16வது மக்களவையின் அமர்வில் பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று (13.02.2019) உரையாற்றினார்.
அவையை நடத்தியதில் மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜனின் பங்களிப்பை அவர் பாராட்டிப் பேசினார். 16வது மக்களவையின் பதவிக் காலத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்களின் பங்கையும் பிரதமர் பாராட்டினார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை முன்னாள் அமைச்சர் மறைந்த அனந்த் குமாரின் சேவையையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மக்களவையில் உரையாற்றிய பிரதமர், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான பெரும்பான்மையைக் கொண்ட ஒரு அரசை நாடு கண்டிருப்பதாகக் கூறினார். மக்களவையின் ஆக்கப்பூர்வமான பயன்பாட்டைப் பற்றி பேசிய பிரதமர், சராசரி 85 சதவீதமாக இருந்தபோதிலும், இந்த மக்களவையின் 17 கூட்டத்தொடர்களில் ஏழு கூட்டத் தொடர்கள் 100 சதவீத செயல்பாட்டைக் கொண்டதாக இருந்ததாகவும் கூறினார்.
உறுப்பினர்களைப் பாராட்டிய பிரதமர், இந்த மக்களவையின் பதவிக் காலத்தில் மக்களின் நலனுக்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாகத் தெரிவித்தார்.
மிக அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களைக் கொண்டதற்காக நினைவில் கொள்ள வேண்டிய இந்த மக்களவையில், 44 பெண் உறுப்பினர்கள் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார். பெண் உறுப்பினர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட பிரதமர், முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் அமைச்சரவையில் இருப்பதாகவும் அதில் இரண்டு பெண் அமைச்சர்கள் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
“இந்தியாவின் தன்னம்பிக்கை முன் எப்போதும் இல்லாத உயரத்தை எட்டியிருக்கிறது. இதை ஒரு நேர்மறை சமிக்ஞையாக கருதுவதாகவும் ஏனென்றால் இது போன்ற நம்பிக்கை வளர்ச்சிக்கு உத்வேகத்தை வழங்கும்” என்றார்.
இந்தியா தற்போது 6வது மிகப்பெரிய பொருளாதாரம் என்று கூறிய பிரதமர், விரைவில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆக இருப்பதாகவும் தெரவித்தார்.
எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி, உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் சாதனைகளைக் குறிப்பிட்ட பிரதமர் “உலகம் வெப்பமயமாதல் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில், இந்த பாதிப்பை சீர் செய்வதற்கு இந்தியா சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் வடிவில் முயற்சி எடுத்திருக்கிறது” என்றார்.
அறுதிப் பெரும்பான்மை அரசாங்கத்தை அங்கீகரிப்பதால் நம்மை உலகம் கருத்தில் கொள்வதாக பிரதமர் கூறினார். இதற்கான பெருமை 2014ஆம் ஆண்டு மக்கள் தந்த முடிவையே சேரும் என்றார்.
வெளியுறவுக் கொள்கை பற்றி பேசிய பிரதமர், கடந்த ஐந்தாண்டுகளாக நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கம், மாலத்தீவுகளின் குடிநீர் பிரச்சினை, ஏமனில் குடிமக்களை மீட்பது ஆகிய மனிதாபிமான நடவடிக்கைகளில் இந்தியா பெரும் பங்காற்றியிருப்பதாகக் கூறினார். இந்தியாவின் மென்மையான ஆதிக்கத்தை கோடிட்டு காட்டிய பிரதமர், யோகா, உலக அளவில் இன்று அங்கீகரிக்கப்படுகிறது என்றும் பல நாடுகள் பாபா அம்பேத்கர் ஜெயந்தி, மகாத்மா காந்தி ஜெயந்தி ஆகியவற்றைக் கொண்டாடுகின்றன என்றும் கூறினார்.
நடந்து முடிந்த பணியைப் பட்டியலிட்ட பிரதமர், 219 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றும் இவற்றுள் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.
கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான தனது அரசின் நிலைபாட்டை வலியுறுத்திப் பேசிய பிரதமர், இந்த மக்களவை திவால் மற்றும் நொடித்து போதல் பற்றிய விதிமுறை, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் ஆகிய கடுமையான சட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகக் கூறினார்.
“இந்த மக்களவை, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றியது. சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறை இருகட்சி ஒத்துழைப்பு உணர்வை வெளிப்படுத்தியது”
ஆதார், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு, மகப்பேறு பலன்கள் ஆகியவற்றில் அரசின் முன் முயற்சிகள் பற்றியும் பிரதமர் பேசினார். 16வது மக்களவையில், தற்காலத்திற்கு தேவையற்ற 1,400 சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பெரும் முன்முயற்சியை பிரதமர் குறிப்பிட்டார்.
16வது மக்களவையை நடத்துவதில் அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் வழங்கிய ஆதரவு மற்றும் பங்களிப்பிற்கு தமது நன்றியைத் தெரிவித்து தமது உரையை பிரதமர் முடித்துக் கொண்டார்.
Several sessions in this Lok Sabha had good productivity. This is a very good sign.
— PMO India (@PMOIndia) February 13, 2019
I appreciate @MVenkaiahNaidu Ji, Late @AnanthKumar_BJP Ji for their service as Ministers for Parliamentary Affairs: PM @narendramodi in the Lok Sabha
India's self-confidence is at an all time high.
— PMO India (@PMOIndia) February 13, 2019
I consider this to be a very positive sign because such confidence gives an impetus to development: PM @narendramodi
The world is discussing global warming and India made an effort in the form of the International Solar Alliance to mitigate this menace: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 13, 2019
It is this Lok Sabha that has passed stringent laws against corruption and black money: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 13, 2019
It is this Lok Sabha that passed the GST.
— PMO India (@PMOIndia) February 13, 2019
The GST process revealed the spirit of cooperation and bipartisanship: PM @narendramodi