I am glad that Indo-Nepal cooperation is being expanded to a greater extent: PM Modi
The launch of this pipeline as a first in South Asia is very satisfying and reaffirms our commitment to expand our relations with our neighbours even more: PM Modi
As Mr Oli has said, the consumers on both sides are set to benefit from the reduction in costs once this pipeline becomes operational: PM Modi

இந்தியா – நேபாளம் இடையே அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்லும் திட்டத்தை, பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஒலி ஆகியோர், காணொலி காட்சி மூலம் இன்று (10.09.2019) கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இந்தியாவின் மோதிஹரியிலிருந்து நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் இடையே அமைக்கப்பட்டுள்ள, நாடுகளுக்கு இடையே, குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் எடுத்துச் செல்லும் தெற்காசியாவின் முதலாவது திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் திரு.கே.பி.சர்மா ஒலியும், இன்று காணொலி காட்சி வாயிலாக கூட்டாக தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஒலி, மிக முக்கியமான இந்த இணைப்புத் திட்டத்தை, திட்டமிட்ட காலத்திற்கு மிக முன்னதாகவே நிறைவேற்றி முடித்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.

மோதிஹரி-அம்லேக்கஞ்ச் இடையேயான 69 கிலோ மீட்டர் தூர குழாய் மூலம், ஆண்டுக்கு 2 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான தூய்மையான பெட்ரோலியப் பொருட்களை, குறைந்த விலையில் நேபாள மக்களுக்கு விநியோகிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நேபாளத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை, லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பதென்ற பிரதமர் ஒலியின் அறிவிப்பையும் வரவேற்பதாக அவர் கூறினார்.

இந்தியா – நேபாளம் இடையே, அடிக்கடி அரசின் உயர்மட்ட அளவிலான சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம், இருதரப்பு நட்புறவை விரிவுபடுத்த வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா – நேபாளம் இடையேயான இருதரப்பு நட்புறவு, மேலும் வலுப்பெற்று பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நேபாளத்திற்கு வருமாறு அந்நாட்டுப் பிரதமர் ஒலி விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage