிஸ்தானின் உண்மையான ரூபம் என்ன என்று பார்த்திருக்கிறது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது,
பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர்.
ஒரு நாட்டால் ஆதரிக்கப்படும் தீவிரவாதத்திற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன இருக்கிறது.
நாங்கள் பாரதம் மற்றும் எங்களுடைய குடிமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவண்ணம் திடமான முடிவுகளை எடுப்போம்.
நண்பர்களே, யுத்த பூமியில் நாங்கள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இருக்கிறோம்.
மேலும், இந்த முறை ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புதிய கோணத்தை சேர்த்திருக்கிறது.
நாங்கள் பாலைவனங்கள், மலைகள் மீது எங்களுடைய திறமையை மிக பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம்.
மேலும்,
நியு ஏஜ் வார் பேரில் எங்களது திறமையை காண்பித்திருக்கிறோம்.
இந்த ஆப்ரேஷன் மூலமாக
நம்முடைய இந்தியாவிலேயே தயாரிப்போம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் திறமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது
21 ம் நூற்றாண்டின் போர் முறைகளில் இந்தியாவின் போர்க்கருவிகள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது
நண்பர்களே
இந்த மாதிரியான தீவிரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்
நம்முடைய ஒற்றுமை, நம்முடைய மிகப்பெரிய சக்தியாகும்
உண்மையில் இந்த யுகம், போருக்கானது அல்ல, ஆனால் இந்த யுகம் தீவிரவாதத்திற்கானதும் அல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான Zero Tolerance, ஒரு நல்ல உலகத்திற்கு உறுதி அளிக்கிறது
நண்பர்களே
பாகிஸ்தானின் ராணுவம், பாகிஸ்தானின் ஆட்சி எந்த வகையில் தீவிரவாதத்திற்கு துணைபோகின்றதோ அது ஒருநாள் பாகிஸ்தானை முடிவுக்கு கொண்டுவரும்
பாகிஸ்தான் தப்பிக்கவேண்டும் என்றால், தம் நாட்டில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளை சுத்தப்படுத்தவேண்டும்