PM Modi inagurates Government projects at Silvassa, distributes assistive Devices to Divyangjans
Every Indian must have access to housing facilities, says PM Modi
In less than a year, the number of beneficiaries under the Ujjwala scheme for LPG has crossed 2 crore: PM
PM Modi urges people to download the BHIM App for cashless transactions

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் சில்வசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பல்வேறு நலத் திட்டங்களை துவக்கிவைத்தார். அரசு கட்டிடங்கள், சூரிய மின் தகடுகள் திட்டம், மக்கள் மருந்தக மையங்கள், பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி சாதனங்களையும், மற்ற பயன் பொருட்களையும் விநியோகித்தார்.

இந்த விழாவில் பேசிய பிரதமர், பிரதமராக தாத்ரா மற்றும் நகர் ஹவேலிக்கு தான் வருவது இதுவே முதல் முறை எனினும் இதற்கு முன் பல முறை தான் இங்கு வந்துள்ளதாக கூறினார்.

 தான் பிரதமராக பொறுப்பேற்ற போது தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்த அறிக்கையை பெற்றதாகவும், அன்று முதல் மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கூறினார்.

வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வீட்டு வசதி அவசியமாகும் என்று கூறினார். இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் பயன் அடைபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டுக்குள் இரண்டு கோடியை தாண்டி இருக்கும் என்று கூறினார்.

 ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் கொள்ளை அடிப்பதை மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று கூறிய பிரதமர் அங்கு கூடியிருந்த பொது மக்களை பணமில்லா பரிவர்த்தனைகளுக்காக பீம் கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi