QuoteIndia is a land that is blessed with a rich cultural and intellectual milieu: PM
QuoteOur land is home to writers, scholars, saints and seers who have expressed themselves freely and fearlessly: PM
QuoteWhenever the history of human civilization has entered the era of knowledge, India has shown the way: PM Modi
QuoteOur Saints did things that may seem small but their impact was big and this altered the course of our history: PM
QuoteThose who inspire you, inform you, tell you the truth, teach you, show you the right way and awaken you, they are all your gurus: PM
QuoteSri Ramakrishna - the saint of social harmony & link between the ancient and the modern, says PM Narendra Modi

அனைவருக்கும் வணக்கம்.

இங்கு கூடி இருக்கும் சுவாமி நிர்வினானந்தா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ தாகூர் ராமகிருஷ்ண பரமஹம்சாவின் சீடர்கள் அனைவருக்கும் வணக்கம். ஸ்ரீ ராமகிருஷ்ண வசனாம்ருத சத்திரம் எனும் 7 நாள் நிகழ்ச்சியின் துவக்கத்தில் உங்களுடன் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

வங்காளத்தின் பெருமைமிக்க ஒருவரின் வார்த்தைகள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, இங்கு அது வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவதோடு, நாடு முழுதும் எடுத்துச் செல்லப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரே இந்தியா, வலிமைமிகு இந்தியா என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும். எளிமையான மக்களுக்கும் பெரிய குருக்களின் வார்த்தைகள் சென்று சேர வேண்டும் என்கிற உங்களின் பணி நீண்டதொரு பாரம்பரியத்தின் பகுதி.

இந்தியாவில் வாய்மொழியாக இந்த பண்பாடு பல்வேறு நூற்றாண்டுகளாக, காலமாற்றங்கள், சூழ்நிலை மாற்றங்கள் தாண்டியும் இருந்துள்ளது. ஸ்ருதிகளில் இருந்து ஸ்ம்ரிதி வரை இந்த பாரம்பரியம் வளர்ச்சி பெற்றது.

ஸ்ருதிகள், நான்கு வேதங்கள், உபனிதசங்கள் ஆகியவை தர்மாக்களின் ஊற்றாக இருக்கின்றன; இந்திய சாதுக்களால் வழிவழியாக கடத்தப்பட்ட ரகசிய ஞானம் அவை. வாய்மொழியாக பரப்பப்பட்ட ஸ்ருதிகள் தெய்வீக ஞானம் என நம்பப்படுகின்றது. நினைவு மற்றும் மொழிபெயர்ப்பு ஆகியவை சார்ந்த வார்த்தைகளே ஸ்ருதிகள்.

வேதங்களும் உபனிசதங்களும் எளிய மக்களுக்கு புரிந்துகொள்ள கடினமாக இருந்ததால், ஸ்மிரிதிகள் அவற்றை விளக்கவும், மொழிபெயர்க்கவும் ஏதுவான வகையில் கதைகளின் வாயிலாக எழுதப்பட்டன. இதன்மூலம் புராணங்கள், கவுடில்யரின் அர்தசாஸ்திரா ஆகியவை ஸ்மிரிதிகள் என புரிகிறது. ஒவ்வொருவரையும் அவருக்கேற்ற வழிமுறைகளில் சென்றடையும் முயற்சியே காலம் கடந்து நடந்து வந்தது.

எளிய மக்களை சென்று சேர தர்மத்தை அல்லது சரியான வாழ்க்கை முறையை அவர்களின் அன்றாட வாழ்வுக்கு நெருக்கமாக ஆக்க தேவை இருந்தது. கடவுளின் புகழ்பாடும் தேவர்ஷி நாரதாவை பகவத் இப்படி விளக்குகிறது.

अहो देवर्षिर्धन्योऽयं यत्कीर्तिं शांर्गधन्वन:।

गायन्माद्यन्निदं तन्त्रया रमयत्यातुरं जगत्।।

‘अहो ! ये देवर्षि नारदजी धन्य हैं जो वीणा बजाते, हरिगुण गाते और मस्त होते हुए इस दुखी संसार को आनन्दित करते रहते हैं।’

|

சாதுக்கள் இசை, கவிதை, உள்ளூர் மொழிகள் ஆகியவற்றை பயன்படுத்தி கடவுளை மக்களுக்கு நெருக்கமாக ஆக்கினார்கள்- ஜாதி, வகுப்பு, மதம், பாலினம் கடந்து அவற்றை செயல்படுத்தினார்கள்.

சாதுக்களின் செய்திகள் நாடோடிப் பாடகர்களின் வழியாக மேலும் கடத்தப்பட்டது. கபீரின் தோஹாக்கள், மீராவின் பஜனைகள் கிராம பாடகர்களின் மூலம் கிராமம் கிராமமாக பரப்பப்பட்டன. வளமான கலாச்சாரம் மற்றும் அறிவு நிறைந்த பூமியாக இந்தியா விளங்குகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள், சாதுக்கள் தங்கள் எண்ணங்களை துணிச்சலாக வெளிப்படுத்தும் நாடாக நம் நாடு விளங்குகிறது.

மனித வரலாறு எப்போது அறிவுசார் நாகரீகத்தில் நுழைந்ததோ, அப்போது இந்தியாவே வழிகாட்டியது. வெளிநாட்டினர் தான் இந்தியாவில் சமூக, அரசியல், பொருளாதார புரட்சியைஅ வித்திட வேண்டும் என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு காலனி ஆதிக்கத்தை இதை சொல்லியே நியாயப்படுத்தினார்கள். அந்தக் கருத்துகள் முற்றிலும் தவறானவை. ஏனெனில் இந்தியாவில் இருந்தே புரட்சிகள் எழுந்தது..

நம் துறவிகள், சாதுக்களினால் இந்த புரட்சி முன்னெடுக்கப்பட்டு, சமூகம் சீர்திருத்தப்பட்டது. இந்த சமூக சீர்திருத்தத்தில் அனைத்து இளைஞர்களையும் நம் சாதுக்கள் ஈடுபடுத்தினார்கள்.

யாருமே வெளியே விட்டுவிடப்படவில்லை.

அதனால் தான் நம் நாகரீகம் தடைகளை தாண்டி உயர்ந்து நிற்கிறது.

காலத்திற்கு ஏற்றவாறு மாறாத நாகரீகங்கள் மறைந்தன.

நாமோ பல பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டுள்ளோம். பல நூற்றாண்டுகளாக இருக்கும் பழக்கங்களை கூட நமக்கு ஒவ்வவில்லை என்றால் மாற்றியுள்ளோம்.

புதிய எண்ணங்களை நாம் எப்போதும் வரவேற்றே உள்ளோம். நம் வரலாறு தோறும் நம் துறவிகள் சின்னதாக வெளியில் தெரிந்தாலும் வரலாற்றையே மாற்றத்தக்க பெரிய காரியங்களை செய்திருக்கிறார்கள். எந்த நம்பிக்கை, கலாச்சாரத்திற்கு முன்பும் பெண்களை துறவறத்தில் ஏற்றுக்கொண்டது நம் நாட்டில் தான். மேலும் மிகவும் துணிச்சலாக பல கருத்துகளை எழுதினார்கள். இந்து தத்துவத்தில் நேரம் என்பது மிகவும் முக்கியமான காரண்னி. நாம் அனைவருமே காலவெளி மற்றும் நேரத்திற்கு உட்பட்டவர்கள்.

பண்டையகால தெய்வீக கருத்துக்களை காலத்திற்கேற்ப மக்களிடம் எடுத்துரைப்பது குருவின் கடமை. அதனால் ஞான நதி வற்றாமல், நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
வேதம் சொல்கிறது:

प्रेरकः सूचकश्वैव वाचको दर्शकस्तथा ।

शिक्षको बोधकश्चैव षडेते गुरवः स्मृताः ॥

கேரளாவை மாற்றியமைத்ததில் நாராயணகுருவின் பங்கு நாம் அனைவரும் அறிந்ததே. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துறவியும் ,புரட்சியாளருமான அவர் சாதி தடைகளை உடைத்து சமூகநீதியை நிலைநாட்டினார்.

