ருவாண்டா அரசின் கிரின்கா திட்டத்தின் ஒரு பகுதியாக ருவேரு மாதிரி கிராமத்தில் மக்களுக்கு 200 பசுமாடுகளை அன்பளிப்பாகப் பிரதமர் மோடி வழங்கினார், ஏழை ஒருவருக்குக் கொடுக்கும் பசு அளிக்கும் கிரின்கா திட்டம் வாழ்வாதாரத்தைப் பெருக்கி, மற்றும் அந்தப் பசுக்களுக்குப் பிறக்கும் முதல் பிறந்த கன்றைப் பக்கத்து வீட்டிற்கு வழங்குகிறது.
ருவாண்டா நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அந்நாட்டின் தலைநகர் கிகாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற அவருக்குச் சிவப்பு கப்மள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களும் உயரதிகாரிகளும் பிரதமர் மோடி வரவேற்றனர். அந்நாட்டு அதிபர் பால் ககாமேவைச் சந்தித்துப் பேச உள்ளார்.
கிகாலியில் இனப்படுகொலை நினைவகத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். ருவாண்டா அரசு, ‘கிரிங்கா’ என்ற பெயரில் ‘குடும்பத்துக்கு ஒரு பசு’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்துக்கு இந்தியாவின் சார்பில் இலவசமாக 200 பசுக்களைப் பிரதமர் மோடி ருவாண்டா கிராமத்துக்கு வழங்குகிறார்.
PM @narendramodi landed in Rwanda a short while ago. He was welcomed by President @PaulKagame at the airport.
— PMO India (@PMOIndia) July 23, 2018
A historic visit starts with a special gesture.
— PMO India (@PMOIndia) July 23, 2018
President @PaulKagame personally welcomed PM @narendramodi to Rwanda. pic.twitter.com/eBSfr2pTVm