PM Modi campaigns in Bijnor, Uttar Pradesh, urges people to vote for BJP
Shri Modi questions Samajwadi party for attacking & getting BJP workers arrested without reason
Farmer welfare is most vital for us. Our Government has brought the Pradhan Mantri Fasal Bima Yojana: PM
Chaudhary Charan Singh Kisan Kalyan Kosh would be created for farmers’ welfare, says Shri Modi
People in UP must question the SP government that what development works have been done in the state in last five years: Shri Modi

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் பிரசாரம் செய்தார். உத்தரப்பிரதேச மக்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். வரக்கூடிய தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு வாக்களிக்குமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

சமாஜ்வாதி கட்சி ஆட்சியை சாடிய திரு. மோடி, ``அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும், எந்தத் தவறும் இல்லாத நிலையிலும் பா.ஜ.க. தொண்டர்கள் கைது செய்யப் படுகிறார்கள். அரசுகள் இப்படி நடைபெற வேண்டுமா? அரசியல் எதிரிகள் மீது சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வேண்டுமா?'' என்று கேட்டார்.

ஏழைகள் மற்றும் நேர்மையாளர்களின் நலன்களை மாநிலத்தில் உள்ள சமாஜ்வாதி அரசால் காப்பாற்ற முடியவில்லை என்று அவர் புகார் கூறினார். மாநிலத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, ``மாநிலத்தில் துரதிருஷ்டவசமான கற்பழிப்பு நிகழ்வுகள் நடந்தபோது சமாஜ்வாதி தலைவர்கள் என்ன கூறினார்கள்? அதுபோன்ற தரக்குறைவான கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை'' என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியையும் திரு மோடி சாடினார். தங்கள் சுயநலத்துக்காக அவர்கள் எதையும் செய்வார்கள் என்று கூறினார். ``தங்களின் நலனுக்காக அவர்கள் எதையும் செய்வார்கள். கடந்த காலங்களில் யாருக்கு எதிராக போராடினார்களோ அதே சமாஜ்வாதி கட்சியுடனும் அவர்கள் கூட்டணி அமைப்பார்கள்'' என்று மோடி குறிப்பிட்டார்.

கரும்பு விவசாயிகளின் நலன் பா.ஜ.க. அரசுக்கு அதிமுக்கியமான விஷயம் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். ``உத்தரப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஏன் நிலுவைத் தொகைகள் கிடைக்கவில்லை? அந்த விவசாயிகளுக்கு ஏன் நியாயம் கிடைக்கவில்லை? அவர்களுடைய நிலுவைகள் தரப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்'' என்று மோடி உறுதியளித்தார்.

மத்திய அரசின் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பற்றி பிரதமர் பேசினார். ``விவசாயிகளின் நலன் எங்களுக்கு அதிமுக்கியமானது. எங்கள் அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்தது. நமது விவசாயிகளுக்கு குறைந்தபட்ச சந்தாவில் அதிகபட்ச காப்பீடு கிடைப்பதை அந்தத் திட்டம் உறுதி செய்கிறது'' என்று மோடி கூறினார்.

விவசாயிகளின் நலனுக்காக சவுத்ரி சரண்சிங் விவசாயி நல நிதித் திட்டமும் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தங்கள் நன்மைக்காக பணியாற்றாத, செயல்திறமை இல்லாத ஒரு அரசாங்கம் உத்தரப்பிரதேச மக்களுக்கு தேவையில்லை என்று திரு. மோடி கூறினார். ``மத்திய அரசில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டபோதிலும், மாநில நன்மைக்காக அவற்றை மாநில அரசு பயன்படுத்தவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று சமாஜ்வாதி கட்சி ஆட்சியிடம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்'' என்று மோடி கூறினார். ``மாநிலத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடித்த ஒரு தலைவரை மேடையில் வைத்துக் கொண்டு அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்'' என்றும் மோடி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.