சிவகிரி யாத்திரை துவங்கியபோது கல்வி, சுத்தம், பக்தி, விவசாயம், வணிகம், கைத்தறி, தொழிற்பயிற்சி ஆகியவற்றை தன் நோக்கமாக அறிவித்தார்.

|

சமூகத்தின் வளர்ச்சிக்காக இதைவிட பணியாற்றவல்ல குரு இருக்க முடியுமா?

இந்தக் கூட்டத்தில் ராமகிருஷ்ணாவைப் பற்றி பேசினால் பெருங்கடலை கையால் அள்ளியதைப் போல் இருக்கும். எனினும் நடப்பு காலத்தோடு அவரை இணைத்துப் பேசுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.


பக்தி சன்மார்க்கத்தின் அங்கமாக அவர் இருந்ததுடன், கதாம்ரிதத்தில் சைதன்ய மகாபிரபு குறித்த பல தகவல்களையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் அவர் கலாச்சாரத்தை புதுப்பித்து வலுபெறவும் செய்தார்.

சாதி, மதம் போன்று நம்மை பிரித்து வைத்திருக்கும் மனரீதியான தடைகளில் இருந்து நம்மை மீட்டார். சமூகத்தில் மகிழ்ச்சி நிலவிடச் செய்த ஞானி அவர்.

ஞானி, யோகி, பக்தர் என்ற பெயர்களில் கடவுளிடம் முழுமையாக சரணடைவதும், பொறுமையும், அர்ப்பணிப்புமே அவரது செய்திகள். “பிரம்மா என ஞானிகளால் அழைக்கப்படும் அவரேதான் – கடவுள்-, ஆத்மா – உலகளாவியா ஆன்மா என யோகிகளாலும், பகவான் என தனி மனிதர்களாலும் அழைக்கப்படுகிறார்.

இஸ்லாமிய வாழ்க்கைமுறையை வாழ்ந்தார், கிறித்தவ வாழ்க்கை முறையை வாழ்ந்தார், தந்திராக்களை பின்பற்றினார்.

தெய்வத்தை அடைய பல்வேறு வழிமுறைகள் உண்டு என்றும், அதை அர்ப்பணிப்போடு செய்தால் நிச்சயம் அடையலாம் என்றும் கண்டுணர்ந்தார்.

“உண்மை என்பது ஒன்றுதான்” என சொன்ன அவர், “பெயரிலும் உருவத்திலுமே வித்தியாசம் உள்ளது,” என்றார்.

“நீர் எப்படி பல்வேறு மொழிகளில் ஜல், நீர், பானி எனவும், ஜெர்மனில் வாசர், பிரஞ்சில் இயூ என்றும் இத்தாலியில் அக்வா என்றும் ஜப்பானிய மொழியில் மிஸு எனவும் வழங்கப்படுகிறதோ அதுபோல ”

கேரளாவில் நீங்கள் வெள்ளம் என அழைக்கிறீர்கள்.

ஆனால் எல்லாமே குறிப்பது ஒன்றே ஒன்றைதான். பேரில் தான் வேறுபாடு.

அதேபோல சிலர் அல்லா என்பார்கள், சிலர் கடவுள் என்பார்கள், சிலர் பிரம்மா என்பார்கள், சிலர் காளி, ராமா, இயேசு, துர்கா என்பார்கள். ஆனால் எல்லாம் ஒன்றுதான்.

அவரது கருத்துக்கள் மதம், சாதி ஆகியவற்றை பிரிவினைக்காக உபயோகிப்பவர்கள் நிறைந்த இந்த காலத்தில் நமக்கு தேவையானது.

”ராமகிருஷ்ணரின் வாழ்க்கை, கடவுளை நாம் நேருக்கு நேர் பார்க்க உதவுகிறது,” என்றார்.

அவர் கதையை படிக்கும் யாருக்குமே கடவுள் மட்டுமே நிஜம் என்பதும், மற்ற எல்லாமே மாயை என்பதும் விளங்கும்.

பழங்கால மற்றும் நவீன இந்தியாவுக்கு இடையில் ராமகிருஷ்ணர் பாலமாக விளங்குகிறார். பழங்கால கொள்கைகள், கருத்துகள், அனுபவங்களை எப்படி நவீன வாழ்வில் பயன்படுத்துவது என நமக்கு வழிகாட்டினார்.

எளிமையாக சொல்லப்பட்ட சில வாக்கியங்கள், செய்திகள்.

அவற்றின் எளிமையால் கேட்பவர்களின் மனதில் ஆழப்பதிந்தது. இதுபோன்றதொரு ஆசிரியர் இல்லை என்றால் நமக்கு விவேகானந்தர் கிடைத்திருப்பாரா?

தனது குருவின் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்றார் விவேகானந்தர்,

ஜத்ரா ஜீவ், தத்ர ஷிவ்- எங்கெல்லாம் உயிரினம் உள்ளதோ அங்கெல்லாம் சிவன் உள்ளார்;

என்றும்

ஜீவ தயா நொய், ஷிவ் ஞானே ஜீன் சபா- உயிரினங்களிடத்தில் அன்பு காட்டுவதல்ல, சிவனாகவே இருந்து பணிவிடை செய்வது தான் தரித்ர நாராயணனுக்கு தான் செய்யும் வாழ்நாள் அர்பணிப்பு என்றார்.

கடவுளை தேடி எங்கே போவது என்றார் விவேகானந்தர்.

ஏழைகள், பாடுபடுகின்றவர்கள், பலவீனமானவர்கள் எல்லாம் கடவுள்கள் இல்லையா? அவர்களை முதலில் வழிபடலாம். இவர்கள் உங்கள் கடவுளாக இருக்கட்டும்.

“இப்போது தேவை துணிச்சலும், பலத்துடனும் கூடிய அதிதீவிர கர்மயோகம். அப்போதுதான் இந்நாட்டின் மக்கள் எழ முடியும்.” என்றார்.

ராமகிருஷ்ண மடத்தின் சேவை அவர்களது அர்ப்பணிப்புக்கு சான்று.

ஏழைகளின் இடத்தில் சேவைகள், பழங்குடியினருக்கு பணிகள், தேவையுள்ளவர்கலுக்கு உதவிகள் என எத்தனையோ சேவைகளை செய்கிறார்கள்.

எந்த சமூகத்தை, எந்த நம்பிக்கையை, மதத்தை சேர்ந்தவர் என்பதோ முக்கியமில்லை. அவருக்கு உதவ முடியுமா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு இணையதளத்தில் அவர்களின் நோக்கம் என பிரம்மவாக்கியம் காணப்படுகிறது.

இன்று சத்திரத்தின் துவக்கத்தின் மூலம் விளக்கு ஏற்றப்பட்டுவிட்டது. இனி நம் இதயங்களெங்கும் ஒளி வீசும்.

ஸ்ரீ ஸ்ரீ தாகூர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் எல்லா விஷயங்களிலும் இறைவனை பார்க்கும் வகையில் நம்மை வழிநடத்தட்டும். ஏழைகளுக்கு சேவை செய்வதில் தன்முனைப்பு, சுயநலம் இல்லாமல் போகட்டும். இதன்மூல அனைத்து மதங்களிலும் உள்ள ஆழ்ந்த உண்மைகளை கண்டுகொள்வோம்.

நான் பின்பற்றும் போதனை இதுதான்; நாம் வேலை செய்வோம். நம் கடமைகளை ஏற்றுக்கொண்டு செவ்வனே நடைபோடுவோம்.

நிச்சயம் ஒளியைப் பார்ப்போம்.

நன்றி, வணக்கம்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Data centres to attract ₹1.6-trn investment in next five years: Report

Media Coverage

Data centres to attract ₹1.6-trn investment in next five years: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 10, 2025
July 10, 2025

From Gaganyaan to UPI – PM Modi’s India Redefines Global Innovation and Cooperation